வெள்ளி, ஏப்ரல் 06, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 27

"கிமேகம் தைவதம் லோகே?", "உலகத்தின் ஒரே முழுமுதற் கடவுள் யார்?" என்ற முதல் கேள்விக்கு விடையாக பீஷ்மாச்சார்யார், 


"பவித்ராணாம் பவித்ரம் யோ மங்களானாம் ச மங்களம் |
தைவதம் தேவதானாம் ச பூதானாம் யோவ்யய: பிதா ||" என்று கூறுகிறார்.

அந்த ஸ்லோகத்தின் "மங்களானாம் ச மங்களம்" என்று தொடங்கும் 3 பதங்களுக்கு ஆச்சார்யாள் உரை அளிக்கையில் அத்வைதத்தின் ஸாரத்தை ஸ்ருதி, ஸ்ம்ருதி வாக்யங்களைக் கொண்டு விளக்கி வருவதைப் பார்க்கிறோம். இன்று மேலும் சில உபநிஶத், புராண வாக்யங்களைக் கொண்டு ஜீவ-ப்ரஹ்ம அபேதத்தை ஆச்சார்யாள் விளக்குவதைக் காண்போம்.

ததா மேலும்,

ஆத்மைவேதம் (ஆத்மா ஏவ இதம்) ஸர்வம் (சாந்தோக்ய உபநிஶத் 7.25.2)
சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: இங்கு அனைத்தும் ஆத்மாவே

ஆத்மனி விஞ்ஞாதே ஸர்வமிதம் விஞ்ஞாதம் பவதி
இதம் ஸர்வம் யதயமாத்மா (ப்ருஹதாரண்யக உபநிஶத் 2.4.6)
ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: ஆத்மாவை அறிவதன் மூலம் இந்த அனைத்தையும் அறிந்து கொள்ள முடியும். இங்கு என்ன உள்ளதோ அது அனைத்தும் ஆத்மாவே.

ப்ரஹ்மைவேதம் (ப்ரஹ்ம ஏவ இதம்) விஶ்வம் (முண்டக உபநிஶத் 2.2.11)
முண்டக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: இங்கு அனைத்தும் ப்ரஹ்மமே.

இதி ஸ்ருதி இவை ஸ்ருதி வாக்கியங்கள் (பேதங்களை மறுக்கிறது).
ததா ஸ்ம்ருதிரபி ஸ்ம்ருதிகளும் கூறுகின்றன –

யஞ்ஞாத்வா ந புனர்மோஹமேவம் யாஸ்யஸி பாண்டவ |
யேன பூதான்யஶேஶேன த்ரஶ்ஷ்யஸ்யாத்மன்யதோ மயி || (ஸ்ரீ பகவத்கீதை 4.35)
ஸ்ரீ பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது: அந்த ஞானம் பெறுவதனால், பாண்டவா, நீ அப்பால் இவ்வித மயக்கமெய்த மாட்டாய். இதனால் நீ எல்லா உயிர்களையும், மிச்சமின்றி நின்னுள்ளே காண்பாய். அப்பால் அவற்றை என்னுள்ளே காண்பாய்.

க்ஷேத்ரக்ஷேத்ரஞேஷ்வரைகத்வம் ஸர்வோபநித் ப்ரஸித்தம் த்ரக்ஷ்யஸீத்யர்த்த: அனைத்து உபநிஶத்களிலும் கூறியுள்ளப்படி ஜீவாத்ம, பரமாத்ம ஐக்கியத்தை உணர்வாய் என்பதே இதன் (மேற்கண்ட பகவத் கீதை ஸ்லோகத்தின்) அர்த்தமாகும்.

ஸர்வபூதேஶு ஏனைகம் பாவமவ்யயமீக்ஷதே |
அவிபக்தம் விபக்தேஶு தஞ்ஞானம் வித்தி ஸாத்விகம் || (ஸ்ரீ பகவத்கீதை 18.20)
ஸ்ரீ பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது: பிரிவுபட்டு நிற்கும் எல்லா உயிர்களிலும் பிரிவற்ற நாசமற்ற ஒரே இயல்பை காணும் ஞானம் சாத்வீகமென்றறி.

இதி அத்வைதாத்மஞானம் சம்யக்தர்னமித்யுக்தம் பகவதாபி |  இவ்வாறு பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் (ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்று) என்ற அத்வைத ஞானமே சரியானதென்று கூறுகிறார். தஸ்மாதாத்மன்யேவேஶ்வரே மனோ ததீத |  எனவே ஆத்ம ஸ்வரூபமான அந்த ஈஸ்வரனிடத்திலேயே நமது மனதை ஈடுபடுத்த வேண்டும்.

பூதாத்மா சேந்தரியாத்மா ச ப்ரதானாத்மா ததா பவான் |
ஆத்மா ச பரமாத்மா ச த்வமேக: பஞ்சதா ஸ்தித: || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 5.18.50)
ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: ஜீவ ராசிகள், இந்த்ரியங்கள், மூல பொருட்கள் மற்றும் ஜீவாத்மாவிற்குள் உள்ளுறையும் ஆத்மாவாகவும், பரமாத்மாவாகவும் ஆகிய இந்த ஐந்து நிலைகளிலும் தாங்களே நிலைபெற்றுள்ளீர்கள்.
இதி ச  என்று (ஸ்ரீ விஶ்ணு புராணத்தில்) கூறப்பட்டுள்ளது.

அதவா பஹுனைதேன கிம் ஞாதேன தவார்ஜுன |
விஷ்ட்ப்யாஹமிதம் க்ருத்ஸ்னமேகாம்ஶேன ஸ்திதோ ஜகத் || (ஸ்ரீ பகவத் கீதை 10.42)
ஸ்ரீ பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது: அன்றி, இதைப் பலவாறாக தெரிவதில் உனக்கு பயன் யாது அர்ஜுனா? எனது கலையொன்றால் இவ்வையகத்தை நிலை நிறுத்தியுள்ளேன்.

இதி ச  என்று (ஸ்ரீ பகவத் கீதையில்) கூறப்பட்டுள்ளது.

அவித்யோபாதிபக்ஷ்யேSபி ப்ரமாண வாத: ஸமஸ்தி (அத்வைதத்திற்கு மாற்றான) அவித்யை ஒரு உபாதி என்று கூறும் ப்ரமாண வாதத்திலும் கூட இவ்வாறு கூறப்பட்டுள்ளது:

ஏக ஏவ மஹானாத்மா ஸோSஹகங்காரோSபிதீயதே |
ஸ ஜீவ: ஸோSந்தராத்மேதி கீயதே தத்வசிந்தகை: ||
அந்த ஒரே பெரியதான ஆத்மாவையே அஹங்காரம் என்று கூறுகிறார்கள். தத்வ ஞானத்தை அறிய விழைபவர்கள் இதையே (அந்த ஒரே ஆத்மாவையே) அனைத்து ஜீவராசிகளிலும் உள்ளுறையும் அந்தராத்மாவாக வர்ணிக்கிறார்கள்.

ததா விஶ்ணு புராணே ஸ்ரீ விஶ்ணு புராணத்திலும்,

விபேதஜனகேSஞானே நாமாத்யந்திகம் கதே |
ஆத்மனோ ப்ரஹ்மணோ பேதமஸந்தம் க: கரிஷ்யதி || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 6.7.96)
ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: வேறுபாடுகளை கற்பிக்கும் (அஞ்ஞானம்) அறியாமை அழிந்தபிறகு, ஆத்மாவிற்கும் ப்ரஹ்மத்திற்கும் இல்லாததான ஒரு பேதத்தை யார் கூறுவார்கள்?

பராத்மனோர்மனுஶ்யேந்திர விபாகோSஞானகல்பித: |
க்ஷயே தஸ்யாத்மபரயோர்விபாகோSபாக ஏவ ஹி || (ஸ்ரீ விஶ்ணு புராணம்)
ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: ஒ அரசனே! ப்ரஹ்மத்திற்கும், ஜீவாத்மாவிற்கும் பேதம் இல்லை. அந்த பேதத்தை உருவாக்குவது அஞ்ஞானமே. அந்த அஞ்ஞானம் அழிந்த பிறகு, பேதமும் மறைந்து விடுகிறது.
இதி (ஸ்ரீ விஶ்ணு புராணத்திலும்) இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

விஶ்ணுதர்மே ஸ்ரீ விஶ்ணு தர்மத்தில்,

யதைகஸ்மின் கடாகாசே ரஜோதூமாதிபிர்யுதே |
நான்யே மலினதாம் யாந்தி தூரஸ்தா: குத்ரசித் க்வசித் || (ஸ்ரீ விஶ்ணு தர்மம்)
ஸ்ரீ விஶ்ணு தர்மத்தில் கூறப்பட்டுள்ளது: ஒரு குடத்தில் இருக்கும் ஆகாசமானது (வெளியானது) அந்த குடத்தில் இருக்கும் மாசுகளால் தூய்மை இழந்தாலும், (அந்த குடத்தின் வெளியே இருக்கும்) பரந்த ஆகாசமானது இதனால் மாசடைவதில்லை. அதைப்போலவே, ஒரு உடலினுள் இருக்கும் ஜீவாத்மாவானது, (அஞ்ஞானத்தினால் தூண்டப்பட்ட) இருமைகளால் பாதிக்கப்பட்டாலும், அதனால் மற்ற ஜீவாத்மாக்கள் பாதிக்கப்படுவதில்லை.

இதி (ஸ்ரீ விஶ்ணு தர்மத்திலும்) இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக