ஞாயிறு, ஏப்ரல் 01, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 22

"கிமேகம் தைவதம் லோகே?", "உலகத்தின் ஒரே முழுமுதற் கடவுள் யார்?" என்ற முதல் கேள்விக்கு விடையாக பீஷ்மாச்சார்யார், 

"பவித்ராணாம் பவித்ரம் யோ மங்களானாம் ச மங்களம் |
தைவதம் தேவதானாம் ச பூதானாம் யோவ்யய: பிதா ||" என்று கூறுகிறார்.

அந்த ஸ்லோகத்தின் "மங்களானாம் ச மங்களம்" என்று தொடங்கும் 3 பதங்களுக்கு ஆச்சார்யாள் உரை அளிக்கையில் அத்வைதத்தின் ஸாரத்தை ஸ்ருதி, ஸ்ம்ருதி வாக்யங்களைக் கொண்டு விளக்கி வருவதைப் பார்க்கிறோம். இப்பொழுது அதன் தொடர்ச்சியாக சில உபநிஶத் வாக்யங்களை ஆச்சார்யாள் மேற்கோள் காட்டுவதை பார்க்கலாம்.

அனேஜதேகம் மனஸோ ஜவீய: (ஈசாவாஸ்ய உபநிஶத் 4)
ஈசாவாஸ்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: இந்த ஆத்ம தத்துவம் சலனமற்றது. அனைவருக்குள்ளும் ஒன்றாக இருக்கிறது. மனத்தைக் காட்டிலும் வேகமாக செல்கிறது.

தத்ர கோ மோஹ: க: சோக ஏகத்வமனுபஶ்யத: (ஈஶாவாஸ்ய உபநிஶத் 7)
ஈஶாவாஸ்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: ஒருமையைப் பார்க்கின்ற அவருக்கு மோகம் எது? சோகம் எது? (ஒருமையைப் பார்க்கின்றவனாகவும் உண்மையை அறிபவனாகவும் உள்ளவனுக்கு எப்பொழுது எல்லா உயிரினங்களும் ஆத்மாவகவே ஆனதோ, அப்பொழுது அவருக்கு மோகம் எது? சோகம் எது?)

இதி ஈஶாவாஸ்யே இவ்வாறு ஈஶாவாஸ்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது.

ஆத்மா வா இதமேக ஏவாக்ர ஆஸின்னான்யத்கிஞ்சன மித் (ஐத்ரேய உபநிஶத் 1.1)
ஐத்ரேய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: ஆரம்பத்தில் இந்த ஆத்மா (ப்ரஹ்மம்) ஒன்றே இருந்தது; வேறு எந்த (செயல் புரியும்) வஸ்துவும் இல்லை.

ஸர்வேஶாம் பூதானாமந்தர: புருஶ: ஸ ம ஆத்மேதி வித்யாத் (ஐத்ரேய ஆரண்யகம் 3.4.10)
ஐத்ரேய ஆரண்யகத்தில் கூறப்பட்டுள்ளது: இவ்வாறு அறிந்துகொள்வாய் – அனைத்து ஜீவராசிகளிலும் உள்ளுறையும் புருஶனே எனக்குள்ளும் ஆத்மாவாக இருக்கிறார்.

ஏகம் ஸத்விப்ரா பஹுதா வதந்தி (ரிக் வேத ஸம்ஹிதா 1.22.164.46)
ரிக் வேத ஸம்ஹிதையில் கூறப்பட்டுள்ளது: அந்த (ப்ரஹ்மம்) ஒன்றையே ப்ராஹ்மணர்கள் (ப்ரஹ்மத்தை உணர்ந்தவர்கள்) பலவாறாகக் கூறுகிறார்கள்.

ஏகம் ஸந்தம் பஹுதா கல்பயந்தி (ரிக் வேதம்)
ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளது: அந்த (ப்ரஹ்மம்) ஒன்றையே பலவாறாக (இருப்பதாக) கற்பனை செய்கிறார்கள்.

த்யாவாபூமி ஜனயன்தேவ ஏக: | (ரிக் வேதம்)
ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளது: அந்த கடவுள் ஒருவரே இந்த உலகம் மற்றும் ஸ்வர்க்கத்தை உருவாக்கினார்.

ஏகோ தாதார புவனானி விஷ்வா  (ரிக் வேதம்)
ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளது: அவர் தானே அனைத்து உலகங்களையும் தாங்குகிறார்.

ஏக ஏவாக்னிர்பஹுதா ஸமித்த: (ரிக் வேதம்)
ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளது: பலவகையாய் எரியும் நெருப்பானது ஒன்றே (அதைப்போல பலவாறாக தெரியும் ப்ரஹ்மமும் ஒன்றே)

இதி ரிக்வேதே (ஆத்மா வா இதமேக தொடக்கமாக) இவ்வாறு ரிக்வேதத்தில் கூறப்பட்டுள்ளது.

ஸதேவ ஸோம்யேதமக்ர ஆஸிதேகமேவாத்விதீயம் (சாந்தோக்ய உபநிஶத் 6.2.1)
சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: ஹே ஸோம்ய!! தொடக்கத்தில் அந்த (ப்ரஹ்மம்) ஒன்றே இருந்தது

இதி சாந்தோக்யே இவ்வாறு சாந்தோக்ய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது.

ஸர்வபூதஸ்திதம் யோ மாம் பஜத்யேகத்வமாஸ்தித: |
ஸர்வதா வர்த்தமானோSபி ஸ யோகி மயி வர்த்ததே || (ஸ்ரீமத் பகவத்கீதை 6.31)
ஸ்ரீமத் பகவத்கீதையில் பகவான் கூறுகிறார்: ஒருமையில் நிலைகொண்டவனாய் எல்லா உயிர்களிடத்திலுமுள்ள என்னை தொழுவோன், யாங்கணும் சென்றபோதிலும், அந்த யோகி என்னுள்ளேயே இயலுகிறான்.

வித்யாவினயஸம்பன்னே ப்ராஹ்மணே கவி ஹஸ்தினி |
சுனிஸ்ஶைஶ்வபாகே ச பண்டிதா: ஸமதர்ஶின: || (ஸ்ரீமத் பகவத்கீதை 5.18)
ஸ்ரீ பகவத் கீதையில் பகவான் கூறுகிறார்: கல்வியும் விநயமும் நன்கு கற்ற பிராமணனிடத்திலும், பசுவினிடத்திலும், யானையினிடத்தும், நாயினிடத்தும், நாயை தின்னும் புலையனிடத்தும், பண்டிதர் சமபார்வையுடையோர்.

அஹமாத்மா குடாகே ஸர்வபூதாயஸ்தித: |
அஹமாதிஶ்ச்ச மத்யம் ச பூதானாமந்த ஏவ ச || (ஸ்ரீமத் பகவத்கீதை 10.20)
ஸ்ரீ பகவத் கீதையில் பகவான் கூறுகிறார்: அர்ஜுனா!! உயிர்களனைத்தின் உள்ளே நிற்கும் ஆத்மா நான். அவ்வுயிர்களின் ஆதி நான், இடையும் அவற்றின் இறுதியும் யானே

யதா பூதப்ருதக்பாவமேகஸ்தமனுபஶ்யதி |
தத ஏவ ச விஸ்தாரம் ப்ரஹ்ம ஸம்பத்யதே ததா || (ஸ்ரீமத் பகவத்கீதை 13.30)
ஸ்ரீ பகவத் கீதையில் பகவான் கூறுகிறார்: பலவகைப்பட்ட பூதங்கள் ஒரே ஆதாரமுடையன என்பதை அறிவானாயின், அப்போது, அதனின்றும் விஸ்தாரமான ப்ரஹ்மத்தை அடைகிறான்.

ஸர்வதர்மான்பரித்யஜ்ய மாமேகம் ரணம் வ்ரஜ |
அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஶ்யாமி மா ஶுச: || (ஸ்ரீமத் பகவத்கீதை 18.66)
ஸ்ரீ பகவத் கீதையில் பகவான் கூறுகிறார்: எல்லா அறங்களையும் விட்டு விட்டு என்னையே சரண் புகு. எல்லா பாவங்களினின்றும் நான் உன்னை விடுவிக்கிறேன். துயரப்படாதே.

இதி கீதோபநித்ஸு இவ்வாறு ஸ்ரீ பகவத் கீதையில் (கீதோபநித்தில்) பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக