ஞாயிறு, ஜூன் 06, 2021

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 181

34. இஶ்டோSவிஶிஶ்ட: ஶிஶ்டேஶ்ட: ஶிகண்டீ நஹுஶோ வ்ருஶ: |

க்ரோதஹா க்ரோதக்ருத்கர்த்தா விஶ்வபாஹுர் மஹீதர: ||

இந்த முப்பத்து நான்காவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

308. இஶ்ட:, 309. அவிஶிஶ்ட:, 31௦. ஶிஶ்டேஶ்ட:, 311. ஶிகண்டீ, 312. நஹுஶ:, 313. வ்ருஶ:|

314. க்ரோதஹா, 315. க்ரோதக்ருத்கர்த்தா, 316. விஶ்வபாஹு:, 317. மஹீதர: || 

இந்த ஸ்லோகத்தில் உள்ள திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:

308. ஓம் இஶ்டாய நம:

பரமானந்தாத்மகத்வேன ஆனந்தமே வடிவானவராய் இருப்பதால் 

ப்ரிய அனைவராலும் விரும்பப்படுகிறார் 

இஶ்ட: எனவே, பகவான் 'இஶ்ட:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

 ஆனந்தமே வடிவானவராய் இருப்பதால் அனைவராலும் விரும்பப்படுகிறார். எனவே, பகவான் 'இஶ்ட:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

யஞ்யேன வேள்விகளின் மூலம் 

பூஜித இதி வா வழிபடப்படுகிறார் 

இஶ்ட: எனவே, பகவான் 'இஶ்ட:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

வேள்விகளுக்கு ‘இஶ்ட:’ என்று பெயர். அனைத்து வேள்விகளாலும் பகவான் ஒருவரே வழிபடப்படுகிறார். எனவே, அவர் 'இஶ்ட:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

 

309. ஓம் அவிஶிஶ்டாய நம:

ஸர்வேஶாமந்தர்யாமித்வேன அனைவரின் உள்ளுறை ஆத்மாவாக இருப்பதால் 

அவிஶிஶ்ட: பகவான் 'அவிஶிஶ்ட:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

அனைவரின் உள்ளுறை ஆத்மாவாக இருப்பதால் பகவான் 'அவிஶிஶ்ட:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.


310. ஓம் ஶிஶ்டேஶ்டாய நம:

ஶிஶ்டானாம் விதுஶாம் 'ஶிஶ்டர்கள்' அதாவது கற்றரிந்தோரால் 

இஶ்ட: விரும்பப்படுகிறார் 

ஶிஶ்டேஶ்ட: எனவே, பகவான் ‘ஶிஶ்டேஶ்ட:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கற்றரிந்தோரால் (ஶிஶ்டர்களால்) விரும்பப்படுகிறார். எனவே, பகவான் ‘ஶிஶ்டேஶ்ட:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

ஶிஶ்டா கற்றறிந்தோரை (ஞானிகளை) 

இஶ்டா அஸ்யேதி வா விரும்புகிறார் 

ஶிஶ்டேஶ்ட: எனவே, பகவான் ‘ஶிஶ்டேஶ்ட:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கற்றறிந்த ஞானிகளை பகவான் மிகவும் விரும்புகிறார். எனவே, பகவான் ‘ஶிஶ்டேஶ்ட:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

‘ப்ரியோ ஹி ஞானினோSத்யர்த்தமஹம் ஸ ச மம ப்ரிய:’ (ஸ்ரீமத் பகவத்கீதை 7.17)

பகவானும் கீதையில் கூறுகிறார்: ஞானிக்கு நான் மிகவும் இனியவன்; அவன் எனக்கு மிகவும் இனியவன்.

இதி பகவத்வசனாத் இது (ஸ்ரீ பகவத் கீதையில்) பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றாகும். 

ஶிஶ்டை: அடியவர்களால் (ஶிஶ்டர்களால்) 

இஶ்ட: பூஜித இதி வா (இஶ்டி என்றால் வழிபாடு) வழிபடப்படுகிறார் 

ஶிஶ்டேஶ்ட: எனவே, பகவான் ‘ஶிஶ்டேஶ்ட:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தனது அடியவர்களால் (ஶிஶ்ட:) வழிபடப்படுகிறார் (இஶ்ட:). எனவே, பகவான் ‘ஶிஶ்டேஶ்ட:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.


311. ஓம் ஶிகண்டினே நம:

ஶிகண்ட: கலாபோSலங்காரோSஸ்யேதி மயில் தோகையால் (தனது திருமுடியை) அலங்கரித்துக் கொண்டவராதலால்  

ஶிகண்டீ: பகவான் ‘ஶிகண்டீ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார் 

யதோ கோபவேஶதர: ஏனெனில், (கண்ணனாக அவதரித்த பொழுது) அவர் இடையனின் வேடம் பூண்டிருந்தார். 

பகவான் கண்ணனாக அவதரித்த பொழுது, இடையனின் வேடம் பூண்டிருந்தார். அப்பொழுது தனது திருமுடியில் மயில் தோகை அணிந்து அலங்கரித்துக் கொண்டார். எனவே, அவர் ‘ஶிகண்டீ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஶிகண்ட என்றால் மயில் தோகை. அதை அணிந்துள்ளவர் ஶிகண்டீ.

 

312. ஓம் நஹுஶாய நம:

நஹ்யதி கட்டிவைக்கிறார் 

பூதானி அனைத்து உயிரினங்களையும் (ஜீவராசிகளையும்) 

மாயயாSதோ மாயையினால் 

நஹுஶ: பகவான் 'நஹுஶ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் அனைத்து ஜீவராசிகளையும் (உயிரினங்களையும்) மாயையினால் கட்டிவைத்துள்ளார். எனவே, அவர் 'நஹுஶ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

நஹ பந்தனே 'நஹ' என்ற வேர்ச்சொல் 'கட்டுதல்' அல்லது 'கட்டி வைத்தல்' என்ற பொருளில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

 

313. ஓம் வ்ருஶாய நம:

காமானாம் (நியாயமான) ஆசைகளை 

வர்ஶணாத் மழைபோல பொழிவிப்பதால் 

வ்ருஶ: தர்ம: அறத்திற்கு 'வ்ருஶ:' என்று பெயர். அறமே வடிவினராய் இருப்பதால் பகவான் 'வ்ருஶ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைவரின் நியாயமான ஆசைகளையும் மழைபோல பொழிவிப்பதால் (நிறைவேற்றுவதால்) அறத்தை 'வ்ருஶ:' என்று அழைக்கிறோம். பகவானே அறம். அறமே பகவான். எனவே, அவர் 'வ்ருஶ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

வ்ருஶோ ஹி பகவான்தர்ம: ஸ்ம்ருதோ லோகேஶு பாரத |

நைகுண்டகபதாயானைர்வித்தி மாம் வ்ருஶமுத்தமம் || (மஹாபாரதம் ஶாந்தி பர்வம் 342.88)

மஹாபாரதம் ஶாந்திபர்வத்தில் கூறப்பட்டுள்ளது: ஓ பரதகுலத்தோனே!!! அனைவருக்கும் நன்மை தரக்கூடிய புனிதமான தர்மத்தை 'வ்ருஶ' என்று அழைப்பார்கள். எனவே, வேதத்தின் 'நிகண்டுகளில்' (அந்த அறமே உருவான) என்னை உத்தமமான 'வ்ருஶ' என்று .அழைக்கின்றனர்.

நிகண்டு = அகராதி

 

314. ஓம் க்ரோதக்னே நம:

ஸாதூனாம் தனது அடியவர்களின் 

க்ரோதம் சினத்தை 

ஹந்தீதி அழிப்பதால் 

க்ரோதஹா பகவான் 'க்ரோதஹா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

தனது அடியவர்களின் சினத்தை அழிப்பதால் பகவான் 'க்ரோதஹா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மனிதன் விஷயங்களைக் (புலனின்பங்களைக்) கருதும்பொழுது அவற்றில் பற்றுதல் உண்டாகிறது. பற்றுதலால் விருப்பம் உண்டாகிறது. விருப்பத்தினால் சினம். (ஸ்ரீமத் பகவத்கீதை 2.62).

பகவான் சினத்தை அழிக்கிறார் என்றால், அதன் வித்தான பற்றுதலையும் சேர்த்தே அழிக்கிறார் என்று பொருள் கொள்ளவேண்டும்.

 

315. ஓம் க்ரோதக்ருத்கர்த்ரே நம:

அஸாதுஶு அறமற்ற தீயோரின் 

க்ரோதம் சினத்தை 

கரோதீதி தூண்டிவிடுகிறார் (வளர்க்கிறார்) 

க்ரோதக்ருத் எனவே, பகவான் 'க்ரோதக்ருத்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அறத்தை பின்பற்றாத தீயோரின் சினத்தைத் (அவர்கள் மென்மேலும் தவறிழைத்து துன்பப்படும்படி) தூண்டி வளர்க்கிறார். எனவே, பகவான் 'க்ரோதக்ருத்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

க்ரியத இதி கர்ம செயப்படுவது 'செயல்' என்று அழைக்கப்படுகிறது 

ஜகத்தஸ்ய (அவ்வாறு செயப்பட்டதான) இந்த உலகத்தின் 

கர்த்தா காரணமானதால் (அதை உருவாக்கியவராதலால்) பகவான் 'கர்த்தா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

செய்யப்படுவது 'செயல்' என்றும் அதை செய்பவர் 'கர்த்தா' என்றும் அழைப்பர். இந்த உலகத்தை உருவாக்கியதால் பகவான் 'கர்த்தா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

யோ வை பாலாக ஏதைஶா புருஶாணா கர்த்தா யஸ்ய வை தத்கர்ம ஸ வேதிதவ்ய (உபநிஶத் வாக்கியம்)

வேதங்கள் மற்றும் உபநிடதங்களில் கூறப்பட்டுள்ளது: ஓ பாலகனே!!! யார் இந்த புருஷர்களை (அனைத்து உயிரினங்களையும்) உருவாக்குகிறாரோ, யாரால் இங்கு அனைத்து செயல்களும் செய்யப்படுகிறதோ அவரை (அந்த பரப்ரஹ்மத்தை) அறிந்து கொள்ள வேண்டும்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன. 

க்ரோதக்ருதாம் மிகுந்த சினத்தோடு (தன்னை எதிர்க்கும்) 

தைத்யாதீனாம் அசுரர் முதலானோரை 

கர்த்தா சேதக வெட்டி அழிக்கிறார் 

க்ரோதக்ருத்கர்த்தா எனவே, பகவான் 'க்ரோதக்ருத்கர்த்தா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார் 

இத்யேகம் வா நாம இது (க்ரோதக்ருத்கர்த்தா) ஒரே திருநாமமாகும்.

மிகுந்த சினத்தோடு தன்னை எதிர்க்கும் அசுரர் முதலானோரை வெட்டி அழிக்கிறார். எனவே, பகவான் 'க்ரோதக்ருத்கர்த்தா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இங்கு கர்த்தா என்னும் சொல் வெட்டுதல் என்ற பொருளில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

முதலில் இரண்டு திருநாமங்களாக பிரித்துப் பொருளுரைத்திருந்தாலும் ஆதிசங்கரர் 'க்ரோதக்ருத்கர்த்தா' என்று ஒரே திருநாமமாகத்தான் கணக்கிட்டுள்ளார்.


316. ஓம் விஶ்வபாஹவே நம:

விஶ்வேஶாமாலம்பனத்வேன இந்தப் ப்ரபஞ்சத்திலுள்ள அனைவருக்கும் ஆதாரமாக விளங்குவதால் 

விஶ்வபாஹு: பகவான் 'விஶ்வபாஹு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் இந்தப் ப்ரபஞ்சத்திலுள்ள அனைவருக்கும் ஆதாரமாக (கீழே விழுவோரைத் தாங்கும் கைகளைப் போல) தாங்குகிறார். எனவே, அவர் 'விஶ்வபாஹு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

விஶ்வே இந்தப் ப்ரபஞ்சத்திலுள்ள அனைவரும் 

பாஹவோSஸ்யேதி அவருக்கு கரங்களாய் இருப்பதால் 

விஶ்வபாஹு: பகவான் 'விஶ்வபாஹு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

அல்லது, இந்த ப்ரபஞ்சத்திலுள்ள அனைவரும் அவரது (அவரிட்ட கடமைகளை நிறைவேற்றும்) கரங்களாய் இருப்பதால் பகவான் 'விஶ்வபாஹு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

விஶ்வதோ இந்த ப்ரபஞ்சத்தின் அனைத்து இடங்களிலும் 

பாஹவோSஸ்யேதி வா அவரது கரங்கள் உள்ளன 

விஶ்வபாஹு: எனவே, பகவான் 'விஶ்வபாஹு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் ப்ரபஞ்சம் முழுவதும் பகவானின் கரங்கள் உள்ளன. எனவே, அவர் 'விஶ்வபாஹு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'விஶ்வதோபாஹு:' (ஶ்வேதாஶ்வதர உபநிஶத் 3.3)

ஶ்வேதாஶ்வதர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:

(பரப்ரஹ்மம்) இந்தப் ப்ரபஞ்சத்திலுள்ள அனைத்து கரங்களின் உரிமையாளராவார்.

 இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

 

317. ஓம் மஹீதராய நம:

மஹீம் பூஜாம் தரணீம் வா 'மஹீ' என்றால் பூஜை அல்லது பூமி என்று பொருள் 

தரதீதி இந்த இரண்டையும் தாங்குகிறார் (நமது பூஜைகளை ஏற்றுக் கொள்வதன் மூலம் தாங்குகிறார்; பூமியை அதன் ஆதாரமாய் இருந்து தாங்குகிறார்) 

மஹீதர: எனவே பகவான் 'மஹீதர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் 'மஹீ' என்றழைக்கப்படும் பூஜைகளையும் (அவற்றை ஏற்றுக்கொள்வதன் மூலமும்), பூமியையும் (அதன் ஆதாரமாய் இருப்பதன் மூலமும்) தாங்குகிறார். எனவே அவர் 'மஹீதர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக