5. ஸ்வயம்பூ: ஶம்புராதித்ய: புஶ்கராக்ஷோ மஹாஸ்வன: |
அனாதிநிதனோ தாதா விதாதா தாதுருத்தம: ||
இந்த ஐந்தாவது ஸ்லோகத்தில் உள்ள 9 திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:
37. ஸ்வயம்பூ: 38. ஶம்பு: 39. ஆதித்ய: 40. புஷ்கராக்ஷ: 41. மஹாஸ்வன: |
42. அநாதிநிதன: 43. தாதா 44. விதாதா 45. தாதுருத்தம: ||
37. ஓம் ஸ்வயம்புவே நம:
அனாதிநிதனோ தாதா விதாதா தாதுருத்தம: ||
இந்த ஐந்தாவது ஸ்லோகத்தில் உள்ள 9 திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:
37. ஸ்வயம்பூ: 38. ஶம்பு: 39. ஆதித்ய: 40. புஷ்கராக்ஷ: 41. மஹாஸ்வன: |
42. அநாதிநிதன: 43. தாதா 44. விதாதா 45. தாதுருத்தம: ||
37. ஓம் ஸ்வயம்புவே நம:
ஸ்வயமேவ பவதீதி ஸ்வயம்பூ: |
(வேறொரு காரணமின்றி, தான் மட்டும்) தனியொருவராய் இருப்பதால், பகவான் 'ஸ்வயம்பூ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஸர்வேஶாமுபரி பவதி ஸ்வயம் பவதீதி வா ஸ்வயம்பூ: |
அனைவருக்கும் மேலே இருப்பதாலும், தன்னிச்சையால் தோன்றுவதாலும் பகவான் 'ஸ்வயம்பூ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
யேஶாமுபரி பவதி யஸ்சோபரி பவதி ததுபயாத்மனா ஸ்வயமேவ பவதீதி வா ஸ்வயம்பூ: |
எவருக்கு மேலானவரோ (ஜீவாத்மாவும் அவரே), எவர் மேலானவரோ (ஜீவாத்மாவிற்கு மேலானவரும் அவரே), இப்படி இருவாறாகவும் அவரே தோன்றுவதால் பகவான் 'ஸ்வயம்பூ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
38. ஓம் ஶம்பவே நம:
ஶம் ஸுகம் பக்தனாம் பாவயதீதி ஶம்பு: |
தனது அடியவர்களுக்கு இன்பத்தை அளிப்பதால் (சுகத்தை உருவாக்குவதால்) பகவான் 'ஶம்பு:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
39. ஓம் ஆதித்யாய நம:
ஆதித்யமண்டலாந்த:ஸ்தோ ஹிரண்மய: புருஶ: ஆதித்ய: |
சூர்யமண்டலத்தின் நடுவே தங்கமயமான புருஶராய் வீற்றிருப்பதால் பகவான் 'ஆதித்யன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
த்வாதஸாதித்யேஶூ விஶ்ணுர்வா ஆதித்ய: |
பன்னிரண்டு ஆதித்யர்களுக்குள் விஶ்ணு என்ற பெயருடைய பகவான் இருப்பதால் பகவான் 'ஆதித்யன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அதிதேர் அகண்டிதாயா மஹ்யா அயம் பதிரிதி வா ஆதித்ய: |
'அதிதி' என்றால் பரந்து விரிந்துள்ள இந்த பூமியைக் குறிக்கும். அந்த நிலமகளின் கணவன் ஆதலால், பகவான் 'ஆதித்யன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
யதா ஆதித்ய ஏக ஏவாநேகேஶூ ஜலபாஜனேஶூ அனேகவத் ப்ரதிபாஸதே ஏவமனேகேஶூ ஶரீரேஶூ ஏக ஏவாத்மானேகவத் ப்ரதிபாஸத இதி ஆதித்ய ஸாதர்ம்யதா ஆதித்ய: |
ஒரே சூரியன், பல நீர்நிலைகளில் பலவாக பிரதிபலிக்கிறது. அது போன்றே, ஒரே பரமாத்மா பல்வேறு உடல்களில் பற்பல ஜீவாத்மாக்களாக தோன்றுகிறார்.இவ்வாறு, சூரியனைப் போன்ற தன்மை உடையவராதலால் பகவான் 'ஆதித்யன்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
40. ஓம் புஶ்கராக்ஷாய நம:
புஶ்கரேண உபமிதே அக்ஷிணீ யஸ்யேதி புஶ்கராக்ஷ: |
தாமரை இதழ்களை ஒத்த கண்களை உடையவராதலால் பகவான் 'புஷ்கராக்ஷ' (தாமரைக்கண்ணன்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
41. ஓம் மஹாஸ்வனாய நம:
மஹான் ஊர்ஜித: ஸ்வனோ நாதோ வா ஶ்ருதிலக்ஷணோ யஸ்ய ஸ மஹாஸ்வன: |
வேதங்களாகிய மிக உயர்ந்த ஒலியை உடையவராதலால் பகவான் 'மஹாஸ்வன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அல்லது, மிக உயர்ந்த வேதங்களையே தனக்கு ஒலியாகக் கொண்டிருப்பதால் பகவான் 'மஹாஸ்வன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
42. ஓம் அநாதிநிதனாய நம:
ஆதிர்ஜன்ம: நிதனம் விநாஶ: தத்த்வயம் யஸ்ய ந வித்யதே ஸ அநாதிநிதன: |
எவருக்கு பிறப்பு மற்றும் இறப்பு இல்லையோ அந்த பகவான் 'அநாதிநிதன:' (பிறப்பு, இறப்பு அற்றவர்) என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
43. ஓம் தாத்ரே நம:
ஆனந்தாதிரூபேண விஶ்வம் பிபர்தீதி தாதா |
ஆதிசேஷன் முதலான உருவங்களைக்கொண்டு இந்த பிரபஞ்சத்தைத் தாங்குவதால் பகவான் 'தாதா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
44. ஓம் விதாத்ரே நம:
கர்மணாம் தத்ஃபலானாம் ச கர்த்தா விதாதா |
செயல்களையும், அவற்றின் பலன்களையும் உருவாக்குவதால் பகவான் 'விதாதா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
45. ஓம் தாதவ உத்தமாய நம:
அனந்தாதீனாமபி தாரகத்வாத் விஶேஶேண ததாதீதி வா தாதுருத்தம இதி நாமைகம் ஸமானாதிகரண்யேன ஸர்வதாதுப்ய: ப்ருதிவ்யாதிப்ய: உத்க்ருஷ்டஸ்சித்தாதுரித்யர்த்த: |
(முன்னர் தாதா என்ற திருநாமத்தில் கூறப்பட்டுள்ள) ஆதிசேஷன் முதலானோருக்கும் (பிரபஞ்சத்தை) தாங்கும் சக்தியை அளித்து, அவர்களையும்(அந்த சக்தியை அளிப்பதன் மூலம்) தாங்குவதால் பகவான் 'தாதுருத்தம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
தாதுர் விரிஞ்சேருத்க்ருஶ்ட (விரிஞ்சேர் உத்க்ருஶ்ட) (தாதுருத்தம:) இதி வா வையதிகரண்யேன |
(முன்னர் கூறப்பட்ட தாதா என்ற திருநாமத்துடன் சேர்க்காமல் தனித்துப் பொருள் கொண்டால்): அனைத்தையும் படைக்கும் (இந்த உலகில் உள்ள அனைத்திற்கும் மூல காரணமாய் இருக்கும்) நான்முகக் கடவுளாகிய ப்ரஹ்மாவைக் காட்டிலும் உயர்ந்தவர் என்பதால் பகவான் 'தாதுருத்தம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
நாமத்வயம் வா அல்லது (தாது, உத்தம என்று) இரண்டு திருநாமங்களாகக் கொண்டால்;
கார்யகாரணப்ரபஞ்சதாரணாச்சிதேவ தாது: |
இந்த ப்ரபஞ்சத்தின் காரணமாகவும் அதில் நடைபெறும் அனைத்துக் காரியங்களாகவும் அறிவின் வடிவாக பகவானே இருப்பதால் அவர் 'தாது' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஸர்வேஶாம் உத்கதானாம் அதிஶயேனோத்கதத்வாத் உத்தம: |
அனைவரையும், அனைத்தையும் காட்டிலும் சிறந்தவரானபடியால் பகவான் 'உத்தமர்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக