"கிமேகம் தைவதம் லோகே?", "உலகத்தின் ஒரே முழுமுதற் கடவுள் யார்?" என்ற முதல் கேள்விக்கு விடையாக பீஷ்மாச்சார்யார்,
"பவித்ராணாம் பவித்ரம் யோ மங்களானாம் ச மங்களம் |
தைவதம் தேவதானாம் ச பூதானாம் யோவ்யய: பிதா ||" என்று கூறுகிறார்.
அந்த ஸ்லோகத்தின் "மங்களானாம் ச மங்களம்" என்று தொடங்கும் 3 பதங்களுக்கு ஆச்சார்யாள் உரை அளிக்கையில் அத்வைதத்தின் ஸாரத்தை ஸ்ருதி, ஸ்ம்ருதி வாக்யங்களைக் கொண்டு விளக்கி வருவதைப் பார்க்கிறோம். இன்று அத்வைத தத்துவத்தின் மஹா வாக்யங்கள் என்று கருதப்படும் சாந்தோக்ய மற்றும் ப்ருஹதாரண்யக உபநிஶத் வாக்யங்களுடன் மற்ற பிற மேற்கோள்களையும் உதாஹரித்து அத்வைத ஸாரத்தை விளக்குவதைக் காண்போம்.
தத்வமஸி
(சாந்தோக்ய உபநிஶத் 1.4.2)
சாந்தோக்ய
உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அந்த ப்ரஹ்மமே நீ.
அஹம்
ப்ரஹ்மாஸ்மி (ப்ருஹதாரண்யக உபநிஶத் 1.4.10)
ப்ருஹதாரண்ய
உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: நானே ப்ரஹ்மம்
இதம்
ஸர்வம் யதயதாத்மா (ப்ருஹதாரண்யக உபநிஶத் 2.4.6)
ப்ருஹதாரண்யக
உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: இங்கே எவையெல்லாம் உள்ளதோ (மனத்தால் காட்சிகளாகக்
கற்பிக்கப்பட்டுள்ளதோ) அவை அனைத்தும் ஆத்மாவே.
அயமாத்மா
ப்ரஹ்ம (ப்ருஹதாரண்யக உபநிஶத் 2.5.19)
ப்ருஹதாரண்யக
உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: இந்த ஆத்ம ப்ரஹ்மமே
தரதி ஶோகமாத்மவித் (சாந்தோக்ய உபநிஶத் 7.1.3)
சாந்தோக்ய
உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: ஆத்மாவை அறிபவன் சோகத்திலிருந்து விடுபடுகின்றான்.
தத்ர
கோ மோஹ: க: ஶோக: ஏகத்வமனுபஶ்யத: (ஈஶாவாஸ்ய உபநிஶத் 7)
ஈஶாவாஸ்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: ஒருமையைப் பார்க்கின்ற அவருக்கு மோகம் எது? சோகம்
எது? (ஒருமையைப் பார்க்கின்றவனாகவும் உண்மையை அறிபவனாகவும் உள்ளவனுக்கு
எப்பொழுது எல்லா உயிரினங்களும் ஆத்மாவகவே ஆனதோ, அப்பொழுது அவருக்கு மோகம் எது?
சோகம் எது?)
இத்யாதி
ஸ்ருதிஸ்ம்ருதீதிஹாஸபுராணலௌகிகேப்யஸ்ச | இத்தகைய வேத (ஸ்ருதி), ஸ்ருதி, இதிஹாஸ, புராண
வாக்கியங்களிலிருந்தும், (லௌகிக) உலகியல் அறிவிலிருந்தும் (ஆத்மாவும், பரமாத்மாவும்
ஒன்று என்ற அத்வைதம்) தெளிவாகிறது.
ஸித்தேர்SதேSபி
வேதஸ்ய ப்ராமாண்யமேஶ்டவ்யம் | நன்றாக ஸ்தாபிக்கப்பட்ட
விஷயங்களிலும் (ப்ரஹ்ம ஞானம்) வேதங்களை பிரமாணமாகக் கொள்ளவேண்டும்.
ஸ்வபக்ஷஸாதனைரகார்யமர்தஜாதமாஹ
சேத் |
ததா
பரோSபி வேத சேச்ருதி: பராத்மத்ருங் ந கிம் ||
தங்களது
கொள்கையை விளக்கும் பொழுது மீமாம்ஸகர்கள் (மறைமுகமாக) வாக்கியங்கள் (வார்த்தைகள்) செயலைத் தவிர மற்ற
அறிவை கொடுக்கும் என்றும், அதைப் படிப்பவர்களும் அவ்வாறே புரிந்து கொள்வார்கள்
என்றும் கூறுகிறார்கள். அப்படியெனில் வேதங்கள் (அவற்றின் வாக்கியங்கள்
மூலம்) பரமாத்மாவைப் பற்றிய ஞானத்தை தரவல்லன என்று நிரூபணம் ஆகின்றதல்லவா?
இத்யபியுக்தைருக்தம் | இவ்வாறு கற்றறிந்த
பெரியோர்கள் கூறுகின்றனர்.
அன்யான்விதஸ்வார்த்தே
பதானாம் ஸாமர்த்யம் ந கார்யான்விதஸ்வார்த்தே, ததா ஸத்யர்த்தவாதானாமனன்வய-ப்ரஸங்காத்
அன்வயபுத்தே: ஸ்துதித்வாத் | ந ஹி பவதி
பொருட்களை
(பதார்த்தங்களை) விளக்கும் சொற்களும், காரியத்தை விட காரணமாகிய பொருளையே
சிறப்பாகச் சொல்கின்றன (உதாரணமாக “பசுவைக் கொண்டு வா” என்று கூறும்பொழுது கொண்டு வருதலாகிய
செயலானது பசு என்ற பதார்த்தத்தைக் கொண்டே சிறப்பு பெறுகிறது). அவ்வாறு
இல்லாதிருப்பின் (அதாவது சொற்கள் காரியங்களைக் கூறுமாயின்), மீமாம்சகர்களின்
அர்த்தவாதங்கள் (காரியத்தை செய் அல்லது செய்யாதே என்று கூறும் வாக்கியங்கள்) அர்த்தமற்ற அலங்கார
சொற்களாகி விடும்.
வாயவ்யம் ஶ்வேதமாலபேத பூதிகாமோ வாயூர்வை க்ஷேபிஶ்டா தேவதா
இதி |
ராகஸ்யைவ ப்ரவர்த்தகத்வம், ந நியோகஸ்ய |
“செல்வத்தை
விழைபவர் வாயு பகவானுக்கு வெள்ளை நிற மிருகத்தை பலியிட வேண்டும். ஏனெனில் வாயு அதி
வேகமாக செல்லக்கூடிய தேவதையாவார்”. இந்த வாக்கியத்தில் ‘இதை செய் (வெள்ளை மிருகத்தை பலியிடு)’ என்ற ஆணை ஒருவரை
செயல்புரிய தூண்டுவதில்லை. அவரவரின் (ஸ்வர்க்கத்தை அடையவேண்டும், மிகுந்த செல்வத்தை
அடையவேண்டும் போன்ற) விருப்பங்களே ஒருவரை செயல்புரிய தூண்டுகின்றன.
ததா ச
ஸ்ருதி: மேலும் ஸ்ருதி வாக்கியங்களும் இவ்வாறு கூறுகின்றன:
அதோ
கல்வாஹு: காமமாய ஏவாயம் புருஶ இதி ஸ யதா காமோ பவதி தத்க்ரதுர்பவதி யத்க்ரதுர்பவதி
தத் கர்ம குருதே யத் கர்ம ததபிசம்பத்யதே |
இந்த
மனிதன் ஆசையே உருவானவன் என்று கூறப்படுகிறது. அவன் எதை விரும்புகிறானோ அதை அடைய
உறுதி கொள்கிறான். அந்த உறுதியினால் செயல் புரிகிறான், எந்த செயலைப் புரிகின்றானோ அதற்கேற்ப
பலாபலன்களை அடைகின்றான்.
ததா ச
ஸ்ம்ருதிரபி – மனுஸ்ம்ருதியிலும்,
அகாமஸ்ய
க்ரியா காசித் திருஶ்யதே நேஹ கஸ்யசித் |
யத்
யத்தி குருதே கர்ம தத்தத் காமஸ்ய சேஶ்டிதம் || (மனுஸ்ம்ருதி 2.4)
இந்த
உலகில் ஆசையின்றி எவரும் செயல் புரிவதில்லை. எந்த எந்த கர்மம் செய்யபடுகின்றதோ அவை
அனைத்தும் ஆசையின் விளைவாகவே செய்யப்படுகின்றன.
இதி –
இவ்வாறு
கூறப்பட்டுள்ளது.
காம ஏஶ க்ரோத ஏஶ (ஸ்ரீ பகவத்கீதை 3.37)
இஃது
விருப்பமும் சினமும்
இதி –
இவ்வாறு
(ஸ்ரீ பகவத்கீதையில்) கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக