ஞாயிறு, மார்ச் 25, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 15

அனைவருக்கும் ஹேவிளம்பி வருட ஸ்ரீராம நவமி மஹோத்ஸவ நல்வாழ்த்துக்கள்!!!

"கிமேகம் தைவதம் லோகே?", "உலகத்தின் ஒரே முழுமுதற் கடவுள் யார்?" என்ற முதல் கேள்விக்கு பீஷ்மாச்சார்யார் விடையளிக்கிறார். அதற்கு உரை அளிக்கையில் ஆசார்யாள் பகவானின் மேன்மை, அவரிடம் நாம் கொள்ளும் பக்தியின் ஏற்றம், நாம ஸங்கீர்த்தனத்தின் பெருமைகள் ஆகியவற்றை விளக்கும் பற்பல இதிஹாஸ, புராண, ஸ்ருதி மற்றும் ஸ்ம்ருதி வாக்கியங்களை மேற்கோள் காட்டுகிறார். அவற்றில் மேலும் சிலவற்றை இன்று காண்போம்.


அதிபாதக யுக்தோSபி த்யாயன்நிமிஷமச்யுதம் |
பூயஸ்தபஸ்வி பவதி பங்க்தி பாவன பாவன: ||
எப்பேர்பட்ட பாவங்களை செய்தவரும் ஒரு நிமிடம் (தூய மனதுடன்) பகவான் அச்யுதரை த்யானிப்பதின் மூலம் (தானும் புனிதமடைவதுடன்) மிகபெரிய தபஸ்விகளையும், வேதங்களை கற்ற சிறந்த பிராமணர்களையும் புனிதமாக்குகிறான்.

ஆலோட்ய ஸர்வசாஸ்த்ராணி விசார்ய ச புன: புன: |
இதமேகம் சுநிஷ்பன்னம் த்யேயோ நாராயண: ஸதா || (ஸ்ரீ லிங்க புராணம் 2.7.11)
ஸ்ரீ லிங்க புராணத்தில் கூறப்பட்டுள்ளது: அனைத்து சாஸ்திரங்களையும் கற்றறிந்து, மீண்டும் மீண்டும் விசாரம் செய்து பார்த்ததில், பகவான் ஸ்ரீமன் நாராயணனை அன்றாடம் த்யானிப்பதே அவை அனைத்தின் (அனைத்து சாஸ்த்ரங்களின்) முடிவான கருத்தாகும்.

ஹரிரேக: ஸதா த்யேயோ பவத்பி: சத்வ ஸம்ஸ்திதை: |
ஓமித்யேவம் ஸதா விப்ரா: படத த்யாத கேஶவம் || (ஸ்ரீ ஹரி வம்சம் 3.89.9)
ஸ்ரீ ஹரி வம்சத்தில் கூறப்பட்டுள்ளது: ஒ ப்ராம்மணோத்தமர்களே! நீங்கள் ஸத்வகுணத்தில் நிலைபெற்று பகவான் ஸ்ரீ ஹரியைமட்டும் த்யானியுங்கள். நீங்கள் எப்பொழுதும் ‘ஓம்’ (என்ற பிரணவ மந்திரத்தை) ஜபித்து ஸ்ரீ கேசவனை த்யானியுங்கள்.

பித்யதே ஹ்ருதயக்ரந்திஷ்சிந்த்யதே ஸர்வஷம்ஷயா|
க்ஷீயந்தே சாஸ்ய கர்மாணி தஸ்மின் த்ருஷ்டே பராவரே|| (முண்டக உபநிஶத் 2.2.8)
முண்டக உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளது: காரணமாகவும், கார்யமாகவும் விளங்குகின்ற அந்த ப்ரஹ்மத்தை அறிவதனால் இதயத்திலுள்ள அறியாமை என்னும் முடிச்சானது அவிழ்க்கப்படுகிறது. அனைத்து சந்தேகங்களும் நீக்கப்படுகின்றன. ஜீவாத்மாவின் அனைத்துக் கர்மங்களும் நாசமாகின்றன

யந்நாமகீர்த்தனம் பக்த்யா விலாபனமனுத்தமம் |
மைத்ரேயாசேஷபாபானாம் தாதூனாமிவ பாவக: || (ஸ்ரீ விஶ்ணு புராணம் 6.8.20)
ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: ஹே மைத்ரேயா!! நெருப்பானது எவ்வாறு தங்கம் முதலிய தாதுக்களில் உள்ள அசுத்தங்களை களைகிறதோ, அவ்வாறே, (அந்த ஸ்ரீமன் நாராயணனின்) அவரின் பக்தி பூர்வமான நாம சங்கீர்த்தனம் (அவ்வாறு துதிப்பவனின்) அனைத்து பாவங்களையும் சிறந்த முறையில் களைகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக