வெள்ளி, ஜூலை 20, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 68

5. ஸ்வயம்பூ: ஶம்புராதித்ய: புஶ்கராக்ஷோ மஹாஸ்வன: |
அனாதிநிதனோ தாதா விதாதா தாதுருத்தம: ||

இந்த ஐந்தாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன: 

37. ஸ்வயம்பூ: 38. ஶம்பு: 39. ஆதித்ய: 40. புஶ்கராக்ஷ: 41. மஹாஸ்வன: |
42. அநாதிநிதன: 43. தாதா 44. விதாதா 45. தாதுருத்தம: ||

இந்த ஸ்லோகத்தில் வரும் கடைசி திருநாமத்தின் விளக்கம் :


45. ஓம் தாதவ உத்தமாய நம:
அனந்தாதீனாமபி ஆதிசேஷன் முதலானவர்களையும் தாரகத்வாத் தாங்குபவர் விஶேஶேண குறிப்பாக, அவர்களுக்குத் தாங்கும் சக்தியைத் ததாதீதி வா தருபவர் தாதுருத்தம இதி 'தாதுருத்தம' என்று அழைக்கப்படுகிறார் நாமைகம் இது ஒரே திருநாமமாகும் விஶேஶேணம் பகவானின் தனிப்பட்ட சக்தியால் ஸமானாதிகரண்யேன முன்னர் கூறப்பட்ட (தாதா என்ற) திருநாமத்துடன் தொடர்புடையதாகப் பொருள் கொள்ளவேண்டும்.

ஸர்வதாதுப்ய: (இந்த ப்ரபஞ்சத்தையும், அதிலுள்ளவைகளையும் தாங்கும் ஆதிசேஷன் முதலான) அனைத்துத் தாதுக்களைக் (தாங்குபவர்களைக்) காட்டிலும் ப்ருதிவ்யாதிப்ய: பூமி முதலானவைகளைக் காட்டிலும் உத்க்ருஷ்டஸ்சித்தாதுரித்யர்த்த: சிறந்தவர் என்பதே இந்த திருநாமத்தின் தேர்ந்த பொருளாகும்.

(முன்னர் தாதா என்ற திருநாமத்தில் கூறப்பட்டுள்ள) ஆதிசேஷன் முதலானோருக்கும் (பிரபஞ்சத்தை) தாங்கும் சக்தியை அளித்து, அவர்களையும் (அந்த சக்தியை அளிப்பதன் மூலம்) தாங்குவதால் பகவான் 'தாதுருத்தம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஆதிசேஷன், பூமி முதலானோர் 'தாதா'; அவர்களையும் தாங்குவதால் பகவான் தாதுக்களில் சிறந்தவர், 'தாதுருத்தம:’.

தாதுர் அனைத்தையும் படைக்கும் விரிஞ்சேருத்க்ருஶ்ட (விரிஞ்சேர் உத்க்ருஶ்ட) (நான்முகக்கடவுள்) ப்ரஹ்மாவை விட மேலானவர் (தாதுருத்தம:) இதி வா வையதிகரண்யேன இவ்வாறு, மேலே கூறப்பட்ட (தாதா என்ற) திருநாமத்துடன் தொடர்பு கொள்ளாமல், இந்த திருநாமத்திற்கு இவ்வாறும் பொருள் கொள்ளலாம்.

(முன்னர் கூறப்பட்ட தாதா என்ற திருநாமத்துடன் சேர்க்காமல் தனித்துப் பொருள் கொண்டால்): அனைத்தையும் படைக்கும் (இந்த உலகில் உள்ள அனைத்திற்கும் மூல காரணமாய் இருக்கும்) நான்முகக் கடவுளாகிய ப்ரஹ்மாவைக் காட்டிலும் உயர்ந்தவர் என்பதால் பகவான் 'தாதுருத்தம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நாமத்வயம் வா அல்லது (தாது, உத்தம என்று) இரண்டு திருநாமங்களாகக் கொண்டால்;

கார்யகாரணப்ரபஞ்சதாரணாச்சிதேவ இந்த ப்ரபஞ்சம் அனைத்திற்கும் காரணமாகவும், அதில் நடைபெறும் செயல்களாகவும் உள்ள அறிவாக இருப்பதால் தாது: அவர் தாது (அனைத்திற்கும் காரணம்) என்று அழைக்கப்படுகிறார்.

இந்த ப்ரபஞ்சத்தின் காரணமாகவும் அதில் நடைபெறும் அனைத்துக் காரியங்களாகவும் அறிவின் வடிவாக பகவானே இருப்பதால் அவர் தாது என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அத்வைதத்தின் படி பரப்ரஹ்மம் ஒன்றே தத்துவம். இந்த ப்ரபஞ்சம் அனைத்துமே அந்த ப்ரஹ்மம் மாயையில் பட்டு ப்ரதிபலிப்பதால் உருவாகிறது. இந்த ப்ரஹ்மம் சின்மயமாக (அறிவு வடிவாக) உள்ளது.

உத்தம: ஸர்வேஷாம் அனைத்து உத்கதானாம் சிறப்புடையவர்கள் மற்றும் சிறந்த பதார்த்தங்களைக் காட்டிலும் அதிஶயேனோத்கதத்வாத் மிகச்சிறந்தவரானபடியால் உத்தம: அவர் 'உத்தமர்' என்று அழைக்கப்படுகிறார்.

அனைவரையும், அனைத்தையும் காட்டிலும் சிறந்தவரானபடியால் பகவான் ' உத்தமர்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக