செவ்வாய், ஜூலை 10, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 64

5. ஸ்வயம்பூ: ஶம்புராதித்ய: புஷ்கராக்ஷோ மஹாஸ்வன: |
அனாதிநிதனோ தாதா விதாதா தாதுருத்தம: ||

இந்த ஐந்தாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன: 

37. ஸ்வயம்பூ: 38. ஶம்பு: 39. ஆதித்ய: 40. புஷ்கராக்ஷ: 41. மஹாஸ்வன: |
42. அநாதிநிதன: 43. தாதா 44. விதாதா 45. தாதுருத்தம: ||

இந்த திருநாமங்களின் விளக்கம்:

37. ஓம் ஸ்வயம்புவே நம:
ஸ்வயமேவ (தான் மட்டும்) தனியொருவராய் பவதீதி இருப்பதால் ஸ்வயம்பூ: அவர் 'ஸ்வயம்பூ' என்று அழைக்கப்படுகிறார்.

(வேறொரு காரணமின்றி, தான் மட்டும்) தனியொருவராய் இருப்பதால், பகவான் 'ஸ்வயம்பூ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'ஸ ஏவ ஸ்வயமுத்பபௌ' (மனு ஸ்ம்ரிதி 1.7)
மனுஸ்ம்ரிதியில் மனு பகவான் கூறுகிறார்: அவர் தானே (தன்னிச்சையாலே) வெளிப்பட்டார்

இதி இவ்வாறு மானவம் வசனம் மனு மனுஸ்ம்ரிதியில் கூறியுள்ளார் |

ஸர்வேஶாமுபரி அனைவருக்கும் மேலே பவதி இருப்பதாலும் ஸ்வயம் பவதீதி வா தன்னிச்சையால் தோன்றுவதாலும் ஸ்வயம்பூ: அவர் 'ஸ்வயம்பூ' என்று அழைக்கப்படுகிறார்.

அனைவருக்கும் மேலே இருப்பதாலும், தன்னிச்சையால் தோன்றுவதாலும் பகவான் 'ஸ்வயம்பூ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

யேஶாமுபரி பவதி எவருக்கு மேலானவரோ (ஜீவாத்மா) யஸ்சோபரி பவதி எவர் மேலானவரோ (பரமாத்மா) ததுபயாத்மனா இப்படி இருவாறாகவும் ஸ்வயமேவ அவரே பவதீதி வா தோன்றுவதால் ஸ்வயம்பூ: அவர் ' ஸ்வயம்பூ' என்று அழைக்கப்படுகிறார்.

எவருக்கு மேலானவரோ (ஜீவாத்மாவும் அவரே), எவர் மேலானவரோ (ஜீவாத்மாவிற்கு மேலானவரும் அவரே), இப்படி இருவாறாகவும் அவரே தோன்றுவதால் பகவான் 'ஸ்வயம்பூ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

பரிபூ: ஸ்வயம்பூ: (ஈசாவாஸ்ய உபநிஶத் 8)
ஈசாவாஸ்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: எல்லாமாக இருப்பவர்; தானே தோன்றியவர்.

இதி மந்த்ரவர்ணாத் இந்த மந்திரத்தின் படி அதவா அல்லது ஸ்வயம்பூ: ஸ்வயம்பூ என்றால் பரமேஶ்வர: அந்த பரம்பொருள் ஸ்வயமேவ தன்னிச்சையாலே ஸ்வதந்த்ரோ சுதந்திரமாக பவதி இருப்பவர் ந பரதந்த்ர: (என்றுமே) பிறருக்கு அடங்கி இருப்பவரல்ல.

பராஞ்சி கானி வ்யத்ருணத் ஸ்வயம்பூ:’ (கதோபநிஶத் 2.1.1)
கதோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது: ஈஸ்வரன் இந்த்ரியங்களை வெளிநோக்கு உடையனவாக (படைத்திருப்பதன் மூலம்) நாசப்படுத்திவிட்டார்.

இதி மந்த்ரவர்ணாத் இந்த மந்திரத்தின் படியும் (மேலே கூறப்பட்ட ஈசாவாஸ்ய உபநிஶத் மந்த்ரத்தின் படியும் பகவான் ஸ்வயம்பூ என்று அழைக்கப்படுகிறார்). 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக