செவ்வாய், ஏப்ரல் 03, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 24

"கிமேகம் தைவதம் லோகே?", "உலகத்தின் ஒரே முழுமுதற் கடவுள் யார்?" என்ற முதல் கேள்விக்கு விடையாக பீஷ்மாச்சார்யார், 


"பவித்ராணாம் பவித்ரம் யோ மங்களானாம் ச மங்களம் |
தைவதம் தேவதானாம் ச பூதானாம் யோவ்யய: பிதா ||" என்று கூறுகிறார்.

அந்த ஸ்லோகத்தின் "மங்களானாம் ச மங்களம்" என்று தொடங்கும் 3 பதங்களுக்கு ஆச்சார்யாள் உரை அளிக்கையில் அத்வைதத்தின் ஸாரத்தை ஸ்ருதி, ஸ்ம்ருதி வாக்யங்களைக் கொண்டு விளக்கி வருவதைப் பார்க்கிறோம். இப்பொழுது அதன் தொடர்ச்சியாக ஹரிவம்ஶம் மற்றும் ஸ்ரீ பவிஶ்யோத்தர புராணத்தில் பரமசிவன் மும்மூர்த்திகளின் ஐக்கியத்தைப் பற்றி கூறியுள்ள சில மேற்கோள்களை ஆச்சார்யாள் எடுத்துக்காட்டுகிறார். அவற்றை இன்று காண்போம்.

விஶ்ணோரண்யம் து பஶ்யந்தி யே மாம் ப்ரஹ்மானமேவ வா |
குதர்க்கமதயோ மூடா: பஶ்யந்தே நரகேஶ்வத: || (ஸ்ரீ பவிஶ்யோத்தர புராணம்)
ஸ்ரீ பவிஶ்யோத்தர புராணத்தில் பரமசிவனார் கூறுகிறார்: எவரொருவர் என்னையும், ப்ரஹ்மாவையும் பகவான் ஸ்ரீ விஶ்ணுவிடமிருந்து வேறாகப் பார்க்கிறார்களோ, அந்த ஏமாற்றும் எண்ணம் கொண்ட மூடர்கள் தாழ்ந்த நரகத்தில் வீழ்ந்து துன்பப்படுவார்கள்.

யே ச மூட துராத்மானோ பின்னம் பஷ்யந்தி மாம் ஹரே: |
ப்ரஹ்மாணம் ச ததஸ்தஸ்மாத் ப்ரஹ்மஹத்யாஸம் த்வகம் || (ஸ்ரீ பவிஶ்யோத்தர புராணம்)
ஸ்ரீ பவிஶ்யோத்தர புராணத்தில் பரமசிவனார் கூறுகிறார்: மற்றும் எந்த துர்புத்தி படைத்த ஒருவன் என்னையும் ப்ரஹ்மாவையும் பகவான் ஸ்ரீ விஶ்ணுவிடமிருந்து வேறாகப் பார்க்கிறானோ அவனுக்கு ப்ரஹ்மஹத்திக்கு சமமான பாபம் வந்தடைகிறது.

இதி ஸ்ரீ பவிஶ்யோத்தர புராணே மகேஶ்வரவசனம் இவ்வாறு ஸ்ரீ பவிஶ்யோத்தர புராணத்தில் பரமசிவன் கூறுகிறார்.

ததா ச ஹரிவம்ஶே கைலாயாத்ராயாம் மகேஶ்வரவசனம் மற்றும் ஸ்ரீ ஹரி வம்சம் கைலா யாத்திரையின் பொழுது பரமசிவன் கூறுகிறார்.

ஆதிஸ்த்வம் ஸர்வபாவானாம் மத்யமந்த்ஸ்ததா பவான் |
த்வத்த: ஸர்வமபூத் விஶ்வம் த்வயி ஸர்வம் ப்ரலீயதே || (ஸ்ரீ ஹரி வம்ம் 3.88.52)
ஸ்ரீ ஹரி வம்த்தில் பரமசிவனார் கூறுகிறார்: அனைத்து ஜீவராசிகளின் தொடக்கம், நடு மற்றும் கடைசி தாங்களே (தங்களிடமிருந்தே அனைத்தும் பிறக்கின்றன, வளர்கின்றன, மற்றும் தங்களிடமே அனைத்தும் முடிவில் லயமடைகின்றன). இந்த உலகம் அனைத்தும் தங்களிடமிருந்தே தோன்றி தங்களிடமே லயமடைகிறது.

அஹம் த்வம் ர்வகோ தேவ த்வமேவாஹம் ஜனார்தன |
ஆவயோரந்தரம் நாஸ்தி ப்தைரர்தைர்ஜகத்ரயே || (ஸ்ரீ ஹரி வம்ம் 3.88.60)
ஸ்ரீ ஹரி வம்த்தில் பரமசிவனார் கூறுகிறார்: ஒ ஜனார்தனா!! எங்கும் நிறைந்திருக்கும் தேவனே!! நானே தாங்கள், தாங்களே நான். மூவுலகம் அனைத்திலும் நம்மிருவருக்கும் சொல்லிலும் (பெயரிலும்), பொருளிலும் ஒரு வித வேறுபாடும் இல்லை.

நாமானி தவ கோவிந்த யானி லோகே மஹாந்தி ச |
தான்யேவ மம நாமானி நாத்ர கார்யா விசாரணா || (ஸ்ரீ ஹரி வம்ம் 3.88.61)
ஸ்ரீ ஹரி வம்த்தில் பரமசிவனார் கூறுகிறார்: ஒ கோவிந்தா!! இந்த உலகத்தில் தங்களுக்கு என்னவெல்லாம் பிரபலமான திருநாமங்கள் உள்ளனவோ அவை அனைத்தும் என்னுடையதும் கூட. இதில் ஆராய்வதற்கு ஒன்றுமில்லை.

த்வதுபாஸா ஜகன்னாத சைவாஸ்து மம கோபதே |
யஸ்ச த்வாம் த்வேஶ்டி போ தேவ ஸ மாம் த்வேஶ்டி  ந ஸம்சய || (ஸ்ரீ ஹரி வம்ம் 3.88.62)
ஸ்ரீ ஹரி வம்த்தில் பரமசிவனார் கூறுகிறார்: ஒ கோபதியே!! ஒ ஜகன்னாதனே!! யார் தங்களை வழிபடுகின்றனரோ, அவர்கள் என்னையும் வழிபடுகின்றனர். எவரொருவர் தங்களை வெறுக்கின்றனரோ, அவர்கள் என்னையும் வெறுக்கின்றனர். இதில் எந்த சந்தேஹமும் இல்லை.

த்வத்விஸ்தாரோ யதோ தேவ ஹ்யஹம் பூதபதிஸ்தத: |
ந ததஸ்தி விபோ தேவ யத்தே விரஹிதம்  க்வசித் || (ஸ்ரீ ஹரி வம்ம் 3.88.63)
ஸ்ரீ ஹரி வம்த்தில் பரமசிவனார் கூறுகிறார்: ஒ தேவனே!! ஏனெனில் பூதபதியான நானும் தங்களுடைய விரிவாக்கமேயாவேன். எனவே ஒ எங்கும் நிறைந்திருக்கும் தேவனே!! எங்கும் எதிலும் தங்களைத் தவிர்த்ததொரு பொருள் வேறெதுவும் இல்லை.

யதாஸீத் வர்த்ததே யச்ச யச்ச பாவி ஜகத்பதே |
ர்வம் த்வமேவ தேவே வினா கிஞ்சித் த்வயா ந ஹி || (ஸ்ரீ ஹரி வம்ம் 3.88.64)
ஸ்ரீ ஹரி வம்த்தில் பரமசிவனார் கூறுகிறார்: ஒ ஜகத்பதியே!! ஒ தெய்வங்களுக்கும் தெய்வமே!! எது இருந்ததோ, எது இருக்கிறதோ, எது (எதிர்காலத்தில்) இருக்குமோ, அவை அனைத்தும் தாங்களே. தங்களை தவிர்த்து மற்றொன்று எதுவும் இல்லை.

இத்யாதிவாக்யான்யேகத்வப்ரதிபாதகானி மேற்சொன்ன அனைத்து (புராண, ஸ்ருதி) வாக்யங்களும் அனைத்தும் ஒன்றே என்ற ‘ஏகத்வத்தை’ விளக்குகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக