திங்கள், ஏப்ரல் 19, 2021

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 157

24. அக்ரணீர்க்ராமணீ: ஸ்ரீமான் ந்யாயோ நேதா ஸமீரண: |

ஸஹஸ்ரமூர்த்தா விஶ்வாத்மா ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத் ||

இந்த இருபத்தி நான்காவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

218. அக்ரணீ:, 219. க்ராமணீ:, 220. ஸ்ரீமான், 221. ந்யாய:, 222. நேதா, 223. ஸமீரண: |

224. ஸஹஸ்ரமூர்த்தா, 225. விஶ்வாத்மா, 226. ஸஹஸ்ராக்ஷ:, 227. ஸஹஸ்ரபாத் ||

அவற்றில் சில திருநாமங்களையும், அவற்றின் விளக்கத்தையும் இன்று அனுபவிக்கலாம்:

221. ஓம் ந்யாயாய நம:

ப்ரமாண உண்மையான அறிவை விளக்கும் சான்றுகளை 

அனுக்ராஹக சார்ந்து 

அபேதகாரகஸ் தர்கோ அத்வைதமென்னும் 'அபேத' தத்துவத்தை விளக்கும் தர்க்கமாய் இருப்பதால் (தர்க்கம் = வாதம், எதிர்வாதம் மூலம் உண்மையை அறியும் அறிவி

ந்யாய: பகவான் 'ந்யாய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

'ப்ரமா' என்றால் அறியப்படவேண்டிய உண்மைப் என்று பொருள். அதை நமக்கு அறிவிப்பவை 'ப்ரமாணங்கள்' எனப்படும். அத்தகைய ப்ரமாணங்களைச் சார்ந்து, வாத-எதிர்வாதம் மூலம் தர்க்க ரீதியாக அபேத (அத்வைத) தத்துவத்தை விளக்கும் முறைக்கு 'ந்யாயம்' என்று பெயர். பகவானே இந்த 'ந்யாய' வடிவினராய் இருப்பதால் அவர் 'ந்யாய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

நமது ஸனாதன தர்மத்தில் ஆறு வகைப் ப்ரமாணங்கள் உள்ளன. அவையாவன,

1.ப்ரத்யக்ஷம் (நேரடியாய் நம் புலன்களின் மூலம் அறிவது)

2. அனுமானம் (நம் முன்னனுபவத்தைக் கொண்டு அறிவது. உதாரணமாக, புகையுள்ள இடத்தில் நெருப்பும் இருக்கும். முன்பு நாம் நெருப்பையும், புகையையும் ஒன்று சேரப் பார்த்திருப்பதால் இவ்வாறு அறிகிறோம்)

3. உபமானம் (நாம் அறிந்த ஒன்றைக் கொண்டு, அறியாத ஒன்றை அறிய முயல்வது)

4. அர்த்தாபத்தி (யூகித்து அறிவது; ஒருவர் மாட்டு வண்டியில் காலைப் பயணித்தார். அடுத்த ஊரை அடைவதற்கு அரை நாள் ஆகும். எனவே, அவர் அடுத்த ஊரை அடைந்திருக்க வேண்டும்)

5. அனுபலப்தி (எதிர்மறை வாதங்களைக் கொண்டு ஒன்றை அறிவது. உதாரணமாக, "இங்கு தங்கத் தட்டு இல்லை" என்று ஒருவர் கூறினால், அவர் 'தங்கம்' என்ற பொருளையும், 'தட்டு' என்ற பொருளையும் ஏற்றுக்கொள்கிறார் என்று பொருள் கொள்ளலாம்)

6. ஶப்தம் (சொல் அல்லது கூற்று: ஒருவர் அல்லது ஒரு நூல் கூறுவதை அப்படியே ஏற்றுக்கொள்வது. வேதங்கள், உபநிடதங்கள் அனைத்தும் இந்த வகையைச் சேர்ந்ததாகும்) 

222. ஓம் நேத்ரே நம:

ஜகத்யந்த்ர இந்தப் ப்ரபஞ்சம் என்னும் இயந்திரத்தை 

நிர்வாஹகோ வழிநடத்துபவராக இருப்பதால் 

நேதா பகவான் 'நேதா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

இந்தப் ப்ரபஞ்சம் என்னும் இயந்திரத்தை வழிநடத்துபவராக இருப்பதால் பகவான் 'நேதா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

223. ஓம் ஸமீரணாய நம:

ஶ்வஸனரூபேண மூச்சுக்காற்றின் வடிவில் 

பூதானி அனைத்து உயிரினங்களையும் 

சேஶ்ட்யதீதி நடமாடச் செய்வதால் 

ஸமீரண: பகவான் 'ஸமீரண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

மூச்சுக்காற்றின் (ப்ராண வாயுவின்) வடிவில் அனைத்து உயிரினங்களையும் நடமாடச் செய்வதால் பகவான் 'ஸமீரண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக