வியாழன், நவம்பர் 15, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 94

10. ஸுரேஶ: ஶரணம் ஶர்ம விஶ்வரேதா: ப்ரஜாபவ: |

அஹ: ஸம்வத்ஸரோ வ்யால: ப்ரத்யய: ஸர்வதர்ஶன: ||

இந்த பத்தாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன: 
85. ஸுரேஶ:, 86. ஶரணம், 87. ஶர்ம, 88. விஶ்வரேதா:, 89. ப்ரஜாபவ:
    |
90. அஹ:, 91. ஸம்வத்ஸர:, 92. வ்யால:, 93. ப்ரத்யய:, 94. ஸர்வதர்ஶன: ||

இந்த ஸ்லோகத்தில் மீதம் உள்ள 2 திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:

93. ஓம் ப்ரத்யயாய நம:
ப்ரதி இதி: 'ப்ரதி' என்றால் 
ப்ரக்ஞ்யா அறிவு மயமானவர் என்று பொருள் 
ப்ரத்யய: அந்த அறிவு மயமான பரம்பொருள் 'ப்ரத்யய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அறிவுமயமாகவே இருப்பதால் பகவான் 'ப்ரத்யய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'ப்ரக்ஞானம் ப்ரஹ்ம' (ஐத்ரேய உபநிஶத் 3.5.3)
ஐத்ரேய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:
அறிவே ப்ரஹ்மமாகும் (பரம்பொருளாகும்).

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

94. ஓம் ஸர்வதர்ஶனாய நம:
ஸர்வாணி அனைவரும் 
தர்ஶனாத்மகானி அக்ஷிணி அவருடைய பார்ப்பதற்குரிய கண்களாக இருப்பதால் 
யஸ்ய ஸ பகவான் 
ஸர்வதர்ஶன: 'ஸர்வதர்ஶன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார் 
ஸர்வாத்மகத்வாத் அவர் அனைவருக்குள்ளும் உறையும் அந்தராத்மாவானபடியால்.

பகவான் அனைவருக்குள்ளும் உறையும் அந்தராத்மாவாக இருக்கிறார். எனவே, அனைத்து ஜீவராசிகளின் மூலமாக அவர் அனைத்தையும் காண்கிறார். இவ்வாறு, அனைத்தும், அனைவரும் அவருக்கு கண்களாக இருப்பதால் பகவான் 'ஸர்வதர்ஶன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'விஸ்வதஸ்சக்ஷு:' (ஶ்வேதாஶ்வதர உபநிஶத் 4.4.19)
ஶ்வேதாஶ்வதர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: (அந்த பரப்ரஹ்மத்திற்கு) எங்கும் கண்கள் இருக்கின்றன.

'விஶ்வாக்ஷம்' (நாராயண உபநிஶத் 13.1)
நாராயண உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அனைத்துமே அவரது கண்கள்

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக