33. யுகாதிக்ருத் யுகாவர்த்தோ நைகமாயோ மஹாஶன: |
அத்ருஶ்யோSவ்யக்தரூபஸ்ச ஸஹஸ்ரஜிதனந்தஜித் ||
இந்த முப்பத்து மூன்றாவது ஸ்லோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,
300. யுகாதிக்ருத், 301. யுகாவர்த்த:, 302. நைகமாய:, 303. மஹாஶன: |
304. அத்ருஶ்ய, 305. வ்யக்தரூப:, ச, 306. ஸஹஸ்ரஜித், 307. அனந்தஜித் ||
இந்த ஸ்லோகத்தில் உள்ள திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:
300. ஓம் யுகாதிக்ருதே நம:
யுகாதே: காலபேதஸ்ய யுகங்கள் முதலிய கால வேறுபாடுகளை
கர்த்ருத்வாத் உருவாக்குவதால்
யுகாதிக்ருத் பகவான் 'யுகாதிக்ருத்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
யுகங்கள் முதலிய கால வேறுபாடுகளை உருவாக்குவதால் பகவான் 'யுகாதிக்ருத்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
யுகானாம் யுகங்களை
ஆதிம் தொடக்கத்தில்
ஆரம்பம் கரோதீதி வா துவங்கிவைக்கிறார்
யுகாதிக்ருத் எனவே பகவான் 'யுகாதிக்ருத்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அல்லது,
கல்பத்தின் தொடக்கத்தில் யுகங்களின் சுழற்சியைத் தொடங்கி வைக்கிறார்.
எனவே, பகவான் 'யுகாதிக்ருத்'
என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இதி நாம்னாம் த்ருதீயம் ஶதம் விவ்ருதம் | இத்துடன் (யுகாதிக்ருத் என்னும் இந்த திருநாமம் வரையில்) முன்னூறு திருநாமங்களின் விவரணம் முற்று பெறுகிறது.
301. ஓம் யுகாவர்த்தாய நம:
யுகானி க்ருதாதீனி 'க்ருதயுகம்' (முதலாம் யுகமான ஸத்ய அல்லது க்ருத யுகம்) தொடக்கமாக நான்கு யுகங்களை
ஆவர்த்தயதி மீண்டும், மீண்டும் வரிசை மாறாமல் சுழல விடுகிறார்
காலாத்மனேதி காலத்தின் வடிவாய்
யுகாவர்த்த: எனவே பகவான் 'யுகாவர்த்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
காலத்தின் வடிவினரான பகவான், க்ருதயுகம் முதலிய நான்கு யுகங்களை மீண்டும்,
மீண்டும் வரிசை மாறாமல் சுழல விடுகிறார். எனவே,
பகவான் 'யுகாவர்த்த:' என்ற
திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
302. ஓம் நைகமாயாய நம:
ஏகா மாயா ந வித்யதே ஒன்றல்ல அவரது மாயைகள்
பஹ்வீர்மாயா எண்ணற்ற மாயைகளை
வஹதீதி உருவாக்குகிறார்
நைகமாய: எனவே, பகவான் 'நைகமாய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவானின் மாயைகள் ஒன்றிரண்டல்ல. எண்ணிலடங்கா மாயைகளை உருவாக்குவதால் அவர் 'நைகமாய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
'ந லோபோ நஞ:'
(பாணினி ஸூத்ரம் 6.3.73)
இதி நகாரலோபோ ந பவதி இந்த பாணினியின் ஸூத்ரத்தின்படி, எதிர்மறையைக் குறிக்கும் 'நஞ' விலிருந்து 'ந'காரம் நீக்கப்படுவதில்லை
ஞகாரானுபந்தஸ்யாபி 'ஞ'காரத்தை தவிர்த்து தனியே இருப்பினும்
'ந'காரஸ்ய ப்ரதிபோதவாசினோ
வித்யமானத்வாத் 'ந'காரம் எதிர்மறையான பொருளையே குறிக்கும் என்று (நாம்) அறியவேண்டும்.
நைகமாய: என்ற திருநாமத்தை ந+ஏக+மாய என்று பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும்.
இங்கு 'ந'காரம், ஒன்றல்ல (ந ஏக:) (ஒன்றின்
எதிர்மறையான) பல என்ற பொருள் தருகிறது.
303. ஓம் மஹாஶனாய நம:
மஹத் அஶனம் அஸ்யேதி அளவிடமுடியாத அளவு உணவை உட்கொள்கிறார்
மஹாஶன: எனவே, பகவான் 'மஹாஶன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்
கல்பாந்தே கல்பத்தின் முடிவில்
ஸர்வக்ரஸனாத் அனைத்தையும் உண்கிறார்.
பகவான் மஹாகல்பத்தின் முடிவில் இந்தப்
ப்ரபஞ்சம் அனைத்தையும் உண்கிறார். எனவே,
அவர் 'மஹாஶன:' (அளவிடமுடியாத
உணவை உண்பவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ப்ரஹ்மாவின் ஒரு பகல்
பொழுது 1000 சதுர்யுகங்களால்
ஆனது (மனிதர்களின் காலக்கணக்கின்படி 432,00,00,000
(432 கோடி) வருடங்கள். அவரது
ஒரு பகல் முடியும்பொழுது பூமி, புவர்லோகம், ஸ்வர்கலோகம் (தேவர்கள் வாழும் ஸ்வர்கம்) ஆகியவை அழிகின்றன. அவரது ஒரு இரவு நேரமும் 432
கோடி வருடங்களாகும் (ஆக, ப்ரஹ்மாவின் ஒரு நாள் என்பது நம் கணக்கில் 864 கோடி
வருடங்கள்). இவ்வாறான 360 நாட்கள்
அவரது ஒரு ஆண்டு. அவ்வாறு 100 ஆண்டுகள்
ப்ரஹ்மாவின் ஆயுட்காலம் (31104000,00,00,000 ஆண்டுகள்).
ப்ரஹ்மாவின் ஆயுட்காலம் முடிந்ததும் ஈரேழு பதினான்கு உலகங்களும் (இந்தப் ப்ரபஞ்சம் முழுவதும்) பகவானால்
உட்கொள்ளப்படுகின்றன (அழிக்கப்படுகின்றன). பின்னர் 31104000,00,00,000 ஆண்டுகள் ஒன்றுமில்லாத
வெறுமையில், பரப்ரஹ்மம் மட்டுமே இருக்கிறார். பின்னர் ப்ரஹ்மாவையும், ஈரேழு பதினான்கு உலகங்களோடு
ப்ரபஞ்சத்தையும் மீண்டும் முன்போலவே படைக்கிறார். இந்த
சுழற்சி ஆரம்பம், முடிவு ஏதுமின்றி இடைவிடாது நடைபெறுகிறது
(this cycle is eternal).
304. ஓம் அத்ருஶ்யாய நம:
ஸர்வேஶாம் அனைத்து
புத்தீந்த்ரியாணாம் அறிவுப்புலன்களால் (கண், காது, மூக்கு, நாக்கு மற்றும் தோல்)
அகம்ய: அணுக இயலாதவராதலால்
அத்ருஶ்ய: பகவான் ‘அத்ருஶ்ய:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் அனைத்து அறிவுப் புலன்களாலும்
அறிய முடியாதவராய், அவற்றால் அணுக இயலாதவராய் இருக்கிறார். எனவே, அவர் ‘அத்ருஶ்ய:’
என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
305. ஓம் வ்யக்தரூபாய நம:
ஸ்தூலரூபேண மிகப் பெரிய தனது வடிவால்
வ்யக்தம் ஸ்வரூபமஸ்யேதி அவரது உருவம் நன்றாக புலப்படும் வகையில் இருப்பதால்
வ்யக்தரூப: பகவான் ‘வ்யக்தரூப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
நம் புலன்களுக்கு விஷயமாகாத இறைவன், அனைத்துமாய் விரிந்து பரந்திருக்கும் வடிவில் அனைவருக்கும் புலப்படும் வகையில் இருக்கிறார். எனவே அவர் ‘வ்யக்தரூப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஸ்வயம்ப்ரகாஶமானத்வாத் ஒளியாய் சுடர்விடுகிறார்
யோகினாம் யோகிகளுக்குள்
வ்யக்தரூப இதி வா தனது உருவில்
வ்யக்தரூப: பகவான் ‘வ்யக்தரூப:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஞானிகள் மற்றும் யோகிகளுக்குள் பகவான்
ஒளியாய் தனது இயற்கை வடிவத்தில் சுடர்விடுகிறார். எனவே, அவர் ‘வ்யக்தரூப:’ என்ற
திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
306. ஓம் ஸஹஸ்ரஜிதே நம:
ஸுராரீனாம் தேவர்களின் (மற்றும் நல்லோரின்) எதிரிகளான அஸுரர்களை
ஸஹஸ்ராணி ஆயிரக்கணக்கான
யுத்தே ஜயதீதி போர்க்களத்தில் வெல்பவராதலால்
ஸஹஸ்ரஜித் பகவான் ‘ஸஹஸ்ரஜித்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் தேவர்களின் (மற்றும் நல்லோரின்) எதிரிகளான ஆயிரக்கணக்கான அஸுரர்களை போர்க்களத்தில் வெற்றி கொள்கிறார். எனவே, அவர் ‘ஸஹஸ்ரஜித்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
307. ஓம் அனந்தஜிதே நம:
ஸர்வாணி பூதானி அனைத்து ஜீவராசிகளையும்
யுத்தக்ரீடாதிஶு போர்க்களம் மற்றும் விளையாட்டுகளில்
ஸர்வத்ராசிந்த்யஶக்திதயா சிந்தனைக்கு எட்டாத தமது சக்தியால்
ஜயதீதி வெல்கிறார்
அனந்தஜித் எனவே,
பகவான் ‘அனந்தஜித்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் (தேவாதி தேவர்கள் உட்பட) அனைத்து ஜீவராசிகளையும் போர்க்களம், மற்றும் விளையாட்டுக்களில் நம் சிந்தனைக்கு எட்டாத தமது சக்தியால் வெற்றி கொள்கிறார். எனவே, அவர் ‘அனந்தஜித்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக