புதன், ஏப்ரல் 04, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 25

"கிமேகம் தைவதம் லோகே?", "உலகத்தின் ஒரே முழுமுதற் கடவுள் யார்?" என்ற முதல் கேள்விக்கு விடையாக பீஷ்மாச்சார்யார், 


"பவித்ராணாம் பவித்ரம் யோ மங்களானாம் ச மங்களம் |
தைவதம் தேவதானாம் ச பூதானாம் யோவ்யய: பிதா ||" என்று கூறுகிறார்.

அந்த ஸ்லோகத்தின் "மங்களானாம் ச மங்களம்" என்று தொடங்கும் 3 பதங்களுக்கு ஆச்சார்யாள் உரை அளிக்கையில் அத்வைதத்தின் ஸாரத்தை ஸ்ருதி, ஸ்ம்ருதி வாக்யங்களைக் கொண்டு விளக்கி வருவதைப் பார்க்கிறோம். பரப்ரஹ்மத்தை ஆத்ம ஸ்வரூபமாகவே வர்ணிக்கும் சில ஸ்ருதி வாக்கியங்களை ஆச்சார்யாள் மேற்கோள் காட்டுவதை இன்றைய பதிவில் பார்க்கலாம்.

அபி ச மேலும்
ஆத்மேதி தூபகச்சந்தி க்ராஹயந்தி ச (பிரஹ்ம ஸூத்ரம் 4.1.3)
ப்ரஹ்ம ஸுத்திரத்தில் கூறப்பட்டுள்ளது: (பரமாத்மாவை) ஆத்ம ஸ்வரூபத்தாலேயே அறியவும் அடையவும் முடியும்

ஆத்மேத்யேவம் சாஸ்த்ரோக்தலக்ஷண: பரமாத்மா ப்ரதிபத்தவ்ய: | இந்த ஸுத்திரத்தில் ஆத்மா என்பது வேதங்களால் அறியப்படும் பரமாத்மாவையே குறிக்கின்றது | 

ததா ஹி பரமாத்ம ப்ரக்ரியாயாம் ஜாபாலா ஆத்மத்வேனைவைனமப்யுகச்சந்தி – மேலும் ஜாபால சாகையை (பிரிவை) பின்பற்றுபவரும் பரமாத்மாவை குறிக்கையில், ‘த்வம் வா அஹமஸ்மி பகவோ தேவதே அஹம் வை த்வமஸி’ ‘ஹே பகவானே!! ஹே தேவனே!! தாங்களே நான், நானே தாங்கள்’ 

இதி என்று கூறுவதன் மூலம், அவர்களும் (ஜாபால சாகையை சார்ந்தவரும் பரமாத்மாவை) ஆத்ம ஸ்வரூபமாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.

ததான்யேSபி மேலும்,

யதேவேஹ ததமுத்ர யதமுத்ர ததன்விஹ (கடோபநிஷத் 2.1.10)
கடோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது: எது இங்கு ஜீவனாக உள்ளதோ அதுவே அங்கு ப்ரஹ்மமாக உள்ளது. எது அங்கு ப்ரஹ்மமாக உள்ளதோ, அதுவே இங்கு ஜீவனாக உள்ளது. 

ஸ யஸ்சாயம் புருஶே| யஸ்சாஸாவாதித்யே | ஸ ஏக: (தைத்ரீய உபநிஶத் 2.8.12)
தைத்ரீய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: எந்த ஒரு ஆனந்தம் மனிதனிடத்தில் உண்டோ அந்த ஆனந்தமும், எந்த ஒரு ஆனந்தம் ஹிரண்யகர்பரிடம் உண்டோ, அந்த ஆனந்தமும் ஒன்றே.

ததாத்மானமேவாவதேஹம் ப்ரஹ்மாஸ்மீதி (ப்ருஹதாரண்ய உபநிஶத் 1.4.10)
ப்ருஹதாரண்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அப்பொழுது அவர் தன்னை ப்ரஹ்மமாக இருப்பதாக உணர்ந்து, ‘நானே ப்ரஹ்மம் (அஹம் ப்ரஹ்மாஸ்மி)’ என்று கூறினார்.

ததேதத் ப்ரஹ்மாபூர்வமன பரமனந்தரம் அபாஹ்யமயம் ஆத்மா ப்ரஹ்ம (ப்ருஹதாரண்ய உபநிஶத் 2.5.19)
ப்ருஹதாரண்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: இந்த ப்ரஹ்மம் காரணம், காரியம் அற்றது. இதன் உள்ளும் புறமும் (இந்த ப்ரஹ்மத்தைத் தவிர) ஒன்றும் இல்லை. இந்த ஆத்மாவே ப்ரஹ்மம்.

ஸ வா ஏ மஹானஜ ஆத்மாஜரோSமரோSம்ருதோSபயோ ப்ரஹ்ம (ப்ருஹதாரண்ய உபநிஶத் 4.4.25)
ப்ருஹதாரண்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அந்த உயர்ந்த பிறப்பு, நரை, மூப்பு, மரணம், பயம் அற்ற, அழிவற்ற ஆத்மா ப்ரஹ்மமாகும்.

இத்யேவமாதய ஆத்மத்வோபகமா த்ரஶ்டவ்யா: | மேற்கூறியவை போன்ற, ப்ரஹ்மத்தை ஆத்மாவாகவே ஏற்றுக்கொண்டுள்ள பல வேத வாக்கியங்கள் ஆராயத்தக்கவையாகும்.

க்ராஹயந்தி ச போதயந்தி சாத்மத்வேனேஶ்வரம் வேதாந்த வாக்யாணி – மேலும் (கீழே கூறப்பட்டுள்ள) பல வேத வாக்கியங்கள் பரம்பொருளை (பரப்ரஹ்மத்தை) ஆத்மாவாகவே விவரிக்கின்றன. 

 த ஆத்மாந்தர்யாம்யம்ருத: (ப்ருஹதாரண்ய உபநிஶத் 3.7.3.23)
ப்ருஹதாரண்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: உனக்குள் உறையும் இந்த ஆத்மா அழிவற்றது.

யன்மனஸா ந மனுதே யேனாஹுர்மனோ மதம் | ததேவ ப்ரஹ்ம தவம் வித்தி நேதம் எதிதமுபாஸதே (கேனோபநிஷத் 1.5)
கேனோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது: எதை மனதால் ஒருவன் அறிவதில்லையோ, எந்த சைதன்யத்தால் மனம் அறியப்படுகிறது என்று கூறுகிறார்களோ, அதையே ப்ரஹ்மமாக நீ அறிவாயாக. எந்த இந்த தேவதையை ஸாதகர்கள் த்யானிக்கிறார்களோ, அது ப்ரஹ்மம் அல்ல.

தத்ஸத்யம் ஸ ஆத்மா தத்வமஸி (சாந்தோக்ய உபநிஶத் 6.8.16)
சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அதுவே (ப்ரஹ்மமே) உண்மையாகும். அதுவே ஆத்மாவாகும். அந்த ப்ரஹ்மமே நீ (தத்வமஸி).

இத்யேவமாதீனி – இவ்வாறு (பல வேத வாக்கியங்கள் பரம்பொருளை ஆத்மாவாகவே விவரிக்கின்றன).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக