5. ஸ்வயம்பூ: ஶம்புராதித்ய: புஶ்கராக்ஷோ மஹாஸ்வன: |
அனாதிநிதனோ தாதா விதாதா தாதுருத்தம: ||
இந்த ஐந்தாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன:
37. ஸ்வயம்பூ: 38. ஶம்பு: 39. ஆதித்ய: 40. புஶ்கராக்ஷ: 41. மஹாஸ்வன: |
42. அநாதிநிதன: 43. தாதா 44. விதாதா 45. தாதுருத்தம: ||
இதில் மேலும் சில திருநாமங்களின் விளக்கம்:
அனாதிநிதனோ தாதா விதாதா தாதுருத்தம: ||
இந்த ஐந்தாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன:
37. ஸ்வயம்பூ: 38. ஶம்பு: 39. ஆதித்ய: 40. புஶ்கராக்ஷ: 41. மஹாஸ்வன: |
42. அநாதிநிதன: 43. தாதா 44. விதாதா 45. தாதுருத்தம: ||
40. ஓம் புஶ்கராக்ஷாய நம:
புஶ்கரேண தாமரை இதழ்களை உபமிதே ஒத்த அக்ஷிணீ கண்களை யஸ்யேதி உடையவராதலால்
புஶ்கராக்ஷ: அவர் 'புஷ்கராக்ஷ' என்று
அழைக்கப்படுகிறார் |
தாமரை இதழ்களை
ஒத்த கண்களை உடையவராதலால் பகவான் 'புஷ்கராக்ஷ' (தாமரைக்கண்ணன்) என்ற
திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
41. ஓம் மஹாஸ்வனாய நம:
மஹான் ஊர்ஜித: ' மஹத்' என்றால் மிக உயர்ந்த ஸ்வனோ நாதோ வா 'ஸ்வனம்' என்றால் ஒலி ஷ்ருதிலக்ஷணோ வேதங்களாகிய யஸ்ய எவருக்கு உள்ளதோ ஸ மஹாஸ்வன: அவர் ' மஹாஸ்வன:' என்று அழைக்கப்படுகிறார் |
வேதங்களாகிய மிக
உயர்ந்த ஒலியை உடையவராதலால் பகவான் 'மஹாஸ்வன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அல்லது, மிக உயர்ந்த
வேதங்களையே தனக்கு ஒலியாகக் கொண்டிருப்பதால் பகவான் 'மஹாஸ்வன:'
என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
'ஸன்மஹத்'
(பாணினி ஸூத்ரம் 2.1.61)
இந்த
பாணினி ஸூத்ரத்தின் படி ஸத், மஹத் (மஹான்) போன்ற
வார்த்தைகள் தனிப்பட்ட ஒருவரைக் குறிக்கும் பொழுது அவரது மேன்மையை சுட்டிக்
காட்டுகிறது.
'ஆன்மஹத:
ஸமானாதிகரணஜாதீயயோ:' (பாணினி ஸூத்ரம் 6.3.46)
இந்த பாணினி ஸூத்ரத்தின் படி: மஹத் என்ற சொல்லின் பின்னே,
ஒன்றை மற்றொண்டுடன் தொடர்பு படுத்தும் சொல் வந்தால், மஹத் என்னும் சொல்லில் உள்ள 'த'காரம் 'ஆ'காரமாக மாறுகிறது.
எனவேதான், மஹத்+ஸ்வன: = மகாஸ்வன என்று (த், ஆவாக மாறி) உருவாகிறது.
இத்யாத்வம் | இவ்வாறு, மஹத்+ஸ்வன: = மஹாஸ்வன என்று (த், ஆவாக மாறி) உருவாகிறது.
'அஸ்ய
மஹதோ பூதோ நி:ஸ்வஸிதமேதத்
ரிக்வேதோ யஜுர்வேத:' (ப்ருஹதாரண்யக
உபநிஶத் 2.4.10)
அந்த
பரப்ரஹ்மம் (தனது) மூச்சுக்காற்றை உள்ளிழுத்தல், மற்றும்
வெளியிடுதலே ரிக்வேதம் மற்றும் யஜுர்வேதமாகும்.
இதி ஶ்ருதே | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள்
கூறுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக