24. அக்ரணீர்க்ராமணீ: ஸ்ரீமான் ந்யாயோ நேதா ஸமீரண: |
ஸஹஸ்ரமூர்த்தா விஶ்வாத்மா ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத் ||
இந்த இருபத்தி நான்காவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.
218. அக்ரணீ:, 219. க்ராமணீ:, 220. ஸ்ரீமான், 221. ந்யாய:, 222. நேதா, 223. ஸமீரண: |
224. ஸஹஸ்ரமூர்த்தா, 225. விஶ்வாத்மா, 226. ஸஹஸ்ராக்ஷ:, 227. ஸஹஸ்ரபாத் ||
அவற்றில் சில திருநாமங்களையும், அவற்றின் விளக்கத்தையும் இன்று அனுபவிக்கலாம்:
இந்த இருபத்தி நான்காவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.
218. அக்ரணீ:, 219. க்ராமணீ:, 220. ஸ்ரீமான், 221. ந்யாய:, 222. நேதா, 223. ஸமீரண: |
224. ஸஹஸ்ரமூர்த்தா, 225. விஶ்வாத்மா, 226. ஸஹஸ்ராக்ஷ:, 227. ஸஹஸ்ரபாத் ||
அவற்றில் சில திருநாமங்களையும், அவற்றின் விளக்கத்தையும் இன்று அனுபவிக்கலாம்:
224. ஓம் ஸஹஸ்ரமூர்த்னே
நம:
ஸஹஸ்ராணி ஆயிரக்கணக்கான
மூர்த்தானோSஸ்யேதி தலைகள் உடையவராக இருப்பதால்
ஸஹஸ்ரமூர்த்தா பகவான் 'ஸஹஸ்ரமூர்த்தா'
என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஆயிரக்கணக்கான தலைகள் உடையவராக இருப்பதால் பகவான் 'ஸஹஸ்ரமூர்த்தா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
225. ஓம் விஶ்வாத்மனே
நம:
விஶ்வஸ்யாத்மா இந்தப் ப்ரபஞ்சத்தின் உள்ளுறை ஆத்மாவாக இருப்பதால்
விஶ்வாத்மா பகவான்
'விஶ்வாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இந்தப் ப்ரபஞ்சத்தின் உள்ளுறை ஆத்மாவாக இருப்பதால் பகவான் 'விஶ்வாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
226. ஓம்
ஸஹஸ்ராஷாய நம:
ஸஹஸ்ராண்யக்ஷீண்யக்ஷாணி (ஸஹஸ்ராணி அக்ஷீணி அக்ஷாணி) ஆயிரக்கணக்கான கண்களும் (அக்ஷீணி), புலனுறுப்புக்களும் (அக்ஷாணி)
வா யஸ்ய ஸ எவரிடம் உள்ளனவோ அவர் (அந்த பகவான்)
ஸஹஸ்ராக்ஷ: 'ஸஹஸ்ராக்ஷ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவானுக்கு ஆயிரக்கணக்கான கண்களும், புலனுறுப்புக்களும் உள்ளதால் அவர் 'ஸஹஸ்ராக்ஷ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
227. ஓம்
ஸஹஸ்ரபதே நம:
ஸஹஸ்ராணி ஆயிரக்கணக்கான
பாதா அஸ்யேதி திருப்பாதங்களை உடையவராதலால்
ஸஹஸ்ரபாத் பகவான் 'ஸஹஸ்ரபாத்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஆயிரக்கணக்கான திருப்பாதங்கள் உடையவராக இருப்பதால் பகவான் 'ஸஹஸ்ரபாத்' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
'ஸஹஸ்ரசீர்ஶா புருஶ: ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத்' (புருஶ ஸூக்தம் 1)
புருஶ ஸூக்தத்தில்
கூறப்பட்டுள்ளது: அந்த (பரம)புருஶன் ஆயிரக்கணக்கான
தலைகளை உடையவர்; அவருக்கு ஆயிரக்கணக்கான கண்களும், புலன்களும், பாதங்களும் உள்ளன.
இங்கு ஆயிரம் என்றால் எண்ணிலடங்கா என்று பொருள் கொள்ள வேண்டும்.
இதி ஶ்ருதே: | இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் கூறுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக