25. ஆவர்த்தனோ நிவ்ருத்தாத்மா ஸம்வ்ருத: ஸம்ப்ரமர்த்தன: |
அஹ: ஸம்வர்த்தகோ வஹ்னிரனிலோ தரணீதர: ||
இந்த இருபத்தி ஐந்தாவது ஸ்லோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.
228. ஆவர்த்தன:, 229. நிவ்ருத்தாத்மா, 230. ஸம்வ்ருத:, 231. ஸம்ப்ரமர்த்தன: |
232. அஹ: ஸம்வர்த்தக:, 233. வஹ்னி:, 234. அனில:, 235. தரணீதர: ||
அவற்றில் சில திருநாமங்களையும், அவற்றின் விளக்கத்தையும் இன்று அனுபவிக்கலாம்:
230. ஓம் ஸம்வருதாய
நம:
ஆச்சாதிகயா (பரம்பொருளை நம்மிடமிருந்து) மறைக்கும் தன்மையுடைய
அவித்யயா அறியாமையால்
ஸம்வ்ருதத்வாத் மூடப்பட்டுள்ளார்
ஸம்வ்ருத: எனவே, பகவான் 'ஸம்வ்ருத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
நமது அறியாமையானது அந்த பரம்பொருளை நாம் காணவொட்டாமல் நம்மிடமிருந்து அவரை மூடி மறைத்துள்ளது. இவ்வாறு, அறியாமையால் (அஞ்ஞானத்தால்) மூடியுள்ள படியால் அவர் 'ஸம்வ்ருத:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அத்வைதத்தின் படி, அஞ்ஞானத்தால் பிறப்பு, இறப்பென்னும் இந்த ஸம்ஸாரத்தில் ஜீவாத்மா தளைப்பட்டிருக்கிறான். ஞானத்தால் பரப்ரஹ்மத்தை உணர்ந்து மோக்ஷமடைகிறான். இங்கு, பரம்பொருளை அஞ்ஞானம் சூழ்ந்தது என்று பொருளல்ல (பகவானை அஞ்ஞானம் தீண்டாது). நமது அஞ்ஞானமானது (அறியாமையானது) பகவானை நம்மிடமிருந்து மூடி மறைத்துள்ளது என்று பொருள் கொள்ளவேண்டும்.
231. ஓம் ஸம்ப்ரமர்த்தனாய நம:
ஸம்யக் எல்லோரையும், எல்லாவிடங்களிலிருந்தும்
ப்ரமர்த்தயதீதி அழிக்கிறார்
ருத்ரகாலாத்யாபிர் ருத்ரன், காலன் (காலம்)
விபூதிபிர் இதி ஆகிய உருவங்களை தரித்து
ஸம்ப்ரமர்த்தன: பகவான் 'ஸம்ப்ரமர்த்தன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் ருத்ரன், காலன் (காலம்) ஆகிய உருவங்களை தரித்து அனைவரையும், அனைத்து இடங்களிலிருந்தும் (ப்ரளய காலத்தில்
ருத்ரனாகவும், அவரவரது ஆயுளின் முடிவில் காலனாகவும்) அழிக்கிறார். எனவே, அவர் 'ஸம்ப்ரமர்த்தன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஸம்யக் + ப்ரமர்த்தய = ஸம்ப்ரமர்த்தன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக