25. ஆவர்த்தனோ நிவ்ருத்தாத்மா ஸம்வ்ருத: ஸம்ப்ரமர்த்தன: |
அஹ: ஸம்வர்த்தகோ வஹ்னிரனிலோ தரணீதர: ||
இந்த இருபத்தி ஐந்தாவது ஸ்லோகத்தில் 8 திருநாமங்கள் உள்ளன. அவையாவன.
228. ஆவர்த்தன:, 229. நிவ்ருத்தாத்மா, 230. ஸம்வ்ருத:, 231. ஸம்ப்ரமர்த்தன: |
232. அஹ: ஸம்வர்த்தக:, 233. வஹ்னி:, 234. அனில:, 235. தரணீதர: ||
அவற்றில் சில திருநாமங்களையும், அவற்றின் விளக்கத்தையும் இன்று அனுபவிக்கலாம்:
232. ஓம் அஹ:
ஸம்வர்த்தகாய நம:
ஸம்யகஹ்னாம் சரியாக ஒவ்வொரு நாளையும் (பகல் பொழுதையும்)
ப்ரவர்த்தநாத் உருவாக்குகின்ற
ஸூர்ய: கதிரவனின் வடிவானவராய் இருப்பதால்
அஹ: ஸம்வர்த்தக: பகவான் 'அஹ: ஸம்வர்த்தக:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
பகவான் கதிரவனின் வடிவில் ஒவ்வொரு நாளையும் (பகல் பொழுதையும்) சரியாக உருவாக்குகிறார். எனவே, அவர் 'அஹ: ஸம்வர்த்தக:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
233. ஓம்
வஹ்னயே நம:
ஹவிர் யாகங்களிலும், ஹோமங்களிலும் அளிக்கப்படும் ஹவிஸ்ஸை (ஹவிஸ் - தேவர்களின் உணவு)
வஹநாத் தேவர்களுக்குக் கொண்டு செல்லும்
வஹ்னி: அக்னியின் வடிவாய் இருப்பதால் பகவான் 'வஹ்னி:' என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
யாகங்களிலும், ஹோமங்களிலும்
அளிக்கப்படும் ஹவிஸ்ஸை (ஹவிஸ் - தேவர்களின்
உணவு) தேவர்களுக்குக் கொண்டு செல்லும் அக்னியின் வடிவாய்
இருப்பதால் பகவான் 'வஹ்னி:' என்ற
திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக