4. ஸர்வ: ஶர்வ: ஶிவ: ஸ்தாணுர்பூதாதிர்நிதிரவ்யய: |
ஸம்பவோ பாவனோ பர்தா ப்ரபவ: ப்ரபுரீஶ்வர: ||
இந்த நான்காவது ஸ்லோகத்தில் உள்ள 12 திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:
25. ஸர்வ: 26. ஶர்வ: 27. ஶிவ: 28. ஸ்தாணு: 29. பூதாதி: 30. நிதி: அவ்யய: |
31. ஸம்பவ: 32. பாவன: 33. பர்தா 34. ப்ரபவ: 35. ப்ரபு: 36. ஈஶ்வர: ||
ஸம்பவோ பாவனோ பர்தா ப்ரபவ: ப்ரபுரீஶ்வர: ||
இந்த நான்காவது ஸ்லோகத்தில் உள்ள 12 திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:
25. ஸர்வ: 26. ஶர்வ: 27. ஶிவ: 28. ஸ்தாணு: 29. பூதாதி: 30. நிதி: அவ்யய: |
31. ஸம்பவ: 32. பாவன: 33. பர்தா 34. ப்ரபவ: 35. ப்ரபு: 36. ஈஶ்வர: ||
25. ஓம் ஸர்வஸ்மை நம:
அஸதஸ்ச ஸதஸ்சைவ ஸர்வஸ்ய ப்ரபவாப்யயாத் |
ஸர்வஸ்ய ஸர்வதா ஞானாத் ஸர்வமேன ப்ரசக்ஷதே || (மஹாபாரதம் உத்தியோக பர்வம் 7.11)
இதி பகவத்வ்யாஸவசனாத் ஸர்வ: |
மஹாபாரதம் உத்யோக பர்வத்தில் பகவான் வியாசர் கூறுகிறார்:
அல்லதும், உள்ளதும் ஆகிய அனைத்தின் பிறப்பிடமாகவும், அவை நிலைபெற்றிருக்கும் இடமாகவும், அழியும் காலத்தில் சென்றும் லயமடையும் இடமாக இருப்பதாலும், அனைத்தையும் (அனைவரையும்) அனைத்து காலங்களிலும் உள்ளபடி அறிவதாலும் அவரை ‘ஸர்வ’ என்று அழைக்கின்றனர்.
மஹாபாரதத்தில் உள்ள இந்த வ்யாஸ பகவானின் கூற்றின்படி, பகவான் 'ஸர்வ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
26. ஓம் ஶர்வாய நம:
ஶ்ருணாதி ஸம்ஹாரஸமயே ஸம்ஹரதி ஸகலா: ப்ரஜா: இதி ஶர்வ:
பிரளய (அழிக்கும்) காலத்தில் அனைத்து உயிர்களையும் கொல்வதால் பகவான்'ஶர்வ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
27. ஓம் ஶிவாய நம:
நிஸ்த்ரைகுண்யதயா ஶுத்தத்வாத் ஶிவ:
முக்குணங்களின் சேர்க்கை இன்றி தூய்மையானவராக இருப்பதால் பகவான்'ஶிவ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
28. ஓம் ஸ்தாணவே நம:
ஸ்திரத்வாத் ஸ்தாணு:
(நிரந்தரமாக) நிலையாக இருப்பதால் பகவான் ‘ஸ்தாணு:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
29. ஓம் பூதாதயே நம:
பூதானாம் ஆதிகாரணத்வாத் பூதாதி:
அனைத்து ஜீவராசிகளுக்கும் மூல காரணமாய் இருப்பதால் பகவான் ‘பூதாதி:’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
30. ஓம் நிதயேSவ்யயாய நம:
ப்ரளயகாலேஸ்மின் ஸர்வம் நிதீயத இதி நிதி: அவ்யய: அவினஶ்வரோ நிதிரித்யர்த்த:
அழிக்கும் (ப்ரளய) காலத்தில் அனைத்தும் (அவருக்குள்) சென்று உள்ளடங்குவதாலும், எக்காலத்திலும் அழிவே இல்லாததாலும், பகவான் "நிதி:அவ்யய:" என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
31. ஓம் ஸம்பவாய நம:
ஸ்வேச்சயா ஸமீசீனம் பவனமஸ்யேதி ஸம்பவ:
(நம்மைபோன்று கர்மாதீனமாக இல்லாமல்) தனது சுய விருப்பத்தால் புகழோடுபிறப்பதால் (அவதாரம் எடுப்பதால்) பகவான் 'ஸம்பவ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
32. ஓம் பாவனாய நம:
ஸர்வேஶாம் போக்த்ருணாம் ஃபலானி பாவயதீதி பாவன:
அனைத்து வகையான சுகங்களையும் அனுபவிப்பவர்களுக்கு, (அவர்களின் விருப்பம், மற்றும் கர்மத்திற்குத் தக்கவாறு) பலன்களை உருவாக்குவதால் பகவான்'பாவன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
33. ஓம் பர்த்ரே நம:
ப்ரபஞ்சஸ்ய அதிஶ்டானத்வேன பரணாத் பர்தா
இந்த ப்ரபஞ்சத்தை தனது சக்தியால் தாங்குவதால் பகவான் 'பர்தா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
34. ஓம் ப்ரபவாய நம:
ப்ரகர்ஶேண மஹாபூதானி அஸ்மாஜ்ஜாயந்த இதி ப்ரபவ:
மிகச்சிறந்த (அல்லது ஆச்சர்யப்படும் வகையில்) அனைத்து பொருட்களும்,உயிரினங்களும் அவரிடமிருந்து தோன்றுகின்றபடியால் பகவான் 'ப்ரபவ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பவோ ஜன்மாஸ்யேதி வா ப்ரபவ:
அல்லது, அவரது பிறவிகள் (அவதாரங்கள்) மிகவும் பெருமை பெற்று விளங்குவதால் பகவான் 'ப்ரபவ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
35. ஓம் ப்ரபவே நம:
ஸர்வாஸு க்ரியாஸு ஸாமர்த்த்ய அதிஶயாத் ப்ரபு:
அனைத்து செயல்களிலும் அவரது திறமை மிகுந்து இருப்பதால் பகவான் 'ப்ரபு'என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
36. ஓம் ஈஶ்வராய நம:
நிரூபாதிகம் ஐஶ்வர்யம் அஸ்யேதி ஈஶ்வர:
(நிர்குண ப்ரஹ்மமாக) பண்பு, மற்றும் குணங்கள் அற்று இருத்தலை தனக்கு செல்வமாக கொண்டிருப்பதால் பகவான் 'ஈஶ்வர:' என்ற திருநாமத்தால்அழைக்கப்படுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக