ஞாயிறு, நவம்பர் 04, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 92

10. ஸுரேஶ: ஶரணம் ஶர்ம விஶ்வரேதா: ப்ரஜாபவ: |

அஹ: ஸம்வத்ஸரோ வ்யால: ப்ரத்யய: ஸர்வதர்ஶன: ||

இந்த பத்தாவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன: 

85. ஸுரேஶ:, 86. ஶரணம், 87. ஶர்ம, 88. விஶ்வரேதா:, 89. ப்ரஜாபவ:
  |
90. அஹ:, 91. ஸம்வத்ஸர:, 92. வ்யால:, 93. ப்ரத்யய:, 94. ஸர்வதர்ஶன: ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:

89. ஓம் ப்ரஜாபவாய நம:
ஸர்வா: ப்ரஜா அனைத்து ஜீவராசிகளும் 
யத்ஸகாஶாதுத்பவந்தி அவரிடமிருந்தே உருவாகின்றதால் 
ப்ரஜாபவ: பகவான் 'ப்ரஜாபவ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து ஜீவராசிகளும் அவரிடமிருந்தே உருவாகின்றதால் பகவான் 'ப்ரஜாபவ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

90. ஓம் அஹ்னே நம:
ப்ரகாஶரூபத்வாத் மிகுந்த ஒளி படைத்தவராக இருப்பதால் 
அஹ: பகவான் 'அஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மிகுந்த ஒளி படைத்தவராக இருப்பதால் பகவான் 'அஹ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக