23, குருர்குருதமோ தாம: ஸத்ய: ஸத்யபராக்ரம: |
நிமிஶோSநிமிஶ: ஸ்ரக்வீ வாசஸ்பதிருதாரதீ:||
இந்த இருபத்தி மூன்றாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.
209. குரு:, 210. குருதம:, 211. தாம, 212. ஸத்ய:, 213. ஸத்யபராக்ரம: |
214. நிமிஶ:, 215. அநிமிஶ:, 216. ஸ்ரக்வீ, 217. வாசஸ்பதிருதாரதீ: ||
நிமிஶோSநிமிஶ: ஸ்ரக்வீ வாசஸ்பதிருதாரதீ:||
இந்த இருபத்தி மூன்றாவது ஸ்லோகத்தில் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.
209. குரு:, 210. குருதம:, 211. தாம, 212. ஸத்ய:, 213. ஸத்யபராக்ரம: |
214. நிமிஶ:, 215. அநிமிஶ:, 216. ஸ்ரக்வீ, 217. வாசஸ்பதிருதாரதீ: ||
இந்த திருநாமங்களின் விளக்கம் (சுருக்கமாக):
209. ஓம் குரவே நம:
ஸர்வவித்யானாமுபதேஶ்ட்டத்வாத் ஸர்வேஶாம் ஜனகத்வாத்வா குரு:
அனைத்து வித்தைகளையும் உபதேசிக்கும் ஆசிரியராக இருப்பதாலும், அனைவரையும் (அனைத்தையும்) தோற்றுவிக்கும் தந்தையாக இருப்பதாலும் பகவான் 'குரு' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
210. ஓம் குருதமாய நம:
விரிஞ்ச்யாதீனாமபி ப்ரஹ்மவித்யாஸம்ப்ரதாயகத்வாத் குருதம:
அனைவரையும் படைப்பதால் நான்முகக் கடவுளான ப்ரஹ்மா அனைவருக்கும் குருவாகக் கருதப்படுகிறார். அந்த ப்ரஹ்மாவே, ப்ரஹ்ம ஞானத்தை பகவானிடமிருந்துதான் கற்கிறார். இவ்வாறு, ப்ரஹ்மா முதலானோருக்கும் ப்ரஹ்ம ஞானத்தை தந்தருளுவதால், பகவான் 'குருதம' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
211. ஓம் தாம்னே நம:
தாம ஜ்யோதி: 'நாராயண பரோ ஜ்யோதி:' (நாராயண உபநிஶத் 13.1) இதி மந்த்ரவர்ணாத் தாம:
தாம என்றால் ஒளிமிக்கது என்று பொருள். மிகச்சிறந்த ஒளிவடிவினராக இருப்பதால் பகவான் 'தாம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஸர்வகாமானாமாஸ்பதத்வாத்வா தாம:
நம் அனைத்து ஆசைகளும் பகவானின் கருணையாலேயே நிறைவேறுகின்றன. அனைத்து ஆசைகளும் முடிவில் பகவானையே சென்றடைகின்றன. எனவே, பகவான் 'தாம:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
212. ஓம் ஸத்யாய நம:
எங்கெங்கெல்லாம் உண்மையும், அறமும் நிலைத்திருக்கிறதோ, அங்கெங்கெல்லாம் பகவான் இருக்கிறார். மேலும், அவர் (வேதங்களின் வடிவில்) உண்மையான கூற்றாகவும் இருக்கிறார். எனவே, பகவான் 'ஸத்ய' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஸத்யஸ்ய ஸத்யமிதி வா ஸத்ய
உண்மை எங்கிருந்தாலும், எதனில் இருந்தாலும் அதில் பகவான் உறைகிறார் என்றே கொள்ளவேண்டும். பகவான் அல்லது வேறு உண்மை எதுவுமில்லை. அவர் மாறாத அனைத்திற்குள்ளும் உறைந்து அவற்றிற்கு மாறாத தன்மையை அளிக்கிறார். எனவே, பகவான் 'ஸத்ய' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக