வியாழன், ஏப்ரல் 29, 2021

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 164

 25. ஆவர்த்தனோ நிவ்ருத்தாத்மா ஸம்வ்ருத: ஸம்ப்ரமர்த்தன: |

அஹ: ஸம்வர்த்தகோ வஹ்னிரனிலோ தரணீதர: || 

இந்த இருபத்தி ஐந்தாவது ஸ்லோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

228. ஆவர்த்தன:, 229. நிவ்ருத்தாத்மா, 230. ஸம்வ்ருத:, 231. ஸம்ப்ரமர்த்தன: |

232. அஹ: ஸம்வர்த்தக:, 233. வஹ்னி:, 234. அனில:, 235. தரணீதர: ||

இந்த ஸ்லோகத்தில் உள்ள திருநாமங்களும் அவற்றின் விளக்கமும்:

228ஓம் ஆவர்த்தனாய நம:

ஆவர்த்தயிதும் ஸம்ஸார சக்ரம் ஶீலமஸ்யேதி ஆவர்த்தன: 

பிறப்புஇறப்பென்னும் இந்த ஸம்ஸார சக்கரத்தை சுழற்றுவதை தனக்கு இயற்கையான குணமாகக் கொண்டுள்ளபடியால்பகவான் 'ஆவர்த்தன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

229ஓம் நிவ்ருத்தாத்மனே நம:

ஸம்ஸாரபந்தான் நிவ்ருத்த ஆத்மா ஸ்வரூபமஸ்யேதி நிவ்ருத்தாத்மா 

இந்த ஸம்ஸாரமென்னும் சக்கரத்தை சுழற்றுபவராக இருப்பினும்இயற்கையாகவே அவர் இந்த ஸம்ஸாரத் தளைகளில் கட்டுப்படுவதில்லைஎனவேபகவான் 'நிவ்ருத்தாத்மாஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

230ஓம் ஸம்வருதாய நம:

ஆச்சாதிகயா அவித்யயா ஸம்வ்ருதத்வாத் ஸம்வ்ருத: 

நமது அறியாமையானது அந்த பரம்பொருளை நாம் காணவொட்டாமல் நம்மிடமிருந்து அவரை மூடி மறைத்துள்ளதுஇவ்வாறுஅறியாமையால் (அஞ்ஞானத்தால்மூடியுள்ள படியால் அவர் 'ஸம்வ்ருத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

231ஓம் ஸம்ப்ரமர்த்தனாய நம:

ஸம்யக் ப்ரமர்த்தயதீதி ருத்ரகாலாத்யாபிர் விபூதிபிர் இதி ஸம்ப்ரமர்த்தன:

பகவான் ருத்ரன்காலன் (காலம்ஆகிய உருவங்களை தரித்து அனைவரையும்அனைத்து இடங்களிலிருந்தும் (ப்ரளய காலத்தில் ருத்ரனாகவும்அவரவரது ஆயுளின் முடிவில் காலனாகவும்அழிக்கிறார்எனவேஅவர் 'ஸம்ப்ரமர்த்தன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

232ஓம் அஹஸம்வர்த்தகாய நம:

ஸம்யகஹ்னாம் ப்ரவர்த்தநாத் ஸூர்யஅஹஸம்வர்த்தக:

பகவான் கதிரவனின் வடிவில் ஒவ்வொரு நாளையும் (பகல் பொழுதையும்சரியாக உருவாக்குகிறார். எனவே, அவர் 'அஹ: ஸம்வர்த்தக:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

233ஓம் வஹ்னயே நம:

ஹவிர் வஹநாத் வஹ்னி: 

யாகங்களிலும்ஹோமங்களிலும் அளிக்கப்படும் ஹவிஸ்ஸை (ஹவிஸ் தேவர்களின் உணவுதேவர்களுக்குக் கொண்டு செல்லும் அக்னியின் வடிவாய் இருப்பதால் பகவான் 'வஹ்னி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

234ஓம் அனிலாய நம:

அனிலயஅனில:

(காற்று வடிவில்எந்த ஒரு குறிப்பிட்ட இடத்திலும் நிலைக்காது சென்றுகொண்டே இருப்பதால் பகவான் 'அனில:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அநாதித்வாத் அனில:

பகவான் வாயு (காற்றின்வடிவாய் உள்ளார்காற்றிற்கு தொடக்கமோமுடிவோ இல்லைஎனவேகாற்றின் வடிவில் இருக்கும் பகவான் 'அனில:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அநாதானாத்வா அனில:.

பகவான் வாயு (காற்றின்வடிவாய் உள்ளார்அவரை கைப்பிடிக்குள் அடக்க (க்ரஹிக்கமுடியாதுஎனவேபகவான் 'அனில:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

அநநாத்வா அனில:

(மூச்சுக்காற்றின் வடிவில்அனைத்தையும் இயக்குவதால் பகவான் 'அனில:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

235ஓம் தரணீதராய நம:

சேஶதிக்கஜாதி ரூபேண வராஹரூபேண ச தரணீம் தத்த இதி தரணீதர:

பகவான் ஆதிசேஷன் மற்றும் எட்டு திக்கிலும் இந்தப் ப்ரபஞ்சத்தைத் தாங்கும் யானைகள் (அஷ்ட திக்கஜங்கள்வடிவில் இந்தப் ப்ரபஞ்சத்தைத் தாங்குகிறார்மேலும்பூமியை ஹிரண்யாக்ஷன் கடலுக்கடியில் மறைத்து வைத்த பொழுது வராஹ அவதாரமெடுத்து பூமியை மீட்டார்எனவேபகவான் 'தரணீதர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக