வெள்ளி, நவம்பர் 02, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 91

10. ஸுரேஶ: ஶரணம் ஶர்ம விஶ்வரேதா: ப்ரஜாபவ: |

அஹ: ஸம்வத்ஸரோ வ்யால: ப்ரத்யய: ஸர்வதர்ஶன: ||

இந்த பத்தாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன: 

85. ஸுரேஶ:, 86. ஶரணம், 87. ஶர்ம, 88. விஶ்வரேதா:, 89. ப்ரஜாபவ:
 |
90. அஹ:, 91. ஸம்வத்ஸர:, 92. வ்யால:, 93. ப்ரத்யய:, 94. ஸர்வதர்ஶன: ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:

87. ஓம் ஶர்மணே நம:
பரமானந்தரூபத்வாத் அளவிடற்கரியா, உயர்ந்த ஆனந்த வடிவினராய் இருப்பதால் 
ஶர்ம: பகவான் ‘ஶர்ம:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் ஆனந்தமே வடிவானவர். தன் அடியவர்களுக்கும் அளவிடற்கரியா ஆனந்தமாகிய முக்தியை அளிப்பவர். எனவே, அவர் 'ஶர்ம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

88. ஓம் விஶ்வரேதஸே நம:
விஶ்வஸ்ய இந்தப் ப்ரபஞ்சம் உருவாவதற்கு 
காரணத்வாத் காரணமாய் இருப்பதால் 
விஶ்வரேதா: பகவான் 'விஶ்வரேதா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் ப்ரபஞ்சம் உருவாவதற்கு காரணமாய் இருப்பதால் பகவான் 'விஶ்வரேதா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
எவ்வாறு ஒரு குழந்தை தந்தையின் ரேதஸிலிருந்து (வீர்யத்திலிருந்து) உருவாகிறதோ, அவ்வாறே, இந்தப் ப்ரபஞ்சம் முழுவதும், பகவானின் சக்தியிலிருந்து தோன்றுகிறது. எனவே, பகவான், விஶ்வரேதா என்று அழைக்கப்படுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக