சனி, ஏப்ரல் 07, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 28

"கிமேகம் தைவதம் லோகே?", "உலகத்தின் ஒரே முழுமுதற் கடவுள் யார்?" என்ற முதல் கேள்விக்கு விடையாக பீஷ்மாச்சார்யார், 


"பவித்ராணாம் பவித்ரம் யோ மங்களானாம் ச மங்களம் |
தைவதம் தேவதானாம் ச பூதானாம் யோவ்யய: பிதா ||" என்று கூறுகிறார்.

அந்த ஸ்லோகத்தின் "மங்களானாம் ச மங்களம்" என்று தொடங்கும் 3 பதங்களுக்கு ஆச்சார்யாள் உரை அளிக்கையில் அத்வைதத்தின் ஸாரத்தை ஸ்ருதி, ஸ்ம்ருதி வாக்யங்களைக் கொண்டு விளக்கி வருவதைப் பார்க்கிறோம். இன்று சில உபநித் வாக்யங்களைக் கொண்டு ஜீவ-ப்ரஹ்ம அபேதத்தை ஆச்சார்யாள் விளக்குவதைக் காண்போம்.

ப்ரஹ்மயாஞ்யவல்க்யே ப்ரஹ்மயாஞ்யவல்க்யத்திலும் இவ்வாறு கூறப்பட்டுள்ளது,

ஆகாமேகம் ஹி யதா கடாதிஶு ப்ருதக்பவேத் |
ததாத்மைகோSப்யநேகேஶு ஜலாதாரேஶ்விவாம்ஶுமான் ||
(ப்ரஹ்மயாஞ்யவல்க்யம்)
ப்ரஹ்மயாஞ்யவல்க்யத்தில் கூறப்பட்டுள்ளது: எவ்வாறு ஒரே ஆகாயமானது குடம் முதலிய வெவ்வேறு உபாதிகளில் வெவ்வேறாகப் பிரதிபலிக்கிறதோ, எவ்வாறு ஒரே சூரியனானது, நீர் நிறைந்த பாத்திரங்களில் பிரதிபலிக்கிறதோ, அதைப் போலவே, ஒரே ஆத்மாவானது, பற்பல உபாதிகளால், வெவ்வேறாகத் தோற்றமளிக்கிறது.

க்ஷராத்மானாவீஷதே தேவ ஏக: (ஶ்வேதாஶ்வதர உபநிஶத்)
ஶ்வேதாஶ்வதர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அந்த ஒரே கடவுளானவர் அழியக்கூடிய வஸ்துக்களையும் (அதாவது அசேதன பொருட்களையும்), (அழியாத சேதனனான) ஆத்மாவையும் ஆள்கிறார்.
இதி ஶ்வேதாஶ்வரே இவ்வாறு ஶ்வேதாஶ்வர உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது.

சாந்தோக்யே சாந்தோக்ய உபநிஶத்திலும்,
ஸ ஏகதா பவதி (சாந்தோக்ய உபநிஶத்) அது ஒன்றாகவே இருக்கிறது
இத்யாதி | என்று கூறப்பட்டுள்ளது.

ஸ தத்ர பர்யேதி அது எங்கும் பரந்து வ்யாபித்திருக்கிறது.
ஸ வா ஏ ஏதேன தைவேன சக்ஷுஷா மனஸைதான் காமான் பஶ்யன் ரமதே  அது (அந்த ஆத்மாவானது, ப்ரஹ்மமானது) தனது இந்த திவ்ய கண்களால் மனதின் மூலமாக, இந்த போகங்களை பார்த்து, அனுபவிக்கிறது

பரோSவிக்ருத ஏவாத்மா ஸ்வாத்மாயம் ஜீவ: (பிறப்பு, தேய்தல், இறப்பு முதலிய) விகாரங்கள் அற்ற அந்த பரமாத்மாவே நமது உள்ளுறை ஜீவாத்மாவாகும்.
இதி ஶ்ருதே இவ்வாறு வேதங்களிலும் கூறப்பட்டுள்ளது.

ஸ ஏஷ இஹா ப்ரவிஶ்ட: அது இங்கேயே (அனைத்திலும்) உள்ளுறைந்திருக்கின்றது.
இதி ப்ருஹதாரண்யகஸ்ருதி: | இவ்வாறு ப்ருஹதாரண்யக ஸ்ருதியிலும் கூறப்பட்டுள்ளது.

ஆத்மேத்யேவோபாஸீத (ப்ருஹதாரண்யக உபநிஶத்)
அது ஆத்மாவாகும்; இவ்வாறு அதை உபாஸிக்கவேண்டும்
ததேதத்ப்ரஹ்மாபூர்வம் (ப்ருஹதாரண்யக உபநிஶத் 2.5.11)
அந்த ப்ரஹ்மம் (தன்னைப் படைத்ததான மற்றொரு) காரணமற்றது
நான்யோSதோSஸ்தி த்ரஶ்டா நான்யோSதோSஸ்தி விஞ்ஞாதா (ப்ருஹதாரண்யக உபநிஶத் 3.7.23)
(அந்த ஆத்மா, ப்ரஹ்மத்தைத் தவிர) பார்ப்பவர் வேறொருவர் கிடையாது; அறிபவரும் வேறொருவர் கிடையாது
ஸ வா ஏ மஹானஜ ஆத்மா யோSயம் விஞ்ஞானமய: (ப்ருஹதாரண்யக உபநிஶத் 4.4.22)
அந்த பிறப்பற்ற ஆத்மா அறிவு மயமானது
அத யோSந்யாம் தேவதாமுபாஸ்தே (ப்ருஹதாரண்யக உபநிஶத் 1.4.10)
எவர் மற்ற தேவதைகளை வழிபடுகின்றனரோ
ஏததாத்ம்யமித ஸர்வம் (சாந்தோக்ய உபநிஶத் 6.8.7)
இவை அனைத்தும் ஆத்மாவின் உருவமேயாகும்
இத்யாதி இவ்வாறு மேலும் ஸ்ருதிகளில் கூறப்பட்டுள்ளது.

நிஸ்சரந்தி யதா லோஹபிண்டாத்தப்தாத்ஸ்ஃபுலிங்கா: |
ஸகாஶாதாத்மநஸ்தத்வத் ப்ரபவந்தி ஜகந்தி ஹி ||
எவ்வாறு நன்கு சுடப்பட்ட இரும்பிலிருந்து தீப்பொறிகள் வெளிவருகின்றனவோ, அவ்வாறே ஆத்மாவிலிருந்து பல்வேறு உலகங்கள் தோன்றுகின்றன.
இதி யாஞ்யவல்க்யே இவ்வாறு யாக்ஞவல்க்ய ஸ்ருதியில் கூறப்பட்டுள்ளது.

அஜ: சரீரக்ரஹநாத் ஸ ஜாத இதி கீர்த்யதே |
அந்த பிறப்பற்றவரே சரீரத்தை ஏற்பதால் பிறப்பதாகக் கூறப்படுகிறார்.
இதி ப்ராஹ்மே இவ்வாறு ப்ரஹ்மபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

ஸர்ப்பவத்ரஜ்ஜூகண்டஸ்து நிஶாயாம் வேஶ்மமத்யக: |
ஏகோ ஹி சந்த்ரோ த்வௌ வ்யோம்னி திமிராஹதசக்ஷு: ||
இரவின் இருட்டில் மயங்கிய கண்களையுடையவனுக்கு, எவ்வாறு கயிறும் பாம்பு போல தோற்றமளிக்கிறதோ, எவ்வாறு இரண்டு நிலவுகள் தெரிகின்றனவோ...

ஆபாதி பரமாத்மா ச ஸர்வோபாதிஶு ஸம்ஸ்தித: |
நித்யோதித: ஸ்வயம்ஜ்யோதி: ஸர்வக: புருஶ: பர: ||
அவ்வாறே எங்கும் நிறைந்துள்ள, சுயப்ரகாசமுடைய ஒரே பரமாத்மாவானவர், அறியாமையால் மயங்கியவனுக்கு, பற்பல பொருட்களில் பலவாறாகத் தெரிகிறார்.

அஹங்காராவிவேகேன கர்தாஹமிதி மன்யதே |
(மேலும் அவ்வாறு அறிவு மயங்கியவன்) அஹங்காரத்தால் விவேகம் இழந்து தானே செயல் புரிவதாக நினைத்துக்கொள்கிறான்.
இதி இவ்வாறு மேலும் கூறப்பட்டுள்ளது.

ஏவமேவாயம் புருஶ: ப்ராஞ்யேநாத்மனா | ஸம்பரிஶ்வக்த:
(ப்ருஹதாரண்யக உபநிஶத் 4.3.21)
ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: இவ்வாறு இந்த புருஶன் அறிவுடைய ஆத்மாவுடன் சேர்வதால்...

ஸதா ஸோம்ய ததா ஸம்பன்னோ பவதி (சாந்தோக்ய உபநிஶத் 6.8.1)
சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: ஒ ஸௌம்யா!! அப்பொழுது அவன் உண்மையுடன் ஒன்று சேர்கிறான்
இதி இவ்வாறு மேலும் கூறப்பட்டுள்ளது.

ஏவம் இவ்வாறாக (நமக்கு விளங்குவது என்னவென்றால்):
ஸ்வமாயயா ஸ்வமாத்மானம் மோஹயன் த்வைதமாயயா |
குணாஹிதம் ஸ்வமாத்மானம் லபதே ச ஸ்வயம் ஹரி: ||
பகவான் ஸ்ரீ ஹரியானவர், தனது மாயையாலே தன்னையே மோஹமடைய செய்துகொண்டு, பலவகை உருவத்தில், தனது குணங்களால் தன்னையே அனுபவித்துக்கொள்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக