செவ்வாய், நவம்பர் 27, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 97

11. அஜ: ஸர்வேஶ்வர: ஸித்த: ஸித்தி: ஸர்வாதிரச்யுத:

வ்ருஶாகபிரமேயாத்மா ஸர்வயோகவிநி:ஸ்ருத: ||

இந்த பதினொன்றாவது ஸ்லோகத்தில் ஒன்பது (9) திருநாமங்கள் உள்ளன. அவையாவன: 

95. அஜ:, 96. ஸர்வேஶ்வர:, 97. ஸித்த:, 98. ஸித்தி:, 99. ஸர்வாதி:, 100. அச்யுத:
  |
101. வ்ருஶாகபி:, 102. அமேயாத்மா, 103. ஸர்வயோகவிநி:ஸ்ருத: ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:

97. ஓம் ஸித்தாய நம:
நித்ய எக்காலத்திலும் (என்றென்றும்
நிஶ்பின்ன ரூபத்வாத் முழுமையானவராகவும், பூரணமானவராகவும், குறைபாடற்றவராகவும் இருப்பதால் 
ஸித்த: பகவான் 'ஸித்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பகவான் எக்காலத்திலும், எல்லாவற்றிலும் முழுமையானவராகவும், அனைத்தையும் அடையப்பெற்றவராகவும், குறைபாடுகள் அற்றவராகவும் இருப்பதால் அவர் 'ஸித்த:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஸித்தி என்றால் அடையப்படக்கூடியவை. ஸித்தன் என்றால் அவை அனைத்தையும் அடைந்தவர் என்று பொருள். பகவான் அனைத்தையும் எல்லா காலங்களிலும், முழுமையாக அடைந்துள்ளதால் அவர் ஸித்த: என்று அழைக்கப்படுகிறார்.

98. ஓம் ஸித்தயே நம:
ஸர்வவஸ்துஶு அனைத்துப் பொருட்களிலும் (அனைவருக்குள்ளும்)
ஸம்வித்ரூபத்வாத் ஞான வடிவாய் இருப்பதாலும் 
நிரதிஶயரூபத்வாத் அனைத்திலும் சிறந்தவராய் இருப்பதாலும்
ஃபலரூபத்வாத் வா அனைவருக்கும் அவரவரது வினைப்பயங்களுக்கு ஏற்ப அடையப்படக்கூடிய பலனாயும் இருப்பதால் 
ஸித்தி: பகவான் ' ஸித்தி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

ஸ்வர்காதீனாம் சுவர்க்கலோகம் முதலிய பலன்கள் 
வினாஶித்வாத் நிரந்தரமானவை அல்ல; அவை (கல்பத்தின் முடிவில்) அழியக்கூடியவை 
அஃபலத்வம் எனவே, அவை உண்மையில் பலன்களே அல்ல (பகவானே அடையத் தகுந்த, நிரந்தர பலனாவார். மற்றவை எல்லாம் அழியக்கூடியவை. அவற்றில் பற்றுக் கொள்ளுதல் கூடாது என்பதே இந்த வாக்கியத்தின் தாத்பர்யமாகும்).

பகவானே அனைத்து பொருட்களுக்குள்ளும் (அனைவருக்குள்ளும்) ஞான வடிவானவராய், அனைத்திலும் சிறந்தவராய், அனைவராலும் அவரவரது வினைகளுக்கேற்ப அடையக்கூடிய பலனாயும் இருக்கிறார். எனவே, அவர் 'ஸித்தி:' (அடையக்கூடிய இலக்கு) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். நாம் அனைவரும் அழியக்கூடிய சுவர்க்கம் முதலிய பலன்களில் பற்று வைக்காது, அழியாத, சிறந்த பலனாகிய பகவானிடமே பற்றுக் கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக