6. அப்ரமேயோ ஹ்ருஶீகேஶ: பத்மநாபோS(அ)மரப்ரபு: |விஶ்வகர்மா மனுஸ்த்வஶ்டா ஸ்தவிஶ்ட: ஸ்தவிரோ த்ருவ: ||
46.
அப்ரமேய:, 47. ஹ்ருஶீகேஶ:, 48. பத்மநாப:,
49. அமரப்ரபு: |
50. விஶ்வகர்மா, 51. மனு:, 52. த்வஶ்டா,
53. ஸ்தவிஶ்ட: 54. ஸ்தவிரோ த்ருவ:
||
46. ஓம் அப்ரமேயாய நம:
ஶப்தாதிரஹிதத்வான் ந ப்ரத்யக்ஷ கம்ய: பரம்பொருள் நம் புலன்களுக்கு அப்பாற்பட்டவர். எனவே,
ஒலி முதலியவற்றை அறிய உதவும் நமது புலனுறுப்புக்களால் அவரை அறிய
இயலாது | நாப்யனுமானவிஶய: தத்வ்யாப்தலிங்காபவாத்
எவ்வித குறியீடோ, குறிப்பிட்டதொரு உருவமோ இல்லாததால் அவரை
அனுமானித்தும் அறிந்துகொள்ள முடியாது (உதாரணமாக, நேரடியாக தெரியாவிடினும் புகை இருப்பதன் மூலம் நெருப்பை நாம்
அனுமானிக்கலாம். பரம்பொருளை அவ்வாறும் அறிய முடியாது) | நாப்யுபமான ஸித்த:, நிர்பாகத்வேன ஸாத்ருஶ்யாபாவாத் அவரை பிரிக்க (பகுக்க) முடியாது, (அவருக்கு)
வேறொரு ஒப்புமை இல்லை. எனவே, எடுத்துக்காட்டின் மூலமும் அவரை அறிய முடியாது | நாப்யர்தாபத்திக்ராஹ்ய: தத்வினானுபபத்யமானஸ்யா(அ)ஸம்பவாத் அவரை சில சூழ்நிலைகளைக் (காரணங்களைக்) கொண்டும்
அறிய முடியாது, ஏனெனில், அவரைத் தவிர வேறொன்றைக் கொண்டும் அந்த சூழ்நிலைகளுக்கு
விளக்கம் அளிக்க இயலாது (அவரைக்
கொண்டே விளக்கம் அளிக்க வேண்டுமெனில், அவற்றால் அவரை எவ்வாறு அறிய முடியும்?) | நாப்யபாவகோசரோ பாவத்வேன ஸம்மதத்வாத் அவர் அனைத்திலும் உள்ளார் என்று ஏற்றுக்கொள்வதால், அவரை
(இவை அனைத்துமில்லை) என்ற நீக்க வாதத்தாலும் வர்ணிக்க இயலாது (பரப்ரஹ்மம் இது இல்லை, இது இல்லை என்று அனைத்தையும் நீக்கி,
முடிவில் எது உள்ளதோ அதுவே என்று விவரிப்பது நீக்க வாதம்) | அபாவஸாக்ஷித்வாச்ய ந ஶஶ்டப்ரமாணஸ்ய எனவே, அவரை (நாம் காணும், அறியும்) எதுவும் இல்லை என்ற நீக்க
வாதத்தை விளக்கும் ஆறு சான்றுகளாலும் விளக்க இயலாது | நாபி ஸாஸ்த்ரப்ரமாணவேத்ய: ப்ரமாணஜன்யாதிஶயாபாவாத் அவரை, சாத்திரங்களைக் கொண்டும் முழுவதுமாகத் தெரிந்துகொள்ள
இயலாது. ஏனெனில், அவர் சாத்திர விளக்கங்களுக்கும் அப்பாற்பட்டும், அவற்றிலிருந்து
மேம்பட்டும் இருப்பவர் | யத்யேவம் ஸாஸ்திரயோனித்வம் கதம்? உண்மை இவ்வாறிருக்க, அவரை
சாத்திரங்களைக் கொண்டே அறிய இயலும் என்று கூறுவது ஏன்? | உச்யதே ப்ரமாணாதிஸாக்ஷித்வேன ப்ரகாஶஸ்வரூபஸ்ய
ப்ரமாணா-விஶ்யத்வேSபி அத்யஸ்தாதத்ரூபநிவர்தகத்வேன ஸாஸ்த்ர-ப்ரமாணகத்வமிதி அப்ரமேய: ஸாக்ஷி ரூபத்வாத் வா ஒளிமயமான
அவர் (வேதம் முதலிய) சான்றுகளுக்கு அப்பாற்பட்டு இருப்பினும், (புலன்களுக்கு அறியமுடியாத வகையில்) இந்த உலகனைத்தையும் (அதன் உள்ளிருக்கும் ஆத்மாவாக) கட்டுக்குள் வைத்திருப்பதால், அவர் (மறைமுகமாக)
சாத்திரங்களில் (அவரைப்பற்றிக்) கூறியள்ளதற்கு சாட்சியாக இருக்கிறார். எனவே, மற்ற
எவ்வகையிலும் அவரை அறிய முடியாது, அத்தகைய சாட்சியாக மட்டுமே அவரை
அறியமுடியமாதலால் அவர் ‘அப்ரமேயர்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவானை நாம் நமது
புலன்களைக் கொண்டோ, வேறு எடுத்துக்காட்டுகளைக் கொண்டோ, நாம் காணும் நிகழ்வுகளின் மூலம் ஊகித்து அறிந்து
கொள்ளவோ, மற்ற எவற்றின் மூலமோ முழுவதுமாக அறிந்துகொள்ள முடியாது. சாத்திரங்களைக்
கொண்டும் அவரை தெரிந்து கொண்டு விடமுடியாது. எனினும், அவர் இந்த உலகனைத்தும்
மறைமுகமாக உள்ளுறை ஆன்மாவாக நிறைந்து, அதை தன் கட்டுக்குள் வைத்திருப்பதால்,
சாத்திரக் கூறுகளுக்கு சாட்சியாக விளங்குகிறார். எனவே, பகவான் 'அப்ரமேய’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக