ஞாயிறு, ஜூலை 29, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 72

6.  அப்ரமேயோ ஹ்ருஶீகேஶ: பத்மநாபோS(அ)மரப்ரபு: |
விஶ்வகர்மா மனுஸ்த்வஶ்டா ஸ்தவிஶ்ட: ஸ்தவிரோ த்ருவ: ||

இந்த ஆறாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன: 

46. அப்ரமேய:, 47. ஹ்ருஶீகேஶ:, 48. பத்மநாப:, 49. அமரப்ரபு: |
50. விஶ்வகர்மா, 51. மனு:, 52. த்வஶ்டா, 53. ஸ்தவிஶ்: 54. ஸ்தவிரோ த்ருவ: ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள சில திருநாமங்களின் விளக்கம்:


48. ஓம் பத்மநாபாய நம:
ஸர்வஜகத்காரணம் அனைத்துலகின் தோன்றுமிடமாக பத்மம் தாமரை நாபௌ யஸ்ய எவருடைய தொப்புளில் இருக்கிறதோ பத்மநாப: அவர் 'பத்மநாபன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்துலகின் பிறப்பிடமாகவும், தோற்றுவாயாகவும் உள்ளத் தாமரை எவருடைய தொப்புளிலிருந்து எழுகிறதோ, அந்த பகவான் ‘பத்மநாபன்’ என்றத் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'அஜஸ்ய நாபாவத்யேகமர்பிதம்'
பிறப்பற்ற (அந்தப் பரம்பொருளின்) தொப்புளில் ஒன்று (ஒரு தாமரை) உள்ளது.

இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.

ப்ருஶோதராதித்வாத்ஸாதுத்வம் | (பத்மநாபி என்னும் இடத்தில்) பத்மநாபன் என்ற பெயர் ப்ருஶோதராதி சூத்திரத்தின் மூலம் கிடைக்கிறது.

49. ஓம் அமரப்ரபவே நம:
அமரானாம் தேவர்களின் ப்ரபு: தலைவர் அமரப்ரபு: பகவான் 'அமரப்ரபு' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அனைத்து தேவர்களின் தலைவராக இருப்பதால், பகவான் ‘அமரப்ரபு’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக