24. அக்ரணீர்க்ராமணீ: ஸ்ரீமான் ந்யாயோ நேதா ஸமீரண: |
ஸஹஸ்ரமூர்த்தா விஶ்வாத்மா ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத் ||
இந்த இருபத்தி நான்காவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.
218. அக்ரணீ:, 219. க்ராமணீ:, 220. ஸ்ரீமான், 221. ந்யாய:, 222. நேதா, 223. ஸமீரண: |
224. ஸஹஸ்ரமூர்த்தா, 225. விஶ்வாத்மா, 226. ஸஹஸ்ராக்ஷ:, 227. ஸஹஸ்ரபாத் ||
அவற்றில் சில திருநாமங்களையும், அவற்றின் விளக்கத்தையும் இன்று அனுபவிக்கலாம்:
இந்த இருபத்தி நான்காவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.
218. அக்ரணீ:, 219. க்ராமணீ:, 220. ஸ்ரீமான், 221. ந்யாய:, 222. நேதா, 223. ஸமீரண: |
224. ஸஹஸ்ரமூர்த்தா, 225. விஶ்வாத்மா, 226. ஸஹஸ்ராக்ஷ:, 227. ஸஹஸ்ரபாத் ||
அவற்றில் சில திருநாமங்களையும், அவற்றின் விளக்கத்தையும் இன்று அனுபவிக்கலாம்:
218. ஓம் அக்ரண்யே நம:
அக்ரம் ப்ரக்ருஶ்டம் 'அக்ரம்' என்றால் மிகச்சிறந்த என்று பொருள்
பதம் இருப்பிடம்
நயதி வழிநடத்திச் செல்கிறார்
முமுக்ஷூனிதி முக்தியை விழைபவர்களை (முமுக்ஷுக்களை)
அக்ரணீ: பகவான் 'அக்ரணீ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் முக்தியை
விழைபவர்களை (முமுக்ஷுக்களை), அந்த முக்திக்கான மிகச்சிறந்த பாதையில் வழிநடத்திச் செல்கிறார். எனவே, அவர் 'அக்ரணீ' என்ற திருநாமத்தால்
அழைக்கப்படுகிறார்.
அக்ரணீ - 'க்' என்ற சொல் வடமொழியில் வரும் மூன்றாவது 'க' வாகும்.
219. ஓம் க்ராமண்யே நம:
பூதக்ராமஸ்ய (நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய) ஐம்பூதங்களை
நேத்ருத்வாத் நியமித்து ஆள்வதால்
க்ராமணீ: பகவான் 'க்ராமணீ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களை நியமித்து ஆள்வதால் பகவான் 'க்ராமணீ' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இங்கு ஐம்பூதங்களுக்குள், அவற்றின் கலவையால் உருவாக்கப்படும் அனைத்து 'அசித்' பொருட்களும் அடக்கம்.
220. ஓம் ஸ்ரீமதே நம:
ஸ்ரீ: காந்தி: 'ஸ்ரீ' என்றால் ஒளி என்று பொருள்
ஸர்வாதிஶாயின்யஸ்யேதி அனைவரைக் காட்டிலும் மேலான ஒளியை உடையவராதலால்
ஸ்ரீமான் பகவான் 'ஸ்ரீமான்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அனைவரைக் காட்டிலும் (அனைத்தைக் காட்டிலும்) மேலான ஒளி படைத்தவராக
இருப்பதால் பகவான் 'ஸ்ரீமான்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
முன்பு 22வது திருநாமத்தில் மஹாலக்ஷ்மி பகவானின் வக்ஷஸ்தலத்தில் (திருமார்பில்) குடியிருத்தல் பிரதானமான பொருளாகக் கொண்டு 'ஸ்ரீமான்' என்று விளக்கியிருந்தார் ஆச்சார்யர். பின்னர் 178வது திருநாமத்தில், அனைத்து செல்வங்களுடன் திருமகள் உறைதலைப் பிரதானமாய்க் கொண்டு 'ஸ்ரீமான்' என்று உரை தந்திருந்தார். இங்கோ, அவரது மேனி ஒளியைக் கொண்டு உரை அளித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக