புதன், ஏப்ரல் 18, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 34


யத: ஸர்வாணி பூதானி பவந்த்யாதியுகாகமே |
யஸ்மிம்ஸ்ச ப்ரளயம் யாந்தி புனரேவ யுகக்ஷயே || 11 ||

யத:, ஸர்வாணி, பூதானி, பவந்தி, ஆதியுகாகமே |
யஸ்மின், ச, ப்ரளயம், யாந்தி, புன:, ஏவ, யுகக்ஷயே ||

எவரிடமிருந்து, கல்பத்தின் தொடக்கத்தில் ஜீவராசிகள் தோன்றினவோ, அவரிடமே (அந்த முழுமுதற் கடவுளான ஸ்ரீமன்நாராயணனிடமே) கல்பத்தின் முடிவில், மஹாபிரளயத்தில் சென்று லயமடைகின்றன.

யத: யஸ்மாத் எவரிடமிருந்து ஸர்வாணி பூதானி பவந்தி உத்பவந்தி அனைத்து ஜீவராசிகளும் தோன்றினவோ ஆதியுகாகமே கல்பாதௌ கல்பத்தின் தொடக்கத்தில் (அதாவது முதல் யுகமான க்ருத யுகத்தில்) | கல்பத்தின் தொடக்கத்தில் முதல் யுகமான க்ருத யுகத்தில் யாரிடமிருந்து அனைத்து ஜீவராசிகளும் தோன்றினவோ |

யஸ்மிம்ஸ்ச ப்ரளயம் விலயம் (கல்பம், யுகம் முடிவில்) ப்ரளய காலத்தில் யாந்தி விநாஶம் கச்சந்தி அழிவை அடைகின்றனவோ புன: பூய:, மறுபடியும் ஏவ இத்யவதாரணார்த்த:, நான்யஸ்மின்னித்யர்த்த: இங்கு ஏவ என்பதன் அர்த்தம் எந்த ஒருவரிடமிருந்து அனைத்தும் தோன்றியதோ அந்த ஒருவரிடமே லயமடைகிறது, வேறொருவரிடம் இல்லை, யுகக்ஷயே மகாப்ரளையே மஹாப்ரளய காலத்தில் | மஹாப்ரளய காலத்தில் எவரிடம் (எவரிடமிருந்து தோன்றியதோ, அவரிடமே) அனைத்தும் சென்று லயமடைகிறதோ |

சகாரான்மத்யேSபி யஸ்மிம்ஸ்திஷ்டந்தி | (இந்த ஸ்லோகத்தில் வரும்) ‘ச’காரத்தின் அர்த்தம் என்னவெனில், (கல்ப, யுக தொடக்கம், மற்றும் ப்ரளயத்தின்) இடையினிலும் அவரிடமே நிலைபெற்று இருக்கின்றன என்பதாகும்.

யதோ வா இமானி பூதானி ஜாயந்தே யேன ஜாதானி ஜீவந்தி யத் ப்ரயந்த்யபிஸம்விஷந்தி|| (தைத்ரிய உபநிஶத் 3.1)

ஸ்ரீ தைத்ரிய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது:
எதனிடமிருந்து இந்த ஜீவராசிகள் தோன்றுகின்றனவோ, எதனால் வாழ்கின்றனவோ, இறப்பவை எதனை சென்றடைகின்றனவோ…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக