பஞ்சமம் பிரஶ்னம் பரிஹரதி (கோ தர்ம ஸர்வ தர்மானாம் பவத: பரமோ மத:)
இப்பொழுது, "பீஷ்மர் அனைத்து தர்மங்களிலும் சிறந்ததாக எதைக் கருதுகிறார்" என்ற ஐந்தாவது கேள்விக்கு விடையளிக்கப்படுகிறது.
ஏஶ மே ஸர்வதர்மானாம் தர்மோSதிகதமோ மத: |
யத்பக்த்யா புண்டரீகாக்ஷம் ஸ்தவைரர்சேன்னர: ஸதா||
அனைத்து
தர்மங்களிலும் பகவான் வாசுதேவரை பக்தியுடன் துதிகளாலும், அர்ச்சனைகளாலும்
எப்பொழுதும் தொழுவதையே சிறந்த தர்மம் என்று நான் (பீஷ்மர்) கருதுகிறேன்.
பீஷ்மரின் பதில்: துதிகள் மற்றும் அர்ச்சனைகள் நிறைந்த நாம ஸங்கீர்த்தனமே சிறந்த தர்மம்.
ஸர்வேஷாம்
சோதனாலக்ஷணானாம் தர்மானாமேஶ (வேதங்கள் மற்றும் ஸ்ருதிகளில் உரைக்கப்பட்டுள்ள)
விதிமுறைப்படியுள்ள அனைத்து தர்மங்களிலும்,
வக்ஷ்யமானோ தர்மோSதிகதமோ சிறந்த தர்மமாக,
இதி மே மம நான்,
மத: அபிப்ரேத: கருதுகிறேன்,
யத்பக்த்யா தாத்பர்யேன உள்ளன்புடன் பக்திபூர்வமாக,
புண்டரீகாக்ஷம் ஹ்ருதயபுண்டரீகே ப்ரகாஶமானம் வாஸுதேவம்
அனைவரின் இதயகமலத்திலும்
வீற்றிருக்கும் தாமரைக்கண்ணனான பகவான் வாஸுதேவரை,
ஸ்தவைர் குணஸங்கீர்த்தனலக்ஷணை: ஸ்துதிபி: (அந்த பகவானது) திருநாமங்களை போற்றும் துதிகளால்,
ஸதார்சேத் ஸத்காரபூர்வகமர்சனம் கரோதி எப்பொழுதும் அர்ச்சனை மற்றும் விதிப்படி பூஜை,
நர: மனுஷ்ய ஒரு மனிதன் செய்வதையே
இதி யத் ஏஶ தர்ம இதி ஸம்பந்த: சிறந்த தர்மமாக (நான் கருதுகிறேன்).
அஸ்ய ஸ்துதிலக்ஷணஸ்யார்ச்சனஸ்யாதிக்யே கிம் காரணம்? உச்யதே இந்த துதிகள் வடிவான அர்ச்சனை அதிக
முக்கியத்துவம் பெறுவதன் காரணம் என்ன? பதில் பார்ப்போம்.
ஹிம்ஸாதிபுருஶாந்தரதிரவ்யாந்தரதேஶகாலாதிநியமான(அ)பேக்ஷத்வம் ஆதிக்யே காரணம் |
(இந்த
துதிகள் வடிவான அர்ச்சனையில்) (ஜீவ)ஹிம்சை போன்ற பாப கர்மங்களுக்கு இடமில்லை.
மற்றும் மனிதர், திரவியங்கள், இடம், காலம் போன்ற நியமங்களும் இல்லை
ஜப யக்ஞத்தின் (நாம ஸங்கீர்த்தனத்தின்) ஏற்றம்:
இன்னார் இந்த இடத்தில இந்த பொருளை கொண்டுதான் கடவுளை துதிக்கவேண்டும் என்பதில்லை. அனைவரும் எப்பொழுதும் துதிக்கலாம். துதி வடிவான வழிபாட்டின் (நாம ஸங்கீர்த்தனத்தின்) மேன்மையை விளக்கும் ஒரு சில இதிஹாஸ, புராண மற்றும் ஸ்ம்ருதி வாக்கியங்களை ஆச்சார்யாள் மேற்கோள் காட்டுகிறார்.
த்யாயன் க்ருதே யஜன் யஞ்யைஸ் த்ரேதாயாம் த்வாபரேS(அ)ர்ச்சயன் |
யதாப்னோதி ததாப்னோதி கலௌ ஸங்கீர்த்தய கேஶவம் || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 6.2.17)
விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: க்ருதயுகமான சத்யயுகத்தில்
தியானத்தாலும்/தவத்தாலும், திரேதாயுகத்தில் யாக யஞ்யங்களாலும், த்வாபரயுகத்தில்
பூஜைகள் செய்வதாலும் மனிதனுக்கு என்ன பலன் கிடைத்ததோ அதே பலனை கலியுகத்தில்
கேசவனான பகவான் கிருஷ்ணரின் நாம சங்கீர்த்தனம் செய்வதாலேயே அடைந்து விடுகிறான்.
ஜப்யேனைவ து ஸம்சித்யேத் ப்ராஹ்மணோ நாத்ர ஷம்ஷய: |
குர்யாதன்யன்ன வா குர்யான்மைத்ரோ ப்ராஹ்மண உச்யதே || (மனு ஸ்ம்ருதி 2.87)
மனு ஸ்ம்ருதியில் கூறப்பட்டுள்ளது: இதில் எந்தவித சந்தேஹமும் இல்லை – ஒரு பிராஹ்மணன்
எந்த கர்மங்களை செய்கிறானோ அல்லவோ, அவன் (நாம) ஜபத்தால் மட்டுமே பூர்ண
சித்தியடைகிறான். எனவேதான், பிராஹ்மணன் ‘மைத்ர’ (அனைவரின் மித்திரன் அல்லது
நண்பன்) என்று அழைக்கப்படுகிறான்.
ஜபஸ்து ஸர்வதர்மேப்ய: பரமோ தர்ம உச்யதே |
அஹிம்சயா ச பூதானாம் ஜபயஞ்ய: ப்ரவர்த்ததே || (மஹாபாரதம்)
மஹாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது: அனைத்து தர்மங்களிலும் ஜபமே மிகச்சிறந்த தர்மமாக
கருதப்படுகிறது. ஏனெனில், ஜபயஞ்யம் பிராணிகளை ஹிம்ஸிக்காமலேயே பூரணமடைகிறது.
யஞ்யானாம் ஜப யஞ்யோஸ்மி (ஸ்ரீமத் பகவத்கீதை 10.25)
பகவானும் கீதையில் கூறுகிறார்: யஞ்யங்களில் நான் ஜப யஞ்யம்...
ஏதத் ஸர்வமபிப்ரேத்ய ‘ஏஷ மே ஸர்வதர்மானாம் தர்மோSதிகதமோ மத:’
இத்யுக்தம் ||8||
மேற்சொன்ன
(இதிஹாச புராண) கருத்துக்களை ஆராய்ந்துதான் பீஷ்மர் ‘இந்த (ஜபம் துதி முதலான நாம ஸங்கீர்த்தனமாகிய) தர்மமே அனைத்து தர்மங்களிலும் மிக சிறந்தது’
என்று கூறுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக