"கிமேகம் தைவதம் லோகே?", "உலகத்தின் ஒரே முழுமுதற் கடவுள் யார்?" என்ற முதல் கேள்விக்கு விடையாக பீஷ்மாச்சார்யார்,
"பவித்ராணாம் பவித்ரம் யோ மங்களானாம் ச மங்களம் |
தைவதம் தேவதானாம் ச பூதானாம் யோவ்யய: பிதா ||" என்று கூறுகிறார்.
அந்த ஸ்லோகத்தின் "மங்களானாம் ச மங்களம்" என்று தொடங்கும் 3 பதங்களுக்கு ஆச்சார்யாள் உரை அளிக்கையில் அத்வைதத்தின் ஸாரத்தை ஸ்ருதி, ஸ்ம்ருதி வாக்யங்களைக் கொண்டு விளக்கி வருவதைப் பார்க்கிறோம். இப்பொழுது அதன் தொடர்ச்சியாக ஹரிவம்ஶம், ஸ்ரீவிஶ்ணு புராணம் போன்ற இதிஹாஸ, புராண நூல்களிலிருந்தும், மனு ஸ்ம்ருதியிலிருந்தும் ஆச்சார்யாள் எடுத்துக் காட்டும் சில மேற்கோள்களை இன்று காண்போம்.
ஹரிரேக: ஸதா த்யேயோ பவத்பி: ஸத்வ ஸம்ஸ்திதை: |
ஓமித்யேவம் ஸதா விப்ரா: படத த்யாத கேஶவம் || (ஸ்ரீ ஹரி வம்ஶம் 3.89.9)
ஸ்ரீ ஹரி வம்ஶத்தில் கூறப்பட்டுள்ளது: ஒ ப்ராம்மணோத்தமர்களே! நீங்கள் ஸத்வகுணத்தில்
நிலைபெற்று பகவான் ஸ்ரீ ஹரியைமட்டும் த்யானியுங்கள். நீங்கள் எப்பொழுதும் ‘ஓம்’ (என்ற பிரணவ மந்திரத்தை) ஜபித்து ஸ்ரீ கேசவனை த்யானியுங்கள்.
ஆஸ்ச்சர்யம் கலு தேவானாமேகஸ்த்வம் புருஶோத்தம |
தன்யச்சாஸி மஹாபாஹோ லோகே நான்யோSஸ்தி கஸ்ஶன || (ஸ்ரீ ஹரி வம்ஶம்)
ஸ்ரீ ஹரி வம்ஶத்தில் கூறப்பட்டுள்ளது: ஒ புருஷோத்தமா!! அனைத்து தேவர்களைக் காட்டிலும்
தாங்கள் ஒருவரே ஆச்சர்யமானவராவீர். ஒ நெடுந்தோளுடையவனே!! அனைத்துலகிலும்
தங்களுக்கு சமமானவரோ மேம்பட்டவரோ ஒருவரும் இல்லை.
இதி ஹரிவம்ஶே | இவ்வாறு ஹரி வம்சத்தில்
கூறப்பட்டுள்ளது.
பவதி
மனோர்மாஹாத்ம்யக்யாபினீ ஸ்ருதி: யத்வை கிஞ்ச மனுரவதத்தத்பேஷஜம் (தைத்ரிய சம்ஹிதை
2.10.2)
‘மனு
கூறிய அனைத்தும் (மனிதர்களுக்கு) மருந்து போன்றதாகும்’ என்ற ஸ்ருதி வாக்கியம் மனுவின் மேன்மையை
கூறுகிறது.
மனுனா
சோக்தம் அந்த மனுவானவர் (மனுஸ்ம்ருதியில்) கூறுகிறார்:
ஸர்வபூதஸ்தமாத்மானம் ஸர்வபூதானி சாத்மனி |
ஸம்பஶ்யன்னாத்மயாஜீ வை ஸ்வாராஜ்யமதிகச்சதி || (ஸ்ரீ மனு ஸ்ம்ருதி
12.91)
ஸ்ரீ
மனு ஸ்ம்ருதியில் கூறப்பட்டுள்ளது: அனைத்து ஜீவராசிகளிலும் உள்ளுறைந்திருக்கும் தனது
ஆத்மாவையும், அனைத்து ஜீவராசிகளையும் தனது ஆத்மாவிற்குள் உறைவதை அறிந்து ஆத்ம
யக்ஞம் செய்யும் மனிதன் (ப்ரஹ்ம சாயுஜ்யம் எனும்) விடுதலையை அடைகிறான்.
ஸ்ருஶ்டிஸ்தித்யந்தகரனீம்
ப்ரஹ்மவிஶ்ணுஶிவாத்மிகாம் |
ஸ ஸம்ஞாம் யாதி பகவானேக ஜனார்தன: || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 1.2.66)
ஸ்ரீ விஶ்ணு
புராணத்தில் கூறப்பட்டுள்ளது: அந்த பகவான் ஜனார்தனர் ஒருவரே படைத்தல், காத்தல் மற்றும் அழித்தலை
புரியக்கூடிய பிரம்மா, விஶ்ணு, மற்றும் சிவன் ஆகிய மூன்று வடிவங்களையும்,
பெயர்களையும் கொள்கிறார்.
தஸ்மான்ன
விஞ்ஞானம்ருதேSதி கிஞ்சித் க்வசித் கதாசித் த்விஜ வஸ்துஜாதம் |
விஞ்ஞானமேகம் நிஜகர்மபேதாத் விபின்னசித்தைர்பஹுதாப்யுபேதம் ||
ஞானம் விஶுத்தம் விமலம் விஶோகமசேஶலோபாதிநிரஸ்தசங்கம் |
ஏக: ஸதைக: பரம: பரேஶ: ஸ வாஸுதேவோ ந யதோSஸ்தி கிஞ்சித் ||
(ஸ்ரீ விஶ்ணு புராணம் 2.12.43 – 2.12.44)
ஸ்ரீ விஶ்ணு
புராணத்தில் கூறப்பட்டுள்ளது: இதனால் ஓ ப்ராமணனே!! அறிவை தவிர மற்றொரு வஸ்து எப்பொழுதும்
இருந்ததில்லை. இந்த ஒரு அறிவே (தத்தம்) கர்மங்களின் வேறுபாடுகளால் வெவ்வேறு மனது படைத்தவர்களுக்கு வேறு
வேறாகத் தெரிகிறது. அந்த அறிவானது சுத்தமானதாகவும், அப்பழுக்கற்றதாகவும்,
துன்பங்களற்றதாகவும், பேராசை முதலிய (தீய) குணங்கள் கலவாததாகவும் இருக்கிறது. அந்த ஒரே
உண்மையானது அனைத்திலும் சிறந்த பரமேஸ்வரன் ஸ்ரீ வாஸுதேவனாவார். அவரைத் தவிர
வேறொன்றும் இல்லை.
யதா ஸமஸ்ததேஹேஶு புமானேகோ வ்யவஸ்தித: |
ததா ஹி கோ பவான் ஸோSஹமித்யேதத்விஃபலம் வச: || (ஸ்ரீ விஶ்ணு புராணம்
2.13.91)
ஸ்ரீ விஶ்ணு
புராணத்தில் கூறப்பட்டுள்ளது: அனைத்து உடல்களிலும் உள்ளுறையும் ஆத்மா ஒன்றே எனும்போது, நான் யார்?
நீ யார்? எனும் கேள்விகள் வீணானவையாகும்.
சிதநீலாதிபேதேன யதைகம் த்ருஷ்யதே நப: |
ப்ராந்தத்ருஶ்டிபிராத்மாபி ததைக: ஸன்ப்ருதக் ப்ருதக் ||
ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: எவ்வாறு (தோற்ற மயக்கத்தால்) ஒரே ஆகாயமானது வெண்மை, நீலம் போன்ற பல்வேறு
நிறங்களில் தோற்றமளிக்கிறதோ, அவ்வாறே, மயக்கத்தினால் மனிதர்களுக்கு ஒரே ஆத்மாவானது
பலவாறாகத் தோற்றமளிக்கிறது.
ஏக: ஸமஸ்தம் யதிஹாஸ்தி கிஞ்சித்ததச்யுதோ நாஸ்தி பரம் ததோSன்யத் |
ஸோSஹம் ஸ ச த்வம் ஸ ச ஸர்வமேததாத்மஸ்வரூபம் ||
ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: இங்கே (இவ்வுலகத்தில்) அனைத்தும் பகவான் ஸ்ரீ அச்யுதரே. அவரைத் தவிர மற்றொன்று இல்லை.
நானும் அவரே, நீயும் அவரே; அனைத்துமே அவரது ஆத்ம ஸ்வரூபமே. எனவே வேறுபாடுகளை
நீக்குவாயாக.
இதீரிதஸ்தேன ஸ ராஜவர்யஸ்தத்யாஜ பேதம் பரமார்த்ததிருஶ்டி: | (ஸ்ரீ விஶ்ணு
புராணம் 2.16.22 - 2.16.24)
ஸ்ரீ விஶ்ணு
புராணத்தில் கூறப்பட்டுள்ளது: இவ்வாறு (ஜடபரதரால்) உபதேசிக்கப்பெற்று, உயர்ந்த உண்மையை அறியபெற்றவரான அரசரில் சிறந்தவர்
(ரஹூகுணர்) வேறுபாடுகளை துறந்தார்.
யமனோக்தம்
(ஸ்ரீ விஶ்ணு புராணத்தில்) யமன் கூறுகிறார்:
ஸகலமிதமஹம் ச வாஸுதேவ: பரமபுமான் பரமேஶ்வர: ஸ ஏக: |
இதி மதிரசலா பவத்யனந்தே ஹ்ருதயகதே வ்ரஜ தான் விஹாய தூராத் ||
(ஸ்ரீ விஶ்ணு புராணம் 3.7.32)
ஸ்ரீ விஶ்ணு
புராணத்தில் (யமன் தனது கிங்கரர்களிடம்) கூறியது: இங்கு அனைத்தும், நான்
உட்பட, அந்த ஒரே பரம்பொருளான பகவான் ஸ்ரீ வாசுதேவரே ஆவோம். எவரொருவர், இந்த (அனைத்தும் வாசுதேவரே என்ற) திட நம்பிக்கையுடன்,
தனது ஹ்ருதயத்திற்குள் உறையும் பகவான் ஸ்ரீ அனந்தருடன் ஒன்றி விடுகின்றனரோ,
அவர்களை விட்டு நீங்கள் தூர ஒதுங்கிச் செல்லுங்கள்.
யதாஹ வஸுதா ஸர்வம் ஸத்யமேவ திவௌகஸ: |
அஹம் பவோ பவந்தஸ்ச ஸர்வம் நாராயணாத்மகம் || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 5.1.30)
ஸ்ரீ விஶ்ணு
புராணத்தில் (பிரம்மா தேவர்களைப் பார்த்துக்) கூறியது: ஒ தேவர்களே!! பூமாதேவி
கூறிய அனைத்தும் உண்மையே. நான், மகாதேவர் (பரமசிவன்) மற்றும் நீங்கள்
அனைவரும் பகவான் ஸ்ரீமன் நாராயணனின் வடிவங்களே ஆவோம். அவரது சக்தியானது
பாதிக்கப்படுபவர்களிலும், பாதிப்பவர்களிலும் ஏற்ற, இறக்கத்துடன் தெரிகின்றது.
பவானஹம் ச விஶ்வாத்மன்னேக ஏவ ஹி காரணம் |
ஜகதோSஸ்ய ஜகத்யர்த்தே பேதேனாவாம் வ்யவஸ்திதௌ || (ஸ்ரீ விஶ்ணு புராணம்
5.9.32)
ஸ்ரீ விஶ்ணு
புராணத்தில் (பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பலராமரைப் பார்த்துக்) கூறியது: ஒ பிரபஞ்சத்தின் ஆத்மாவே
(பலராமனே)!! தாங்களும், நானும் இந்த பிரபஞ்சத்தின் ஒரே காரணம் ஆவோம். இந்த
பிரபஞ்சத்திற்காகவே நாம் வெவ்வேறு உருவத்தில் பிறந்துள்ளோம்.
த்வயா யதபயம் தத்தம் தத்தத்தமகிலம் மயா |
மத்தோ விபின்னமாத்மானம் த்ரஶ்டும் நார்ஹசி ஶங்கர || (ஸ்ரீ விஶ்ணு
புராணம் 5.33.47)
ஸ்ரீ விஶ்ணு
புராணத்தில் (பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பரமசிவனைப் பார்த்துக்) கூறியது: எவருக்குத் தாங்கள் அபயம்
(பாதுகாப்பு) அளித்துள்ளீர்களோ, அவர்களை நானும் காக்கிறேன். ஹே சங்கரரே!! தங்கள்
தங்களை என்னிடமிருந்து வேறாக எண்ணாதீர்கள்.
யோSஹம் ஸ த்வம் ஜகச்சேதம் ஸாதேவாஸுரமானுஶம் |
அவித்யாமோஹிதாத்மான: புருஶா பின்னதர்ஶின: || (ஸ்ரீ விஶ்ணு புராணம்
5.33.47)
ஸ்ரீ விஶ்ணு
புராணத்தில் (பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பரமசிவனைப் பார்த்துக்) கூறியது: நான் எதுவாக இருக்கிறேனோ,
தாங்கள், மற்ற தேவர்கள், மனிதர்கள் உட்பட உலகனைத்தும் அதுவாகவே உள்ளது. எந்த
மனிதனுடைய புத்தியானது அறியாமையால் கலக்கமடைந்துள்ளதோ, அவனே அனைத்தையும்
வெவ்வேறாகப் பார்க்கிறான்.
இதி
ஸ்ரீ விஶ்ணு புராணே இவ்வாறு ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக