வெள்ளி, ஏப்ரல் 23, 2021

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 159

24. அக்ரணீர்க்ராமணீ: ஸ்ரீமான் ந்யாயோ நேதா ஸமீரண: |

ஸஹஸ்ரமூர்த்தா விஶ்வாத்மா ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத் ||

இந்த இருபத்தி நான்காவது ஸ்லோகத்தில் 10 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.

218. அக்ரணீ:, 219. க்ராமணீ:, 220. ஸ்ரீமான், 221. ந்யாய:, 222. நேதா, 223. ஸமீரண: |

224. ஸஹஸ்ரமூர்த்தா, 225. விஶ்வாத்மா, 226. ஸஹஸ்ராக்ஷ:, 227. ஸஹஸ்ரபாத் ||

அவற்றில் சில திருநாமங்களையும், அவற்றின் விளக்கமும் (சுருக்கமாக): 

218ஓம் அக்ரண்யே நம:

அக்ரம் ப்ரக்ருஶ்டம் பதம் நயதி முமுக்ஷூனிதி அக்ரணீ: 

பகவான் முக்தியை விழைபவர்களை (முமுக்ஷுக்களை), அந்த முக்திக்கான மிகச்சிறந்த பாதையில் வழிநடத்திச் செல்கிறார்எனவேஅவர் 'அக்ரணீஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

219ஓம் க்ராமண்யே நம:

பூதக்ராமஸ்ய நேத்ருத்வாத் க்ராமணீ:

நீர்நிலம்நெருப்புகாற்றுஆகாயம் ஆகிய ஐம்பூதங்களை நியமித்து ஆள்வதால் பகவான் 'க்ராமணீஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

220ஓம் ஸ்ரீமதே நம:

ஸ்ரீகாந்திஸர்வாதிஶாயின்யஸ்யேதி ஸ்ரீமான்

அனைவரைக் காட்டிலும் (அனைத்தைக் காட்டிலும்மேலான ஒளி படைத்தவராக இருப்பதால் பகவான் 'ஸ்ரீமான்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

221ஓம் ந்யாயாய நம:

ப்ரமாண அனுக்ராஹக அபேதகாரகஸ் தர்கோ ந்யாய:

'ப்ரமாஎன்றால் அறியப்படவேண்டிய உண்மைப் என்று பொருள்அதை நமக்கு அறிவிப்பவை 'ப்ரமாணங்கள்எனப்படும்அத்தகைய ப்ரமாணங்களைச் சார்ந்துவாத-எதிர்வாதம் மூலம் தர்க்க ரீதியாக அபேத (அத்வைததத்துவத்தை விளக்கும் முறைக்கு 'ந்யாயம்என்று பெயர்பகவானே இந்த 'ந்யாயவடிவினராய் இருப்பதால் அவர் 'ந்யாய:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

222ஓம் நேத்ரே நம:

ஜகத்யந்த்ர நிர்வாஹகோ நேதா 

இந்தப் ப்ரபஞ்சம் என்னும் இயந்திரத்தை வழிநடத்துபவராக இருப்பதால் பகவான் 'நேதாஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

223ஓம் ஸமீரணாய நம:

ஶ்வஸனரூபேண பூதானி சேஶ்ட்யதீதி ஸமீரண: .

மூச்சுக்காற்றின் (ப்ராண வாயுவின்வடிவில் அனைத்து உயிரினங்களையும் நடமாடச் செய்வதால் பகவான் 'ஸமீரண:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

224ஓம் ஸஹஸ்ரமூர்த்னே நம:

ஸஹஸ்ராணி மூர்த்தானோSஸ்யேதி ஸஹஸ்ரமூர்த்தா

ஆயிரக்கணக்கான தலைகள் உடையவராக இருப்பதால் பகவான் 'ஸஹஸ்ரமூர்த்தாஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

225ஓம் விஶ்வாத்மனே நம:

விஶ்வஸ்யாத்மா விஶ்வாத்மா 

இந்தப் ப்ரபஞ்சத்தின் உள்ளுறை ஆத்மாவாக இருப்பதால் பகவான் 'விஶ்வாத்மாஎன்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

226ஓம் ஸஹஸ்ராஷாய நம:

ஸஹஸ்ராண்யக்ஷீண்யக்ஷாணி (ஸஹஸ்ராணி அக்ஷீணி அக்ஷாணிவா யஸ்ய ஸ ஸஹஸ்ராக்ஷ: 

பகவானுக்கு ஆயிரக்கணக்கான கண்களும், புலனுறுப்புக்களும் உள்ளதால் அவர் 'ஸஹஸ்ராக்ஷ:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். 

227ஓம் ஸஹஸ்ரபதே நம:

ஸஹஸ்ராணி பாதா அஸ்யேதி ஸஹஸ்ரபாத் 

ஆயிரக்கணக்கான திருப்பாதங்கள் உடையவராக இருப்பதால் பகவான் 'ஸஹஸ்ரபாத்என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக