தஸ்ய லோகப்ரதானஸ்ய ஜகன்னாதஸ்ய பூபதே |
விஶ்ணோர்நாமஸ்ஹஸ்ரம் மே ஶ்ருணு பாபபயாபஹம் || 12 ||
தஸ்ய, லோகப்ரதானஸ்ய,
ஜகன்னாதஸ்ய, பூபதே |
விஶ்ணோ:, நாமஸஹஸ்ரம், மே, ஶ்ருணு, பாபபயாபஹம் ||
ஹே பூவுலகின்
அரசனே (யுதிஷ்டிரனே)! மேற்சொன்ன இத்தகைய லக்ஷணங்களால் குறிப்பிடப்படும் அந்த ஒரே
முழுமுதற் கடவுளும், அனைத்து உலகங்களும் தோன்றுவதற்குக் காரணமாகவும், ஞானத்தினால்
அறியப்படுபவரும், அனைத்துலகின் ஸ்வாமியும், மாயைகள் அற்றவரும், எங்கும்
நிறைந்துள்ளவருமான, பகவான் ஸ்ரீ விஶ்ணுவின் – “நமது தீவினையால் உருவான பாபங்களைப்
போக்குவதும், சம்ஸார பயத்தைப் போக்குவதுமான” – ஆயிரம் திருநாமங்களை என்னிடமிருந்து
கேட்பாயாக; (அவற்றை நீ) ஒருமித்த சிந்தையுடன் க்ரஹித்துக் கொள்வாயாக.
தஸ்ய ஏவம் லக்ஷணலக்ஷிதஸ்ய ஏகதைவஸ்ய மேற்சொன்ன இத்தகைய
லக்ஷணங்களால் குறிப்பிடப்படும் அந்த ஒரே முழுமுதற் கடவுளும்
லோகப்ரதானஸ்ய லோகனஹேதுபி:
வித்யாஸ்ஸ்தானை: பிரதிபாத்யமானஸ்ய அனைத்து உலகங்களும் தோன்றுவதற்குக் காரணமாகவும்,
ஞானத்தினால் அறியப்படுபவரும்,
ஜகன்னாதஸ்ய ஜகதாம் நாத: ஸ்வாமி மாயாஷபல: பரமாத்மா நிர்லேபஸ்ச தஸ்ய அனைத்துலகின் ஸ்வாமியும்,
மாயைகள் அற்றவரும்,
பூபதே மஹிபால பூவுலகின் அரசனே
விஶ்ணோ: வ்யாபனஷீலஸ்ய எங்கும் நிறைந்துள்ளவருமான, பகவான் ஸ்ரீ விஶ்ணுவின்
நாமஸஹஸ்ரம் நாம்னாம் ஸஹஸ்ரம் ஆயிரம் திருநாமங்களை
பாபபயாபஹம் அஶுபகர்மக்ருதம் பாபம் ஸம்ஸாரலக்ஷணபயம்
சாபஹந்தீதி, நமது தீவினையால் உருவான பாபங்களைப் போக்குவதும், சம்ஸார பயத்தைப்
போக்குவதுமான
த்வம் மே மத்த: ஶ்ருணு என்னிடமிருந்துக்
கேட்பாயாக ஏகாக்ராமணா பூத்வாவதாரயேத்யர்த்த: ஒருமித்த சிந்தையுடன் அதை
நீ க்ரஹித்துக் கொள்வாயாக
ஏகஸ்யைவ
ஸமஸ்தஸ்ய ப்ரஹ்ணோ த்விஜஸத்தம |
நாம்னாம்
பஹுத்வம் லோகானாமுபகாரகரம் ஶ்ருணு ||
ஸ்ரீ விஶ்ணு
தர்மத்தில் கூறப்பட்டுள்ளது:
இருபிறப்புடையோரில்
சிறந்தவனே (அந்தணனே)!! எங்கும் நிறைந்துள்ள அந்த ஒரே பரப்ரஹ்மத்தின்
பல திருநாமங்கள் உலகிற்கு (உலக மக்களுக்கு) நன்மை தருவனவாகும். அவற்றை கேட்பாயாக!!
நிமித்தஶக்தயோ
நாம்னாம் பேதின்யஸ்ததுதீரனாத் |
விபின்னான்யேவ
சாத்யந்தே ஃபலானி த்விஜஸத்தம ||
ஸ்ரீ விஶ்ணு
தர்மத்தில் கூறப்பட்டுள்ளது:
இருபிறப்புடையோரில்
சிறந்தவனே (அந்தணனே)!! இந்த திருநாமங்களை வெவ்வேறாக உச்சரித்துத்
த்யானிப்பதர்க்கு அவற்றின் (வெவ்வேறான) நிமித்த சக்திகளே காரணமாகும். எனவே, ஒவ்வொரு நாமத்திற்கும் அதன்
நிமித்த சக்தியை பொறுத்தும், த்யானிப்பவரின் தன்மையை பொறுத்தும் வெவ்வேறான பலன்கள்
கிடைக்கின்றன.
யச்சக்தி
நாம யத்தஸ்ய தத்தஸ்மின்னேவ வஸ்துனி |
சாதகம்
புருஶவயாக்ர சௌம்யே க்ரூரேஶு வஸ்துஶு ||
ஸ்ரீ விஶ்ணு
தர்மத்தில் கூறப்பட்டுள்ளது:
ஹே
மனிதர்களில் புலி போன்றவனே!!! ஒவ்வொரு திருநாமத்திற்கும் உள்ள சக்தியானது, (த்யானிப்பவரின்) மன நிலையை பொறுத்து
மென்மையான அல்லது கடினமான உருக்கொள்கிறது.
இதி விஶ்ணுதர்மவசனாத்யத்யபி
பரஸ்ய ப்ரஹ்மண: ஶஶ்டிகுணக்ரியாஜாதிரூடீனாம் ஶப்தப்ரவ்ருத்திஹேதுபூதானாம்
நிமித்தஶக்தினாம் ஸ அஸம்பவ:
இந்த விஶ்ணுதர்மோத்தர
புராணத்தின் வாக்கியத்தின் படி, (நிர்குண, நிர்விஷேஷன) பரப்ரஹ்மத்தை உறவு, குணம், செயல், ஜாதி மற்றும் குறிப்பு சொற்கள் (போன்ற நாமங்களால்) மூலம் விவரிக்க இயலாது.
ததாபி
ஸகுணே ப்ரஹ்மணி ஸவிகாரே ச ஸர்வாத்மகத்வாத்தேஶாம் ஶப்தப்ரவ்ருத்திஹேதூநாம் ஸம்பவாத் ஸர்வே ஶப்தா: பரஸ்மின் பும்ஸி வர்தந்தே ||
ஆயினும்
பரப்ரஹ்மம் அனைத்துமாய் இருப்பதனால் சகுண ப்ரஹ்மத்தை இத்தகைய நாமங்களால் விவரிக்க இயலும்.
அனைத்தும் ப்ரஹ்மமேயாதலால், அனைத்தும் நாமங்களும் அந்த ஒப்பற்ற பரம்பொருளையே
குறிக்கும்.
தத்ர அவற்றுள் எந்தெந்த திருநாமங்களை கூறுகிறார் என்பதை பீஶ்மாசார்யார் அடுத்த ஸ்லோகத்தில் விளக்குகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக