4. ஸர்வ: ஶர்வ: ஶிவ: ஸ்தாணுர்பூதாதிர்நிதிரவ்யய: |
ஸம்பவோ பாவனோ பர்தா ப்ரபவ: ப்ரபுரீஶ்வர: ||
இந்த நான்காவது ஸ்லோகத்தில் மொத்தம் 12 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,
25. ஸர்வ: 26. ஶர்வ: 27. ஶிவ: 28. ஸ்தாணு: 29. பூதாதி: 30. நிதி: அவ்யய: |
31. ஸம்பவ: 32. பாவன: 33. பர்தா 34. ப்ரபவ: 35. ப்ரபு: 36. ஈஶ்வர: ||
ஸம்பவோ பாவனோ பர்தா ப்ரபவ: ப்ரபுரீஶ்வர: ||
இந்த நான்காவது ஸ்லோகத்தில் மொத்தம் 12 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,
25. ஸர்வ: 26. ஶர்வ: 27. ஶிவ: 28. ஸ்தாணு: 29. பூதாதி: 30. நிதி: அவ்யய: |
31. ஸம்பவ: 32. பாவன: 33. பர்தா 34. ப்ரபவ: 35. ப்ரபு: 36. ஈஶ்வர: ||
34. ஓம் ப்ரபவாய நம:
ப்ரகர்ஶேண மிகச்சிறந்த மஹாபூதானி அனைத்து பொருட்களும், உயிரினங்களும் அஸ்மாஜ்ஜாயந்த எவரிடமிருந்து தோன்றுகின்றனவோ இதி அவர் ப்ரபவ: 'ப்ரபவ' என்று
அழைக்கப்படுகிறார்.
மிகச்சிறந்த (அல்லது ஆச்சர்யப்படும்
வகையில்) அனைத்து பொருட்களும், உயிரினங்களும்
அவரிடமிருந்து தோன்றுகின்றபடியால் பகவான் 'ப்ரபவ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ப்ரக்ருஶ்டோ (அல்லது) மிகப்பெருமையான பவோ ஜன்மாஸ்யேதி வா பிறவிகள் (அவதாரங்கள்)
எடுப்பதால் அவர் 'ப்ரபவ' என்று அழைக்கப்படுகிறார்.
அல்லது, அவரது பிறவிகள் (அவதாரங்கள்) மிகவும் பெருமை பெற்று விளங்குவதால் பகவான்
'ப்ரபவ' என்ற
திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
35. ஓம் ப்ரபவே நம:
ஸர்வாஸு அனைத்து க்ரியாஸு செயல்களிலும் ஸாமர்த்த்ய திறமை அதிஶயாத் மிகுந்து இருப்பதால் ப்ரபு: அவர் 'ப்ரபு' என்று அழைக்கப்படுகிறார்.
அனைத்து
செயல்களிலும் அவரது திறமை மிகுந்து இருப்பதால் பகவான் 'ப்ரபு'
என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
36. ஓம் ஈஶ்வராய நம:
நிரூபாதிகம் பண்பு, மற்றும் குணங்கள் அற்று இருத்தலை ஐஶ்வர்யம் தனக்கு
செல்வமாக அஸ்யேதி கொண்டிருப்பதால் ஈஶ்வர: அவர் 'ஈஶ்வர:' என்று அழைக்கப்படுகிறார்.
(நிர்குண ப்ரஹ்மமாக) பண்பு, மற்றும் குணங்கள் அற்று இருத்தலை தனக்கு
செல்வமாக கொண்டிருப்பதால் பகவான் 'ஈஶ்வர:' என்ற
திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக