5. ஸ்வயம்பூ: ஶம்புராதித்ய: புஶ்கராக்ஷோ மஹாஸ்வன: |
அனாதிநிதனோ தாதா விதாதா தாதுருத்தம: ||
இந்த ஐந்தாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன:
37. ஸ்வயம்பூ: 38. ஶம்பு: 39. ஆதித்ய: 40. புஶ்கராக்ஷ: 41. மஹாஸ்வன: |
42. அநாதிநிதன: 43. தாதா 44. விதாதா 45. தாதுருத்தம: ||
இதில் மேலும் சில திருநாமங்களின் விளக்கம்:
அனாதிநிதனோ தாதா விதாதா தாதுருத்தம: ||
இந்த ஐந்தாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன:
37. ஸ்வயம்பூ: 38. ஶம்பு: 39. ஆதித்ய: 40. புஶ்கராக்ஷ: 41. மஹாஸ்வன: |
42. அநாதிநிதன: 43. தாதா 44. விதாதா 45. தாதுருத்தம: ||
42. ஓம் அநாதிநிதனாய நம:
ஆதிர்ஜன்ம: 'ஆதி' என்றால் பிறப்பு நிதனம் விநாஶ: 'நிதனம்' என்றால் அழிவு தத்த்வயம் இந்த இரண்டும் யஸ்ய ந வித்யதே எவருக்கு இல்லையோ ஸ அநாதிநிதன: அவர் 'அநாதிநிதன' என்று அழைக்கப்படுகிறார் |
எவருக்கு பிறப்பு
மற்றும் இறப்பு இல்லையோ அந்த பகவான் 'அநாதிநிதன' (பிறப்பு, இறப்பு
அற்றவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
43. ஓம் தாத்ரே நம:
ஆனந்தாதிரூபேண ஆதிசேஷன்
முதலான உருவங்களைக்கொண்டு விஶ்வம் இந்த பிரபஞ்சத்தைத் பிபர்தீதி தாங்குவதால்
தாதா அவர் 'தாதா' என்று
அழைக்கப்படுகிறார்.
ஆதிசேஷன் முதலான
உருவங்களைக்கொண்டு இந்த பிரபஞ்சத்தைத் தாங்குவதால் பகவான் 'தாதா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
44. ஓம் விதாத்ரே நம:
கர்மணாம் செயல்களையும்
தத்ஃபலானாம் அதன் பலன்களையும் ச கர்த்தா உருவாக்குவதால்
விதாதா அவர் 'விதாதா' என்று
அழைக்கப்படுகிறார் |
செயல்களையும், அவற்றின் பலன்களையும்
உருவாக்குவதால் பகவான் 'விதாதா' என்ற
திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக