சனி, நவம்பர் 24, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 96

11. அஜ: ஸர்வேஶ்வர: ஸித்த: ஸித்தி: ஸர்வாதிரச்யுத: |

வ்ருஶாகபிரமேயாத்மா ஸர்வயோகவிநி:ஸ்ருத:  ||

இந்த பதினோராவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன: 
95. அஜ:, 96. ஸர்வேஶ்வர:, 97. ஸித்த:, 98. ஸித்தி:, 99. ஸர்வாதி:, 100. அச்யுத:
 |
101. வ்ருஶாகபி:, 102. அமேயாத்மா, 103. ஸர்வயோகவிநி:ஸ்ருத: ||

இந்த ஸ்லோகத்தில் ஒன்பது திருநாமங்கள் உள்ளன. அவற்றில் சில திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:

95. ஓம் அஜாய நம:
ந ஜாயத எவர் பிறப்பதே இல்லையோ 
இதி அஜ: அந்த பகவான் 'அஜ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பரப்ரஹ்மமான பகவான் எப்பொழுதும் இருக்கிறார். எனவே, அவர் பிறப்பதில்லை. இவ்வாறு, பிறப்பே இல்லாத பகவான் 'அஜ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'ந ஜாதோ ந ஜனிஶ்யதே'
(பரப்ரஹ்மம்) முன்னர் பிறந்ததுமில்லை; இனி பிறக்கப்போவதுமில்லை.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

ந ஹி ஜாதோ ந ஜாயோSஹ ந ஜனிஶ்யே கதாசன |
க்ஷேத்ரக்ஞய: ஸர்வ பூதானா தஸ்மாதஹமஜ: ஸ்ம்ருத: || 
(ஶாந்தி பர்வம் 342.74)
நான் முன்பு பிறந்தேனுமல்ல; இப்பொழுது பிறக்கவுமில்லை; இனி ஒருகாலத்திலும் பிறக்கப்போவதுமில்லை. நான் அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் உறைகிறேன். அவற்றை (அந்த ஜீவராசிகளை) அறிகிறேன். எனவே, என்னை 'அஜ:' (பிறப்பற்றவன்) என்று கூறுகிறார்கள்.

இதி மஹாபாரதே | இவ்வாறு மஹாபாரதத்தில் (ஶாந்தி பர்வத்தில்) கூறப்பட்டுள்ளது.

96. ஓம் ஸர்வேஶ்வராய நம:
ஸர்வேஶாம் அனைத்து 
ஈஶ்வராணாம் ஈஶ்வரர்களுக்கும் (அனைவரையும் ஆள்பவர்களுக்கும்)
ஈஶ்வர: ஈஶ்வரனாக இருப்பதால் (அந்த ஈஶ்வரர்களையும் ஆள்பவராக இருப்பதால்
ஸர்வேஶ்வர: பகவான் 'ஸர்வேஶ்வர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

உலகில் சாதாரணமாக தலைவர்கள், அரசர்கள் முதலியோரைக் காண்கிறோம். இவர்கள் அனைவரும், தத்தம் ஆளுகைக்குட்பட்ட இடங்களுக்கு ஈஶ்வரர்கள் ஆவர். இவ்வாறு, ப்ரபஞ்சம் அனைத்திலும் கூட பல ஈஶ்வரர்கள் இருக்கிறார்கள். இத்தகைய ஈஶ்வரர்கள் அனைவரையும் அடக்கி ஆள்பவராக இருப்பதால், பகவான் 'ஸர்வேஶ்வர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்

'ஏஶ ஸர்வேஶ்வர:’ (மாண்டூக்ய உபநிஶத் 6)
இவர் (பரப்ரஹ்மம்) அனைத்தையும் ஆள்பவர்.

இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

1 கருத்து:

  1. Dear sir, thank you very much for your great work on Visnu sahasranama. I wanted to see all the slokas that you have translated, but could not collect them. Could you please let me know the link for the same? Thank you again.
    Selvaraj. 7092529191.

    பதிலளிநீக்கு