"கிமேகம் தைவதம் லோகே?", "உலகத்தின் ஒரே முழுமுதற் கடவுள் யார்?" என்ற முதல் கேள்விக்கு பீஷ்மாச்சார்யார் விடையளிக்கிறார். அதற்கு உரை அளிக்கையில் ஆசார்யாள் பகவானின் மேன்மை, அவரிடம் நாம் கொள்ளும் பக்தியின் ஏற்றம், நாம ஸங்கீர்த்தனத்தின் பெருமைகள் ஆகியவற்றை விளக்கும் பற்பல இதிஹாஸ, புராண, ஸ்ருதி மற்றும் ஸ்ம்ருதி வாக்கியங்களை மேற்கோள் காட்டுகிறார். அவற்றில் மேலும் சிலவற்றை இன்று காண்போம்.
அவஶேனாபி யந்நாம்னி கீர்த்திதே ஸர்வபாதகை: |
புமான் விமுச்யதே ஸத்ய: ஸிம்ஹத்ரைஸ்தைர்வ்ருகைரிவ||
(ஸ்ரீ விஶ்ணு புராணம் 6.8.19)
ஸ்ரீ விஶ்ணு
புராணத்தில் கூறப்பட்டுள்ளது: அவரது திருநாமங்களை (நாம சங்கீர்த்தனம் செய்கிறோம் என்ற நினைவில்லாமலேயே) அனிச்சையாக
கூறுபவனுக்குக் கூட அவனது சகல பாவங்களும் அவனைவிட்டு சிங்கத்தைக் கண்டு ஓநாய்கள்
பயந்து ஓடுவதைப்போல ஓடிவிடுகின்றன.
த்யாயன் க்ருதே யஜன் யஞ்யைஸ் த்ரேதாயாம் த்வாபரேSர்ச்சயன் |
யதாப்னோதி ததாப்னோதி கலௌ சங்கீர்த்தய கேஶவம்
(ஸ்ரீ விஶ்ணு புராணம் 6.2.17)
ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: க்ருதயுகமான சத்யயுகத்தில்
தியானத்தாலும்/தவத்தாலும், திரேதாயுகத்தில் யாக யஞ்யங்களாலும், த்வாபரயுகத்தில்
பூஜைகள் செய்வதாலும் மனிதனுக்கு என்ன பலன் கிடைத்ததோ அதே பலனை கலியுகத்தில்
கேசவனான பகவான் கிருஷ்ணரின் நாம சங்கீர்த்தனம் செய்வதாலேயே அடைந்து விடுகிறான்.
ஹரிர்
ஹரதி பாபானி துஶ்டசித்தைரபி ஸ்ம்ருத: |
அனிச்சயாபி
ஸம்ஸ்ப்ருஶ்டோ தஹத்யேவஹி பாவக: ||
(ஸ்ரீ ப்ருஹன்
நாரத புராணம் 1.11.100)
ஸ்ரீ ப்ருஹன் நாரத புராணத்தில் கூறப்பட்டுள்ளது: எவ்வாறு தெரியாமல் தீண்டினாலும் நெருப்பானது
சுடுமோ, அவ்வாறே, பகவான் ஹரியை த்யானிப்பதால் துர்புத்தியுடையவனின் பாவங்கள் கூட
அழிக்கப்படுகின்றன.
ஞானதோ(அஞ்)ஞானதோ வாபி வாஸுதேவஸ்ய கீர்த்தனாத் |
தத் ஸர்வம் விலயம் யாதி தோயஸ்தம் லவணம் யதா ||
எவ்வாறு
நீரில் இட்ட உப்பானது (அந்த நீரில்) கரைந்து விடுகின்றதோ, அவ்வாறே, அறிந்தோ அறியாமலோ பகவான் ஸ்ரீ
வாசுதேவரை (நாம சங்)கீர்த்தனம் செய்வதால் அனைத்து பாவங்களும் கரைந்துவிடுகின்றன.
யஸ்மின்ந்யஸ்தமதிர்ன யாதி நரகம் ஸ்வர்கோSபி யச்சிந்தனே
விக்னோ யத்ர நிவேஶிதாத்மமனஸோ ப்ராஹ்மோSபி லோகோSல்பக:|
முக்திம் சேதஸி ய: ஸ்திதோsமலதியாம் பும்ஸாம் ததாத்யவ்யய:
கிம் சித்ரம் யதகம் ப்ரயாதி விலயம் தத்ராச்யுதே கீர்த்திதே||
(ஸ்ரீ விஶ்ணு புராணம் 6.8.57)
ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: விஶ்ணுவிடம் மனதை ஒருமுகப்படுத்தியவன் நரகத்தை
அடைவதில்லை; அப்படிப்பட்டவனுக்கு ஸ்வர்கலோகம் கூட இடையூறாகவே தோன்றும்; எவனுடைய
மனதும் ஆத்மாவும் விஶ்ணுமயமாகவே உள்ளதோ அவனுக்கு பிரஹ்மலோகம் கூட துச்சமாகவே
இருக்கும்; ஏனெனில், தூய உள்ளம் படைத்தோரின் ஹ்ருதயத்தில் குடிகொள்ளும் பிரபு ஸ்ரீவிஶ்ணு அவர்களக்கு முக்தியையே அளிக்கிறார். அப்படிப்பட்ட அச்யுதரை த்யானிப்பதால்
பாவங்கள் அழிந்து போவதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக