சனி, மார்ச் 31, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 21

"கிமேகம் தைவதம் லோகே?", "உலகத்தின் ஒரே முழுமுதற் கடவுள் யார்?" என்ற முதல் கேள்விக்கு விடையாக பீஷ்மாச்சார்யார், 

"பவித்ராணாம் பவித்ரம் யோ மங்களானாம் ச மங்களம் |

தைவதம் தேவதானாம் ச பூதானாம் யோவ்யய: பிதா ||"

என்று கூறுகிறார்.

அந்த ஸ்லோகத்தின் "மங்களானாம் ச மங்களம்" என்று தொடங்கும் 3 பதங்களுக்கு ஆச்சார்யாள் உரை அளிக்கையில் அத்வைதத்தின் ஸாரத்தை ஸ்ருதி, ஸ்ம்ருதி வாக்யங்களைக் கொண்டு விளக்கி வருவதைப் பார்க்கிறோம். இப்பொழுது அதன் தொடர்ச்சியாக சில உபநிஶத் வாக்யங்களை ஆச்சார்யாள் மேற்கோள் காட்டுவதை பார்க்கலாம்.


அக்னிர்யதைகோ புவனம் பிரவிஷ்டோ ரூபம் ரூபம் பிரதிரூபோ பபூவ |
ஏகஸ்ததா ஸர்வபூதாந்தராத்மா ரூபம் ரூபம் பிரதிரூபோ பஹிச்ச ||
கடோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது: எவ்விதம் உலகில் உள்ள ஒரே நெருப்பானது ஒவ்வொரு பொருளிலும் அப்பொருளின் உருவமாகத் தோன்றுகிறதோ, அவ்விதம் எல்லா ஜீவர்களுக்குள்ளும் இருக்கும் ஒரே ஆத்மா ஒவ்வொரு உடலிலும் அந்த உடலின் வடிவில் தோன்றுகிறது. வெளியேயும் உள்ளது.

வாயுர்யதைகோ புவனம் பிரவிஷ்டோ ரூபம் ரூபம் பிரதிரூபோ பபூவ |
ஏகஸ்ததா ஸர்வபூதாந்தராத்மா ரூபம் ரூபம் பிரதிரூபோ பஹிச்ச ||
கடோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது: எவ்விதம் உலகில் உள்ள ஒரே வாயுவானது ஒவ்வொரு பொருளிலும் அப்பொருளின் உருவமாகத் தோன்றுகிறதோ, அவ்விதம் எல்லா ஜீவர்களுக்குள்ளும் இருக்கும் ஒரே ஆத்மா ஒவ்வொரு உடலிலும் அந்த உடலின் வடிவில் தோன்றுகிறது. வெளியேயும் உள்ளது

ஸூர்யோ யதா ஸர்வலோகஸ்ய சக்ஷூர்னலிப்யதே சாக்ஷுஷைர்பாஹ்யதோஶை: |
ஏகஸ்ததா ஸர்வபூதாந்தராத்மா ந லிப்யதே லோகது:கேன பாஹ்ய: ||
கடோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது: அனைத்து உலகிற்கும் கண்ணாக விளங்கும் சூரியன், (அந்த ஒளியை கொண்டு பார்க்கப்படும்) பார்வையில் உள்ள குறைகளாலும் வெளியே (காட்சிப் பொருட்களில்) உள்ள குறைகளாலும் எவ்வாறு பாதிக்கபடுவதில்லையோ, அவ்விதம், எல்லா ஜீவர்களுக்குள்ளும் இருக்கும் ஒரே ஆத்மா உலகத்தினுடைய துன்பங்களால் பாதிக்கப்படுவதில்லை. (அந்த ஆத்மா) அனைத்தையும் கடந்தும் உள்ளது.

ஏகோ வஷீ ஸர்வபூதாந்தராத்மா ஏகம் ரூபம் பஹுதா ய: கரோதி |
தமாத்மஸ்தம் யேSனுபஶ்யந்தி தீராஸ்தேஶாம் ஶாஸ்வதம் நேதரேஶாம் ||
கடோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது: எந்த ஒன்று அனைத்தையும் தன வசத்தில் வைத்துள்ளதாகவும், எல்லா ஜீவர்களுக்குள்ளும் ஆத்மாவாக இருந்துகொண்டும் தன்னுடைய ஒரு ரூபத்தை பலவாறாக வெளிப்படுத்துகிறதோ, அந்த ஆத்மாவை உடலில் வெளிப்படுவதாக எந்த தீரர்கள் அறிகிறார்களோ, அவர்களுக்கு நிலையான ஸுகம் கிடைக்கிறது. மற்றவர்களுக்கு இல்லை.

நித்யோ நித்யானாம் சேதனஸ்சேதனானாம் ஏகோ
பஹூனாம் யோ விததாதி காமான் |
தமாத்மஸ்தம் யேSனுபஷ்யந்தி தீராஸ்
தேஶாம் ஶாஸ்வதீ நேதரேஶாம் || (கடோபநிஷத் 2.2.9 – 2.2.13)
கடோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது: எந்த ஒன்று அழிவனவற்றுள் அழியாததாகவும், உயிரினங்களுக்குள் உயிராகவும் அனைவருடைய ஆசைகளையும் பூர்த்தி செய்கிறதோ, அந்த ஆத்மாவை உடலில் வெளிப்படுவதாக எந்த தீரர்கள் அறிகிறார்களோ, அவர்களுக்கு நிலையான அமைதி கிடைக்கிறது. மற்றவர்களுக்கு இல்லை.

இதி காடகே (அக்னிர்யதைகோ தொடக்கமாக) இவ்வாறு கடோபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது.

ப்ரஹ்ம வா இதமக்ர ஆஸீதேகமேவ ததேகம் ஸன்ன வ்யபவத் (ப்ருஹதாரண்யக உபநிஶத் 1.4.11)
ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: ஆரம்பத்தில் அந்த ப்ரஹ்மம் ஒன்றே இருந்தது. தனித்து இருந்ததினால் அந்த ப்ரஹ்மம் கர்மங்களை புரியவில்லை.

நான்யததோSஸ்தி த்ரஷ்டா (ப்ருஹதாரண்யக உபநிஶத் 3.7.23)
ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: அதை (அந்த ப்ரஹ்மத்தை) தவிர பார்ப்பதற்கு எதுவும் இல்லை

இத்யாதி ப்ருஹதாரண்யகே இவ்வாறு ப்ருஹதாரண்யக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக