சனி, ஜூலை 28, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 71

6.  அப்ரமேயோ ஹ்ருஶீகேஶ: பத்மநாபோS(அ)மரப்ரபு: |
விஶ்வகர்மா மனுஸ்த்வஶ்டா ஸ்தவிஶ்ட: ஸ்தவிரோ த்ருவ: ||

இந்த ஆறாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன: 

46. அப்ரமேய:, 47. ஹ்ருஶீகேஶ:, 48. பத்மநாப:, 49. அமரப்ரபு: |
50. விஶ்வகர்மா, 51. மனு:, 52. த்வஶ்டா, 53. ஸ்தவிஶ்: 54. ஸ்தவிரோ த்ருவ: ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களின் விளக்கம்:


47. ஓம் ஹ்ருஶீகேஶாய நம:
ஹ்ருஶீகாணிந்த்ரியாணி 'ஹ்ருஷீகம்' என்றால் இந்த்ரியங்கள் தேஶாம் : அவற்றை அடக்கி ஆள்கிறார் க்ஷேத்ரஞ ரூபபாக் (அனைத்திலும் உள்ளுறைந்து) அனைத்தையும் உள்ளபடி அறிவதால் ஹ்ருஶீகேஶ: அவர் 'ஹ்ருஶீகேஶன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து உடல்களுக்குள்ளும் உள்ளுறைந்து, அனைத்து உடல்களையும் உள்ளபடி அறிவதால் அவர் புலன்களை ஆள்கிறார். எனவே, பகவான் 'ஹ்ருஶீகேஶன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

யத்வா அல்லது இந்த்ரியாணி புலன்கள் யஸ்ய எவரின் வஶே கட்டுப்பாட்டுக்குள் வர்த்தந்தே உள்ளதோ ஸ பரமாத்மா அந்தப் பரம்பொருள் ஹ்ருஶீகேஶ:  'ஹ்ருஶீகேஶன்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அல்லது, புலன்கள் எவரின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதோ அந்தப் பரம்பொருள் 'ஹ்ருஶீகேஶன்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

யஸ்ய வா அல்லது ஸூர்யரூபஸ்ய கதிரவனின் வடிவிலும் சந்த்ரரூபஸ்ய குளிர்நிலவின் வடிவிலும் ஜகத்ப்ரீதிகரா உலகத்தவருக்கு மகிழ்ச்சியை உண்டாக்குவதால் ஹ்ருஶ்டா: ஹ்ருஷ்டா என்றால் மகிழ்ச்சி கேஶா தனது கிரணங்களால் ரஶ்மய: 'ரஶ்மி' என்றால் கிரணங்கள் அவர் ஹ்ருஶீகேஶ: அவர் 'ஹ்ருஶீகேஶன்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கதிரவனின் வடிவிலும் குளிர்நிலவின் வடிவிலும், தனது கிரணங்களால் உலகத்தவருக்கு மகிழ்ச்சியை உண்டாக்குவதால் பகவான் 'ஹ்ருஷீகேஷன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'ஸூர்யரஸ்மிர்ஹரிகேஶ: புரஸ்தாத்'
கதிரவனின் முன்னே பகவான் ஹரியின் ஒளிக்கிரணங்கள் (கேஶ) உள்ளன.
இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

ப்ருஶோதராதித்வாத்ஸாதுத்வம் | (ஹ்ருஶ்டகேஶம் என்னும் இடத்தில்) ஹ்ருஶீகேஶன் என்ற பெயர் ப்ருஶோதராதி ஸூத்திரத்தின் மூலம் கிடைக்கிறது.

ப்ருஶோதராதி ஸூத்ரம்: எவரேனும் பெரியவர் ஒருவர் ஒரு பெயரையோ, சொல்லையோ குறிப்பிட்ட பொருளில் பயன்படுத்தி இருந்தால், அந்த சொல் இலக்கண முறைப்படி அமையாது இருப்பினும், முன்னோர் கூறிய வடிவிலும், பொருளிலுமேயே நாம் பயன்படுத்த வேண்டும்.

யதோக்தம் மோக்ஷதர்மே | எவ்வாறு மோக்ஷதர்மத்தில் முன்பே கூறப்பட்டுள்ளதோ,

ஸூர்யாசந்த்ரமஸௌ சஷ்வதம்ஶுபி: கேஶஸம்ஞிதை: |
போதயன் ஸ்வாபயம்ஸ்சைவ ஜகதுத்திஶ்டதே ப்ருதக் ||
(மஹாபாரதம் ஶாந்தி பர்வம் 342.66)
மஹாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது: கதிரவனும், திங்களும் தங்களுடைய “கேஶ” என்னும் கிரணங்களால் இந்த உலக மக்களை துயில் எழுப்பியும், துயிலுறச் செய்தும் (அந்தக் கிரணங்களிலிருந்து) வேறுபட்டு உதிக்கின்றன.

போதனாத்ஸ்வாபனாஸ்சைவ ஜகதோ ஹர்ஶணம் பவேத் |
அக்னிஶோமக்ருதைரேவம் கர்மபி: பாண்டுநந்தன ||
ஹ்ருஶீகேஶோ மஹேஶானோ வரதோ லோகபாவன: ||
(மஹாபாரதம் சாந்தி பர்வம் 342.67)
மஹாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது: மக்களைத் துயிலெழுப்பியும், துயிலுறச்செய்தும் அவர்களை (கதிரவனும், திங்களும்) மகிழச் செய்கின்றனர். ஒ பாண்டுவின் மைந்தனே!!! இவ்வாறு, தீயையும் (இது கதிரவனுக்கு அடைமொழி), திங்களையும் தத்தம் கடமைகளைச் செய்விப்பதால் இந்தப் பிரபஞ்சத்தின் காரணமாய், அனைவருக்கும் வரங்களை வழங்குபவரான அந்த பரம்பொருளை ‘ஹ்ருஷீகேஷன்’ என்று அழைக்கின்றனர்.

இதி | இவ்வாறு (பகவான் ஹ்ருஶீகேஶன் என்று அழைக்கப்படுகிறார்).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக