28/Apr/2018: இன்றைய தினம் ஸ்ரீநரஸிம்ஹ ஜெயந்தி மஹோத்ஸவ நன்னாள். இன்றைய திருநாளில், காஞ்சி காமகோடி ஆச்சார்யாள் திருப்பாதங்களையும், எனது குலதெய்வமான கனகவல்லி நாயிகா ஸமேத ஸ்ரீவீரராகவரின் திருவடிகளையும் தொழுது, ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் முதல் திருநாமமான விஸ்வத்தின் ("விஸ்வஸ்மை நம:") உரையை தொடங்குகிறேன்.
1. ஓம் விஶ்வம் விஶ்ணுர்வஷட்காரோ பூதபவ்யபவத்பிரபு: |
பூதக்ருத்பூதப்ருத்பாவோ பூதாத்மா பூதபாவன: || 1 ||
இந்த முதல் ஸ்லோகத்தில் மொத்தம் 9 திருநாமங்கள் உள்ளன. அவையாவன,
1. விஶ்வம் 2. விஶ்ணு: 3. வஷட்கார: 4. பூதபவ்யபவத்பிரபு: |
5. பூதக்ருத் 6. பூதப்ருத் 7. பாவ: 8. பூதாத்மா 9. பூதபாவன: ||
1. ஓம் விஶ்வஸ்மை நம:
(விஶ்வம் எனும்) இந்த பிரபஞ்சத்தின் காரணமாய் இருப்பதால் பகவான் ‘விஶ்வம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ஆதௌ
து முழுமுதல் விஶ்வமிதி
கார்யஶப்தேன விஶ்வம் எனும் காரியத்தால் (வினைப்பயனால்) காரணக்ரஹனம் காரணத்தை
(பிரபஞ்ச உற்பத்தி எனும் வினை புரிபவரை)
அறிந்து கொள்ளலாம் கார்யபூத-விரிஞ்ச்யாதிநாமபிரபி
இந்த உலகின் உற்பத்திக்கு நேரடி (ப்ரத்யக்ஷ)
காரணமாய் இருக்கும் ப்ரஹ்மா முதலிய திருநாமங்களும் உபபன்னா ஸ்துதிர்விஷ்ணோரிதி தர்ஶயிதும் பகவான் ஸ்ரீவிஶ்ணுவின் புகழையேப் பாடுகின்றன |
விஶ்வம்
எனும் காரியத்தால் (வினைப்பயனால்), முழுமுதல் காரணத்தை (பிரபஞ்ச உற்பத்தி எனும் வினை புரிபவரை) அறிந்து கொள்ளலாம். இந்த உலகின் உற்பத்திக்கு
நேரடி (ப்ரத்யக்ஷ) காரணமாய் இருக்கும் ப்ரஹ்மா முதலிய
திருநாமங்களும் பகவான் ஸ்ரீவிஶ்ணுவின் புகழையேப் பாடுகின்றன (ஏனெனில், ப்ரஹ்மாவும் பரப்ரஹ்மமான விஶ்ணுவே).
யத்வா, அல்லது
பரஸ்மாத் புருஶான்ன பரமபுருஶனான பரமாத்மா பரப்ரஹ்மத்தினிடம் (அ)பின்னமிதம் ஒன்றியே (அதனின்று வேறுபடாது) விஶ்வம் இந்த பிரபஞ்சமானது இருப்பதால் பரமார்த்ததஸ்தேன விஶ்வம்
இத்யபிதீயதே ப்ரஹ்ம விஶ்வம்
என்று பரப்ரஹ்மத்தை அழைக்கின்றனர் |
அல்லது,
இந்த பிரபஞ்சமானது உண்மையில் பரமபுருஶனான பரமாத்மா பரப்ரஹ்மத்தினிடம் ஒன்றியே (அதனின்று வேறுபடாது) இருப்பதால் பகவான் ‘விஶ்வம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
ப்ரஹ்மைவேதம் விஷ்வமிதம் வரிஷ்டம் (முண்டக உபநிஶத் 2.2.12)
முண்டக உபநிடதத்தில் கூறப்பட்டுள்ளது: இந்த உலகம் மேலான இந்த ப்ரஹ்மனாகவே
உள்ளது.
புருஶ ஏவேதம் விஷ்வம் (முண்டக உபநிஶத் 2.1.1௦)
முண்டக உபநிடதத்தில் கூறப்பட்டுள்ளது: இந்த உலகம் (புருஶனான) ப்ரஹ்மனாகவே உள்ளது.
இத்யாதி ஸ்ருதிப்யஸ்தத்பின்னம் ந கிஞ்சித் பரமார்த்தத: சதஸ்தி |
இந்த
(முண்டகோபனிஷத்) ஸ்ருதி வாக்கியங்களின் மூலம், ப்ரஹ்மத்தைத்
தவிர்த்து (இந்த பிரபஞ்சத்தில்) வேறொன்றும் இல்லை என்பது விளங்கும்.
அதவா அல்லது விஶதீதி புகுவதனால் விஶ்வம் இந்த ப்ரபஞ்சத்தினுள் ப்ரஹ்ம பரப்ரஹ்மமான பகவானை “விஶ்வம்” என்ற திருநாமத்தால் அழைக்கின்றனர்.
அல்லது,
இந்த ப்ரபஞ்சத்தினுள் புகுவதனால் பகவான் ‘விஶ்வம்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘தத் ஸ்ருஶ்டா ததேவானுப்ராவிஶத்’ (தைத்ரீய உபநிஶத் 2.6)
தைத்ரீய உபநிடதத்தில் கூறப்பட்டுள்ளது: (பரப்ரஹ்மம்) அவற்றைப் படைத்து அதிலேயே நுழைந்தார்.
இதி ஶ்ருதே இவ்வாறு (தைத்ரீய உபநிஶத்) வாக்கியம் கூறுகின்றது.
கிஞ்ச ஸம்ஹ்ருதௌ பிரளய காலத்தில் விஶந்தி சென்று லயமடைவதால் ஸர்வாணி பூதான்யஸ்மின்னிதி இந்த பிரபஞ்சமும், அதிலுள்ள அனைத்து ஜீவராசிகளும் விஶ்வம் ப்ரஹ்ம பரப்ரஹ்மமான பகவானை “விஶ்வம்”
என்ற திருநாமத்தால் அழைக்கின்றனர்.
பிரளய
காலத்தில் இந்த பிரபஞ்சமும், அதிலுள்ள அனைத்து ஜீவராசிகளும் அந்த ப்ரஹ்மத்தை
சென்று லயமடைவதால் பகவான் ‘விஶ்வம்’
என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.
‘யத் ப்ரயந்த்யபிஸம்விஶந்தி’ (தைத்ரீய உபநிஶத் 3.1)
தைத்ரீய உபநிடதத்தில் கூறப்பட்டுள்ளது: இறப்பவை அனைத்தும் எதை (எந்த ப்ரஹ்மத்தை) சென்றடைகின்றனவோ...
இதி ஶ்ருதே இவ்வாறு (தைத்ரீய உபநிஶத்) ஸ்ருதி வாக்கியம் கூறுகின்றது.
ததா ஹி ஸகலம் ஜகத் அனைத்து பிரபஞ்சத்தையும் கார்யபூதமேஶ விஶத்யத்ர சாகிலம் அதனுள் பிரவேசித்து பிரபஞ்சத்தை உருவாக்கியும் விஶதீத்யுபயதாபி பிரளய காலத்தில் அனைத்து பிரபஞ்சத்தையும்
தன்னுள்ளே லயமடையச் செய்வதாலும் விஶ்வம் ப்ரஹ்ம இதி பரப்ரஹ்மமான பகவானை “விஶ்வம்”
என்ற திருநாமத்தால் அழைக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக