25. ஆவர்த்தனோ நிவ்ருத்தாத்மா ஸம்வ்ருத: ஸம்ப்ரமர்த்தன: |
அஹ: ஸம்வர்த்தகோ வஹ்னிரனிலோ தரணீதர: ||
இந்த இருபத்தி ஐந்தாவது ஸ்லோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.
228. ஆவர்த்தன:, 229. நிவ்ருத்தாத்மா, 230. ஸம்வ்ருத:, 231. ஸம்ப்ரமர்த்தன: |
232. அஹ: ஸம்வர்த்தக:, 233. வஹ்னி:, 234. அனில:, 235. தரணீதர: ||
அவற்றில் சில திருநாமங்களையும், அவற்றின் விளக்கத்தையும் இன்று அனுபவிக்கலாம்:
228. ஓம் ஆவர்த்தனாய நம:
ஆவர்த்தயிதும் சுழற்றுவது (சுழற்றுவதை)
ஸம்ஸார சக்ரம் பிறப்பு, இறப்பென்னும் இந்த ஸம்ஸார சக்கரத்தை
ஶீலமஸ்யேதி இயற்கையான குணமாக (கொண்டுள்ளபடியால்)
ஆவர்த்தன: பகவான் 'ஆவர்த்தன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பிறப்பு, இறப்பென்னும் இந்த ஸம்ஸார சக்கரத்தை
சுழற்றுவதை தனக்கு இயற்கையான குணமாகக் கொண்டுள்ளபடியால், பகவான் 'ஆவர்த்தன:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
229. ஓம் நிவ்ருத்தாத்மனே நம:
ஸம்ஸாரபந்தான் ஸம்ஸாரத் தளைகளில்
நிவ்ருத்த ஆத்மா கட்டுப்படாத ஆத்மா (ஆத்மாவை உடையவராக இருப்பதால்)
ஸ்வரூபமஸ்யேதி இயற்கையாகவே
நிவ்ருத்தாத்மா பகவான் 'நிவ்ருத்தாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
இந்த ஸம்ஸாரமென்னும் சக்கரத்தை சுழற்றுபவராக இருப்பினும், இயற்கையாகவே அவர் இந்த ஸம்ஸாரத் தளைகளில் கட்டுப்படுவதில்லை. எனவே, பகவான் 'நிவ்ருத்தாத்மா' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக