திங்கள், ஜூன் 14, 2021

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 185

38. பத்மனாபோSரவிந்தாக்ஷ: பத்மகர்ப: ஶரீரப்ருத் |

மஹர்த்திருத்தோ வ்ருத்தாத்மா மஹாக்ஷோ கருடத்வஜ: ||

இந்த முப்பத்து எட்டாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,

346. பத்மநாப:, 347. அரவிந்தாக்ஷ:, 348. பத்மகர்ப:, 349. ஶரீரப்ருத் |

350. மஹர்த்தி:, 351. ருத்த:, 352. வ்ருத்தாத்மா, 353. மஹாக்ஷ:, 354. கருடத்வஜ: || 

இந்த ஸ்லோகத்தில் உள்ள திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்: 

346. ஓம் பத்மநாபாய நம:

பத்மஸ்ய (இதயத்) தாமரையின் 

நாபௌ மத்யே கர்ணிகாயாம் நாபிக்குள் அதாவது அதன் நடுவில் உள்ள கர்ணிகையில் 

ஸ்தித இதி வீற்றிருக்கிறார் 

பத்மநாப:  எனவே பகவான் 'பத்மநாப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் நமது இதயத்தாமரையின் நடுவில் அதன் கர்ணிகையில் வீற்றிருக்கிறார் (தியானத்தின் உயர் நிலையில் அங்கு நமக்கு அவர் காட்சி தருகிறார்). எனவே, அவர் 'பத்மநாப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

48வது திருநாமத்தில் தனது நாபியில் ஜகத் காரணமான தாமரையை உடையவர் என்று ஆச்சார்யர் உரை அளித்திருந்தார்

196வது திருநாமத்தில் தாமரையைப் போன்ற அழகிய நாபியை (தொப்புட்குழியை) உடையவர் என்று உரை அளித்திருந்தார் .

இங்கு, இதயத்தாமரையின் நடுவில் வீற்றிருக்கிறார் என்று பகவத்பாதாள் உரை அளித்துள்ளார் 

347. ஓம் அரவிந்தாஷாய நம:

அரவிந்த தாமரையை 

ஸத்ருஶே ஒத்த 

அக்ஷிணீ அஸ்யேதி அழகிய இரு திருக்கண்களை உடையவர் 

அரவிந்தாக்ஷ: எனவே பகவான் 'அரவிந்தாக்ஷ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் தாமரையை ஒத்த அழகிய இரு திருக்கண்களை உடையவராதலால் அவர் 'அரவிந்தாக்ஷ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

"பத்மநிபேக்ஷண:" என்ற 345-வது திருநாமத்திற்கும் இதே பொருள்தான். ஆனால், நாமம் வெவ்வேறாக இருப்பதால் புனருக்தி தோஷம் இல்லை. 

348. ஓம் பத்மகர்பாய நம:

பத்மஸ்ய ஹ்ருதயாக்யஸ்ய உள்ளத் தாமரையின் 

மத்யே நடுவில் 

உபாஸ்யத்வாத் (ஞான மார்க்கத்தில் தேர்ச்சி பெற்றோரால்) வணங்கப்படுகிறார் 

பத்மகர்ப: எனவே பகவான் 'பத்மகர்ப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

(ஞான மார்க்கத்தில் தேர்ச்சி பெற்றோரால் தத்தம்) இதயத் தாமரையின் நடுவில் வழிபடப்படுகிறார். எனவே, பகவான் 'பத்மகர்ப:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நம் அனைவரின் இதய கமலத்திலும் பகவான் வீற்றிருந்தாலும், த்யானத்தில் தேர்ச்சி பெற்றோரால் மட்டுமே அவரை காண இயலும். 

349. ஓம் ஶரீரப்ருதே நம:

போஶயன் ஊட்டமளித்து வளர்க்கிறார் 

அன்னரூபேண அன்னத்தின் (உணவின்) வடிவிலும் 

ப்ராணரூபேண வா மூச்சுக்காற்றின் (ப்ரணவாயுவின்) வடிவிலும் 

ஶரீரிணாம் ஶரீராணி உடல்படைத்த ஆத்மாக்களின் (உயிரினங்களின்) உடல்களை 

தாரயதீதி தாங்குகிறார் 

ஶரீரப்ருத் எனவே பகவான் 'ஶரீரப்ருத்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் உணவாகவும், ப்ரணவாயுவாகவும் அனைத்து உயிரினங்களின் உடல்களையும் ஊட்டமளித்து, வளர்த்துத் தாங்குகிறார். எனவே அவர் 'ஶரீரப்ருத்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

ஸ்வமாயையா தனது ஆச்சர்யமான மாயையினால் 

ஶரீராணி பற்பல உடல்களை (சரீரங்களை) 

பிபர்தீதி வா ஏற்றுக் கொள்கிறார் (தரிக்கிறார்) 

ஶரீரப்ருத் எனவே பகவான் 'ஶரீரப்ருத்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, தனது மாயையினால் பற்பல சரீரங்களை (உடல்களை) ஏற்கிறார் (தரிக்கிறார்). எனவே, பகவான் 'ஶரீரப்ருத்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

350. ஓம் மஹர்த்தயே நம:

மஹதீ மிகச்சிறந்த 

ருத்திர் விபூதிர் அஸ்யேதி 'ருத்தி' அதாவது செல்வச் செழிப்பு உடையவர் 

மஹர்த்தி: எனவே பகவான் 'மஹர்த்தி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் செல்வச் செழிப்பு அளவிடமுடியாதது, மிகச்சிறந்தது.  எனவே, அவர் 'மஹர்த்தி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

351. ஓம் ருத்தாய நம:

ப்ரபஞ்சரூபேண இந்தப் பிரபஞ்சத்தின் வடிவில் 

வர்த்தமானத்வாத் இருப்பதனால் 

ருத்த: பகவான் 'ருத்த:' என்ற  திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் இந்தப் பிரபஞ்சத்தின் வடிவில் இருப்பதனால் 'ருத்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

352. ஓம் வ்ருத்தாத்மனே நம:

வ்ருத்த: புராதன 'வ்ருத்த:' அதாவது மிகப் பழமையான 

ஆத்மா யஸ்யேதி ஆத்மாவாக இருப்பதால் 

வ்ருத்தாத்மா பகவான் 'வ்ருத்தாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ஒருவரே ஆதியானவர். அனைவருக்கும் முன்பே இருக்கும் அவரே மிகப் பழமையான ஆத்மாவாவார். எனவே அவர் 'வ்ருத்தாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

353. ஓம் மஹாக்ஷாய நம:

மஹதீ அக்ஷிணீ மிகச்சிறந்த திருக்கண்களை உடையவர் 

மஹாந்த்யக்ஷீணி வா அஸ்யேதி  மிகப் பெரியதான திருக்கண்களை உடையவர் 

மஹாக்ஷ: எனவே பகவான் 'மஹாக்ஷ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் மிகச்சிறந்த, மிகப் பெரியதான திருக்கண்களை உடையவர். எனவே, அவர் 'மஹாக்ஷ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

354. ஓம் கருடத்வஜாய நம:

கருடாங்கோ கருடனின் உருவம் பொரித்த 

த்வஜோ யஸ்யேதி கொடியை உடையவர் ஆதலால் 

கருடத்வஜ: பகவான் 'கருடத்வஜ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவானின் கருடனின் உருவம் பொரித்த கொடியை கொண்டுள்ளார். எனவே, அவர் 'கருடத்வஜ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கருடக் கொடி என்பது (ஸ்ரீவத்ஸம், மார்பில் திருமகள் போன்றே) பகவான் நாராயணருக்கே உரித்த அடையாளமாகும். பழமையான சங்க இலக்கிய நூலான பரிபாடலில் கூட இது குறிப்பிடப்பட்டுள்ளது (உதாரணமாக பாடல் எண். 1 - "சேவல் அம் கொடியோய்!")

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக