5. ஸ்வயம்பூ: ஶம்புராதித்ய: புஷ்கராக்ஷோ மஹாஸ்வன: |
அனாதிநிதனோ தாதா விதாதா தாதுருத்தம: ||
இந்த ஐந்தாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன:
37. ஸ்வயம்பூ: 38. ஶம்பு: 39. ஆதித்ய: 40. புஷ்கராக்ஷ: 41. மஹாஸ்வன: |
42. அநாதிநிதன: 43. தாதா 44. விதாதா 45. தாதுருத்தம: ||
இதில் மேலும் சில திருநாமங்களின் விளக்கம்:
அனாதிநிதனோ தாதா விதாதா தாதுருத்தம: ||
இந்த ஐந்தாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன:
37. ஸ்வயம்பூ: 38. ஶம்பு: 39. ஆதித்ய: 40. புஷ்கராக்ஷ: 41. மஹாஸ்வன: |
42. அநாதிநிதன: 43. தாதா 44. விதாதா 45. தாதுருத்தம: ||
இதில் மேலும் சில திருநாமங்களின் விளக்கம்:
38. ஓம் ஶம்பவே நம:
ஶம் ‘ஶம்’ என்றால் ஸுகம் சுகம் அல்லது இன்பம் பக்தனாம் தனது
அடியவர்களுக்கு பாவயதீதி உருவாக்குவதால் (அளிப்பதால்) ஶம்பு: அவர் ' ஶம்பு:' என்று அழைக்கப்படுகிறார் |
தனது
அடியவர்களுக்கு இன்பத்தை அளிப்பதால் (சுகத்தை உருவாக்குவதால்) பகவான் 'ஶம்பு:' என்ற திருநாமத்தால்
அழைக்கப்படுகிறார்.
39. ஓம் ஆதித்யாய நம:
ஆதித்யமண்டலாந்த:ஸ்தோ சூர்யமண்டலத்தின்
நடுவே ஹிரண்மய: தங்கமயமான புருஶ: புருஶராய் வீற்றிருப்பதால் ஆதித்ய: அவர் 'ஆதித்யன்' என்று அழைக்கப்படுகிறார் |
சூர்யமண்டலத்தின்
நடுவே தங்கமயமான புருஶராய் வீற்றிருப்பதால் பகவான் 'ஆதித்யன்' என்ற
திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அன்றாட
சந்த்யா வந்தனத்தில் வரும் ஒரு பகுதி: த்யேயஸ்ஸதா ஸவித்ரு மண்டல மத்ய
வர்த்தி
நாராயண ஸரஸிஜாஸன ஸந்நிவிஷ்ட.
த்வாதஸாதித்யேஶூ பன்னிரண்டு
ஆதித்யர்களுக்குள் விஶ்ணுர்வா 'விஶ்ணு' என்ற பெயருடைய ஆதித்யனாக பகவான் இருப்பதால் ஆதித்ய: அவர் 'ஆதித்யன்' என்று அழைக்கப்படுகிறார் |
பன்னிரண்டு
ஆதித்யர்களுக்குள் விஶ்ணு என்ற பெயருடைய பகவான் இருப்பதால் பகவான் 'ஆதித்யன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
'ஆதித்யானாமஹம்
விஶ்ணு:’ (ஸ்ரீமத்
பகவத்கீதை 10.21)
ஸ்ரீமத்
பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்:
ஆதித்யர்களில்
நான் விஶ்ணு.
இத்யுக்தே இவ்வாறு
பகவான் கூறியுள்ளார்.
பன்னிரண்டு
ஆதித்யர்களின் பெயர்கள்: சக்ர, அர்யமா, தாதா, த்வஷ்டா, பூஶா, விவஸ்வான், சவிதா, மித்ர, வருண, அம்சுமான், பக மற்றும் விஶ்ணு.
அதிதேர் 'அதிதி' என்றால் அகண்டிதாயா மஹ்யா பரந்து விரிந்துள்ள இந்த பூமி அயம் அந்த நிலமகளின் பதிரிதி வா கணவன் ஆதலால் ஆதித்ய: அவர் 'ஆதித்யன்' என்று அழைக்கப்படுகிறார் |
'அதிதி' என்றால் பரந்து விரிந்துள்ள இந்த பூமியைக் குறிக்கும். அந்த நிலமகளின் கணவன் ஆதலால், பகவான் 'ஆதித்யன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
'இயம்
வா அதிதி:' 'மஹீம் தேவீம்
விஶ்ணுபத்னீம்'
'இது (இந்த பூமி) அதிதி'
'இந்த
பூமிதேவியானவள் விஶ்ணுவின் மனைவியாவாள்'
இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள்
கூறுகின்றன.
யதா எவ்வாறு ஆதித்ய சூரியன் ஏக ஏவாநேகேஶூ ஒன்றாக
இருப்பினும் ஜலபாஜனேஶூ வெவ்வேறு நீர்நிலைகளில் அனேகவத் பலவாறாக ப்ரதிபாஸதே பிரதிபலிக்கின்றதோ, ஏவமனேகேஶூ தான் ஒருவர் மட்டுமே இருப்பினும் ஶரீரேஶூ பல்வேறு உடல்களில் ஏக ஏவாத்மானேகவத் ஒரே ஆத்மாவானது பல ஆத்மாக்களாக ப்ரதிபாஸத பிரதிபலிப்பதால் இதி ஆதித்ய ஸாதர்ம்யதா இவ்வாறு (பிரதிபலிப்பதில்)
சூரியனை ஒத்து இருப்பதால் ஆதித்ய: அவர் 'ஆதித்யன்' என்று அழைக்கப்படுகிறார் |
ஒரே சூரியன், பல நீர்நிலைகளில் பலவாக
பிரதிபலிக்கிறது. அது போன்றே, ஒரே
பரமாத்மா பல்வேறு உடல்களில் பற்பல ஜீவாத்மாக்களாக தோன்றுகிறார். இவ்வாறு, சூரியனைப் போன்ற தன்மை உடையவராதலால் பகவான்
'ஆதித்யன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக