36. ஸ்கந்த: ஸ்கந்ததரோ துர்யோ வரதோ வாயுவாஹன: |
வாஸுதேவோ ப்ருஹத்பானுராதிதேவ: புரந்தர: ||
இந்த முப்பத்து ஆறாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,
327. ஸ்கந்த:, 328. ஸ்கந்ததர:, 329. துர்ய:, 330. வரத:, 331. வாயுவாஹன: |
332. வாஸுதேவ:, 333. ப்ருஹத்பானு:, 334. ஆதிதேவ:, 335. புரந்தர: ||
இந்த ஸ்லோகத்தில் உள்ள திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:
327. ஓம் ஸ்கந்தாய நம:
ஸ்கந்ததி 'ஸ்கந்தனம்' செய்கிறார்
அம்ருதரூபேண கச்சதி அமுதமாக பொங்கி பிரவகிக்கிறார்
வாயுரூபேண ஶோஶயதீதி காற்றின் வடிவில் உலர்த்துகிறார்
வா ஸ்கந்த: எனவே, பகவான் 'ஸ்கந்த:' என்ற திருநாமத்தால்
அழைக்கப்படுகிறார்.
அமுதமாய் பொங்கி பிரவகிக்கிறார். காற்றின் வடிவில் உலர்த்துகிறார். எனவே, பகவான் 'ஸ்கந்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஸ்கந்த என்ற சொல்லிற்கு
ப்ரவாஹம் மற்றும் உலர்த்துதல் ஆகிய பொருள்கள் உண்டு.
328. ஓம் ஸ்கந்ததராய நம:
ஸ்கந்தம் தர்மபதம் 'ஸ்கந்தம்' என்றால் அறவழி என்று பொருள்
தாரயதீதி (அந்த அறவழியை) ஏற்கிறார், தாங்குகிறார்
ஸ்கந்ததர:
எனவே பகவான் 'ஸ்கந்ததர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
'ஸ்கந்தம்' எனும் அறவழியைத் தாங்குகிறார் (அறவழியையே ஏற்கிறார்). எனவே, பகவான் 'ஸ்கந்ததர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
329. ஓம் துர்யாய நம:
துரம் வஹதி பாரத்தை சுமக்கிறார்
ஸமஸ்தபூதஜன்மாதி லக்ஷணாமிதி அனைத்து உயிரினங்களின் பிறப்பிறப்பென்னும்
துர்ய: எனவே, பகவான் 'துர்ய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் (அனைத்து உயிரினங்களின் உள்ளுறை ஆன்மாவாக இருந்து) அனைத்து உயிரினங்களின் பிறப்பிறப்பென்னும் பாரத்தை சுமக்கிறார். எனவே, அவர் 'துர்ய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
330. ஓம் வரதாய நம:
வரான் வரங்களை
ததாதீதி வாரி வழங்குவதால்
வரத: பகவான் 'வரதன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் தனது பக்தர்களுக்கு அவர்கள் விரும்பிய வரங்களை வாரி வழங்குகிறார். எனவே, அவர் 'வரதன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
வரம் காம் வரம் என்றால் பசுக்கள்
தக்ஷிணாம் ததாதீதி அவற்றை தானமாக அளிக்கிறார்
யஜமானரூபேணேதி வா வேள்விகள் மற்றும் நற்காரியங்களில் தலைவராய் (யஜமானராய்)
வரத: எனவே, பகவான் 'வரதன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் வேள்விகள் மற்றும் நற்காரியங்களின் தலைவராய் இருந்து பசுக்களை (வரங்களை) தானம் அளிக்கிறார். எனவே, அவர் 'வரதன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
'கௌர்வை வர:' வர என்றால் பசுக்கள்
இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.
331. ஓம் வாயுவாஹனாய நம:
மருத: ஸப்த ஏழு வகையான காற்றுகளை
ஆவஹாதீன் 'ஆவஹ' முதலிய
வாஹயதீதி செலுத்துவதனால் (அல்லது அந்த காற்றுகளில் பயணிக்கிறார்)
வாயுவாஹன: எனவே, பகவான் 'வாயுவாஹன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் ஆவஹ முதலிய ஏழு வகையான
காற்றுகளை செலுத்துகிறார் (அல்லது அந்த ஏழு காற்றுகளின் மூலம் பயணிக்கிறார்).
எனவே, அவர் 'வாயுவாஹன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஏழு வகையான காற்றுகள் - பூமிக்கும், மேகங்களுக்கும் இடையில் உள்ள காற்று ஆவஹ, மேகங்களுக்கு, சூரியனுக்கும் இடையில் உள்ளது ப்ரவஹ, சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் அனுவஹ, சந்திரனுக்கும் நக்ஷத்திரங்களுக்கும் இடையில் ஸம்வஹ, நக்ஷத்திரங்களுக்கும் மற்ற கிரஹங்களுக்கும் இடையில் விவஹ, கிரஹங்களுக்கும் ஸப்தரிஶி மண்டலத்திற்கும் இடையில் பராவஹ மற்றும் ஸப்தரிஶி மண்டலம் மற்றும் த்ருவ நக்ஷத்திரத்திற்கு இடையில் உள்ளது பரிவஹ எனப்படும்.
332. ஓம் வாஸுதேவாய நம:
வஸதி வசிக்கிறார்
வாஸயதி ஆச்சாதயதி மறைத்து வைக்கிறார்
ஸர்வமிதி வா அனைத்து உயிரினங்களுக்குள்ளும்
வாஸு: இவை 'வாஸு:' என்ற சொல்லிற்குப் பொருளாகும்.
தீவ்யதி 'திவ்' எனும் வேர்ச்சொல்லிற்கு க்ரீடயதி விளையாடுதல்,
விஜிகீஶதே வெற்றிகொள்ளுதல்,
வ்யவஹரதி இந்தப் ப்ரபஞ்சத்தின் அனைத்து காரியங்களையும் நடத்துதல்,
த்யௌததே ஒளிவீசுதல்,
ஸ்தூயதே துதிக்கப்பெறுதல்,
கச்சதீதி எங்கும் செல்வது என்று பொருள்.
வாஸுச்சாஸௌ 'வாஸு' வாகவும்
தேவஸ்சேதி 'தேவனாகவும்' இருப்பதனால்
வாஸுதேவ: பகவான் 'வாஸுதேவ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
'வாஸு' என்ற சொல்லிற்கு அனைத்து உயிரினங்களுக்குள்ளும் உறைதல் (வசித்தல்) மற்றும் அனைத்தையும் (தன் மாயையினால்) மறைத்து வைத்தல் என்று பொருள். 'தேவன்' என்றால் விளையாடுதல், வெற்றிபெறுதல், அனைத்து காரியங்களையும் நடத்துதல், ஒளிவீசுதல், துதிக்கப்பெறுதல் மற்றும் எங்கும் செல்லுதல் என்று பொருள். பகவான் 'வாஸு' வாகவும் தேவனாகவும் (இந்த இரண்டாலும் குறிக்கப்படும் அனைத்துப் பண்புகளையும் உடையவராக) இருப்பதால் 'வாஸுதேவ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
சாதயாமி ஜகத் ஸர்வம்
பூத்வா ஸூர்ய இவாம்ஶுபி: |
ஸர்வபூதாதிவாசஸ்ச்ச வாஸுதேவஸ்தத: ஸ்ம்ருத: || (மஹாபாரதம் ஶாந்தி பர்வம் 341.41)
மஹாபாரதம் ஶாந்தி பர்வத்தில் கூறப்பட்டுள்ளது: கதிரவனின் வடிவில் எனது கிரணங்களால் இந்த உலகனைத்தையும் மூடுகிறேன் மற்றும் அனைத்து உயிரினங்களும் உறையும் இடமாக இருக்கிறேன். எனவே, நான் 'வாஸுதேவன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறேன்.
வாஸனாத் ஸர்வபூதானாம்
வஸுத்வாத் தேவயோனித: |
வாஸுதேவஸ்ததோ வேத்ய:... || (மஹாபாரதம் உத்யோக பர்வம் 70.3)
மஹாபாரதம் உத்யோக பர்வத்தில் கூறப்பட்டுள்ளது: தனது மாயத்திரையினால் அனைத்து உயிரினங்களையும் மறைப்பதனாலும், தனது மகிமைமிக்க ப்ரகாசத்தினாலும் (ஒளியினாலும்), தேவர்களின் பிறப்பிடமாக இருப்பதனாலும் (அவர்களை தோற்றுவிப்பதாலும்) பகவான் 'வாஸுதேவன்' என்று அறியப்படுகிறார்.
இதி உத்யோக பர்வணி | இவ்வாறு மஹாபாரதம் உத்யோக பர்வத்தில் கூறப்பட்டுள்ளது.
ஸர்வத்ராஸௌ ஸமஸ்தம் ச
வஸத்யத்ரேதி வை யத: |
தத: ஸ வாஸுதேவேதி
வித்வித்பி: பரிபட்யதே || (ஸ்ரீவிஶ்ணு புராணம் 1.2.12)
ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: அந்த பரமாத்மா அனைத்து உலகங்களிலும் உள்ள அனைத்துப் பொருட்களிலும் வசிக்கிறார் (உறைகிறார்). எனவே, கற்றறிந்தோர் அவரை வாஸுதேவன் என்று அழைக்கின்றனர்.
ஸர்வாணி தத்ர பூதானி
வஸந்தி பரமாத்மனி |
பூதேஶு ச ஸ ஸர்வாத்மா
வாஸுதேவஸ்தத: ஸ்ம்ருத: || (ஸ்ரீவிஶ்ணு புராணம் 6.5.80)
ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: அனைத்து உயிரினங்களும் அந்த பரம்பொருளுக்குள் வசிக்கின்றன. அந்த பரமாத்மாவும் அனைத்து உயிரினங்களுக்குள்ளும் வசிக்கிறார். எனவே, அவர் வாஸுதேவன் என்று அழைக்கப்படுகிறார்.
இதி ச விஶ்ணு புராணே | இவ்வாறு ஸ்ரீவிஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
333. ஓம் ப்ருஹத்பானவே நம:
ப்ருஹந்தோ பானவோ யஸ்ய
சந்த்ரஸூர்யாதிகாமின: |
தைர்விஶ்வம் பாஸயதி ய: ஸ ப்ருஹத்பானுருச்யதே ||
எவருக்கு கதிரவன் மற்றும் திங்களுக்குள் செல்லக்கூடியதான மிகச்சிறந்த (மிகத் தீவிரமான) கிரணங்கள் உள்ளனவோ (எவர் அந்த கதிரவனுக்கும், திங்களுக்கும் கூட ஒளி வழங்குகிறாரோ), எவர் அந்த கிரணங்களால் அனைத்துப் ப்ரபஞ்சத்திற்கும் ஒளி வழங்குகிறாரோ அந்த பரமாத்மா 'ப்ருஹத்பானு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
334. ஓம் ஆதிதேவாய நம:
ஆதி: காரணம் அனைத்திற்கும் 'ஆதியாக' அதாவது அனைத்திற்கும் காரணமாக இருப்பதனாலும்
ச சாஸௌ மற்றும்
தேவஸ்ச்சேதி தேவனாக இருப்பதனாலும்
ஆதிதேவ: பகவான் 'ஆதிதேவ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்
த்யௌதனாதி குணவான் தேவ: (முன்பு வாஸுதேவ: என்ற திருநாமத்தில் கூறப்பட்ட) ஒளிமிக்கவர் போன்ற குணங்களால் நிறைந்தவர் 'தேவனாவார்'..
அனைத்திற்கும் மூல காரணமாக
இருப்பதனாலும் (ஆதி) தேவனாக இருப்பதாலும் பகவான் 'ஆதிதேவ:' என்ற திருநாமத்தால்
அழைக்கப்படுகிறார்.
இங்கு தேவன் என்ற சொல்லிற்கு முன்திருநாமமான வாஸுதேவ: என்பதில் கூறப்பட்ட அனைத்துப் பொருட்களையும் நாம் ஏற்றுக்கொள்ளலாம்.
335. ஓம் புரந்தராய நம:
ஸுரஶத்ரூணாம் தேவர்களின் எதிரிகளின் (அதாவது அஸுரர்களின்)
புராணாம் இருப்பிடங்களை (நகரங்களை)
தாரணாத் அழிப்பதனால்
புரந்தர: பகவான் 'புரந்தர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் தேவர்களின் எதிரிகளான அஸுரர்களின் நகரங்களை (இருப்பிடங்களை) அழிக்கிறார். எனவே, அவர் 'புரந்தர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
'வாசம்யம புரந்தரௌ ச' (பாணினி ஸூத்ரம் 6.3.69)
இதி பாணினினா நிபாதநாத் | இந்த பாணினியின் ஸூத்திரத்தின் படி 'தார' என்ற விகுதி 'தர' என்று குறுகியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக