ஞாயிறு, நவம்பர் 11, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 93

10. ஸுரேஶ: ஶரணம் ஶர்ம விஶ்வரேதா: ப்ரஜாபவ: |

அஹ: ஸம்வத்ஸரோ வ்யால: ப்ரத்யய: ஸர்வதர்ஶன: ||

இந்த பத்தாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன: 

85. ஸுரேஶ:, 86. ஶரணம், 87. ஶர்ம, 88. விஶ்வரேதா:, 89. ப்ரஜாபவ:
   |
90. அஹ:, 91. ஸம்வத்ஸர:, 92. வ்யால:, 93. ப்ரத்யய:, 94. ஸர்வதர்ஶன: ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:

91. ஓம் ஸம்வத்ஸராய நம:
காலாத்மனா ஸ்திதோ காலத்தின் உருவில் 
விஶ்ணு: பகவான் விஶ்ணு இருப்பதால் 
ஸம்வத்ஸர: அவர் 'ஸம்வத்ஸர' என்ற திருநாமத்தால் 
இத்யுக்த: அழைக்கப்படுகிறார்.

பகவான் விஶ்ணு காலத்தின் உருவில் இருப்பதால் அவர் 'ஸம்வத்ஸர' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

92. ஓம் வ்யாலாய நம:
வ்யாலவத் ஒரு பாம்பினைப்போல 
க்ரஹீதும் அவரைப் பிடிப்பதற்கு 
அஶக்யத்வாத் இயலாதவராக இருப்பதால் 
வ்யால: பகவான் 'வ்யால:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஒரு பாம்பு வளைந்து, நெளிந்து வேகமாக நம் பிடிக்குள் விழாது செல்வதைப்போல பகவானும் எவருக்கும் எளிதில் வசப்படுவதில்லை. எனவே, பகவான் 'வ்யால:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
வ்யால என்ற சொல்லிற்கு பாம்பு என்பது நேரிடைப்பொருள். இங்கு, ஆச்சார்யர் பகவானுக்கு பாம்பைப் போன்று எவருக்கும் எளிதில் வசப்படாத குணத்தை வைத்துப் பொருள் உரைக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக