25. ஆவர்த்தனோ நிவ்ருத்தாத்மா ஸம்வ்ருத: ஸம்ப்ரமர்த்தன: |
அஹ: ஸம்வர்த்தகோ வஹ்னிரனிலோ தரணீதர: ||
இந்த இருபத்தி ஐந்தாவது ஸ்லோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.
228. ஆவர்த்தன:, 229. நிவ்ருத்தாத்மா, 230. ஸம்வ்ருத:, 231. ஸம்ப்ரமர்த்தன: |
232. அஹ: ஸம்வர்த்தக:, 233. வஹ்னி:, 234. அனில:, 235. தரணீதர: ||
அவற்றில் சில திருநாமங்களையும், அவற்றின் விளக்கத்தையும் இன்று அனுபவிக்கலாம்:
234. ஓம்
அனிலாய நம:
அனிலய: (காற்று வடிவில்) எந்த ஒரு குறிப்பிட்ட இடத்திலும் நிலைக்காது சென்றுகொண்டே இருப்பதால்
அனில: பகவான்
'அனில:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
(காற்று வடிவில்) எந்த ஒரு குறிப்பிட்ட இடத்திலும் நிலைக்காது சென்றுகொண்டே இருப்பதால் பகவான் 'அனில:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அநாதித்வாத் தொடக்கமும், முடிவும் இல்லாமையால்
அனில: பகவான்
'அனில:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் வாயு (காற்றின்) வடிவாய் உள்ளார். காற்றிற்கு தொடக்கமோ, முடிவோ இல்லை. எனவே, காற்றின் வடிவில் இருக்கும் பகவான் 'அனில:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அநாதானாத்வா அவரை கைப்பிடிக்குள் அடக்க (க்ரஹிக்க) முடியாது
அனில: எனவே பகவான்
'அனில:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் வாயு (காற்றின்) வடிவாய் உள்ளார். அவரை கைப்பிடிக்குள் அடக்க (க்ரஹிக்க) முடியாது. எனவே, பகவான் 'அனில:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அநநாத்வா (மூச்சுக்காற்றின் வடிவில்) அனைத்தையும் இயக்குவதால்
அனில: பகவான் 'அனில:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
(மூச்சுக்காற்றின் வடிவில்) அனைத்தையும் இயக்குவதால் பகவான் 'அனில:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
அனில: என்றால் ஓரிடத்தில்
நிலையில்லாதது (காற்று) என்று பொருள். இந்த திருநாமத்தையும் அவ்வாறே ஆச்சார்யர் விளக்கியுள்ளார். இதிலுள்ள வெவ்வேறு
அர்த்தங்களால், வாயுவின் வெவ்வேறு குணங்களைக் கொண்டு பகவானை வர்ணித்துள்ளார்
ஆதிசங்கரர்.
235. ஓம் தரணீதராய நம:
சேஶதிக்கஜாதி ரூபேண ஆதிசேடன், எட்டு திக்கிலும் இந்தப் ப்ரபஞ்சத்தைத் தாங்கும் யானைகள் (அஷ்ட திக்கஜங்கள்) ஆகிய வடிவிலும்
வராஹரூபேண ச வராஹ அவதாரத்தின் பொழுதும்
தரணீம் பூமியை
தத்த இதி தாங்குவதால்
தரணீதர: பகவான் 'தரணீதர:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் ஆதிசேஷன் மற்றும் எட்டு
திக்கிலும் இந்தப் ப்ரபஞ்சத்தைத் தாங்கும் யானைகள் (அஷ்ட திக்கஜங்கள்) வடிவில்
இந்தப் ப்ரபஞ்சத்தைத் தாங்குகிறார். மேலும், பூமியை ஹிரண்யாக்ஷன் கடலுக்கடியில் மறைத்து வைத்த பொழுது வராஹ
அவதாரமெடுத்து பூமியை மீட்டார். எனவே, பகவான்
'தரணீதர:' என்ற திருநாமத்தால்
அழைக்கப்படுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக