"கிமேகம் தைவதம் லோகே?", "உலகத்தின் ஒரே முழுமுதற் கடவுள் யார்?" என்ற முதல் கேள்விக்கு பீஷ்மாச்சார்யார் விடையளிக்கிறார். அதற்கு உரை அளிக்கையில் ஆசார்யாள் பகவானின் மேன்மை, அவரிடம் நாம் கொள்ளும் பக்தியின் ஏற்றம், நாம ஸங்கீர்த்தனத்தின் பெருமைகள் ஆகியவற்றை விளக்கும் பற்பல இதிஹாஸ, புராண, ஸ்ருதி மற்றும் ஸ்ம்ருதி வாக்கியங்களை மேற்கோள் காட்டுகிறார். அவற்றில் மேலும் சிலவற்றை இன்று காண்போம்.
ஷமாயாலம் ஜலம் வஹ்னேஸ்தமஸோ பாஸ்கரோதய: |
ஷாந்தி: கலௌ ஹ்யகௌகஸ்ய நாமசங்கீர்த்தனம் ஹரே: ||
நெருப்பை
அணைப்பதற்கு தண்ணீரைப் போலவும், இருளை போக்குவதில் சூரியனைப் போலவும்,
கலியுகத்தில் பாபத்திரள்களை ஸ்ரீ ஹரிநாமசங்கீர்த்தனம் போக்குகிறது.
ஹரேர் நாமைவ நாமைவ நாமைவ மம ஜீவனம் |
கலௌ
நாஸ்தயேவ நாஸ்தயேவ நாஸ்தயேவ கதிரன்யதா ||
(ஸ்ரீ ப்ருஹன்
நாரத புராணம் 1.41.15)
ஸ்ரீ ப்ருஹன் நாரத புராணத்தில் கூறப்பட்டுள்ளது: ஹரி நாமமே, ஹரி நாமமே, ஹரி நாமமே எனது
வாழ்க்கையாகும். இதை தவிர கலியுகத்தில் வேறு புகலிடம் இல்லவே இல்லை, இல்லவே இல்லை,
இல்லவே இல்லை.
ஸ்துத்வா விஶ்ணும் வாஸுதேவம் விபாபோ ஜாயதே நர: |
விஶ்ணோ: ஸம்பூஜநான்னித்யம் ஸர்வபாபம் ப்ரனஶ்யதி ||
எங்கும்
நிறைந்துள்ள பகவான் வாசுதேவனான ஸ்ரீ விஶ்ணுவை நித்யம் துதிப்பதால் ஒரு மனிதன்
அனைத்து பாவங்களிலிருந்தும் விடுபடுகின்றான். பகவான் ஸ்ரீ விஶ்ணுவை தினமும் பூஜை
செய்வதன் மூலம் அனைத்து பாவங்களும் அழிகின்றன.
ஸர்வதா ஸர்வகார்யேஷு நாஸ்தி தேஶாம் அமங்கலம் |
ஏஶாம்
ஹ்ருதிஸ்தோ பகவான் மங்களாயதனோ ஹரி: ||
(ஸ்ரீ ஸ்கந்த
புராணம் 5.3.157.7)
ஸ்ரீ ஸ்கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது: எவரொருவரின் ஹ்ருதயத்தில் அனைத்து
மங்களங்களுக்கும் இருப்பிடமான பகவான் ஸ்ரீ ஹரி வாசம் செய்கிறாரோ, அவருக்கு எந்த
ஒரு காரியத்திலும் (செயலிலும்) அமங்களங்கள் ஏற்படுவதில்லை.
நித்யம் ஸஞ்சிந்தயேத்தேவம் யோகயுக்தோ ஜனார்தனம் |
ஸாஸ்ய
மன்யே பரா ரக்ஷா கோ ஹினஸ்த்யச்யுதாஶ்ரயம் ||
மனதை
ஒருமுகபடுத்தி பகவான் ஸ்ரீ ஜனார்தனனை த்யானிக்கவேண்டும். இதுவே அனைவருக்கும்
மிகச்சிறந்த காப்பாகும் (ரக்ஷையாகும்). எவரொருவர் பகவான் ஸ்ரீ ஹரியை சரணடைந்துள்ளாரோ (பகவான் ஸ்ரீ ஹரியால் காக்கப்படுகிறாரோ), அவருக்கு யார் என்ன துன்பம் விளைவிக்க முடியும்?
கங்காஸ்நானஸஹஸ்ரேஶு புஶ்கர ஸ்நானகோடிஶு |
யத்
பாபம் விலயம் யாதி ஸ்ம்ருதே நஶ்யதி தத்தரௌ (தத் ஹரௌ) ||
(ஸ்ரீ கருட
புராணம் 1.230.18)
ஸ்ரீ கருட புராணத்தில் கூறப்பட்டுள்ளது: ஆயிரம் முறை கங்கையில் புனித நீராடுவதாலும், கோடி
முறை புஶ்கரத்தில் புனித நீராடுவதாலும் எவ்வளவு பாபங்கள் கழியுமோ, அவ்வளவு
பாபங்கள் பகவான் ஸ்ரீ ஹரியை நினைப்பதால் (த்யானிப்பதால்) அழிகிறது.
முஹுர்த்தமபி யோ த்யாயேந்நாராயணம் அனாமயம் |
ஸோSபி ஸித்திம் அவாப்னோதி கிம்புனஸ்தத்பராயண: ||
எவரொருவர்
அழிவற்ற பகவான் ஸ்ரீ நாராயணனை ஒரு முஹூர்த்த காலம் மட்டுமே தியானம் செய்கிறாரோ,
அவரும் அனைத்து ஸித்திகளையும் அடைகிறார்; பிறகு, பகவான் ஸ்ரீ நாராயணனை எப்பொழுதும்
சரணடைந்துள்ளாரோ அவரைப்பற்றி (அவர் அடையும் பலன்களைப்பற்றி) என்னவென்று கூறுவது?
ப்ராயச்சித்தான்யசேஶானி தப: கர்மாத்மகானி வை |
யானி தேஶாம் அஶேஶானாம் கிருஷ்ணானுஸ்மரணம் பரம் ||
(ஸ்ரீ விஶ்ணு புராணம் 2.6.39)
ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: தவம் மற்றும் கர்ம முறைகளாக கூறப்பட்டுள்ள அனைத்து
வகை ப்ராயசித்தங்களைக் காட்டிலும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணனை த்யானிப்பதே (நமது பாவங்கள் தொலைவதற்கான) மிகச்சிறந்த ப்ராயச்சித்தமாகும்.
(இந்த
ஸ்லோகம் ஸ்ரீ விஶ்ணுபுராணத்தின் மிகச்சிறந்த ஸ்லோகமாகக் கருதப்படுகிறது. இந்த
ஸ்லோகம் அனைவராலும் நித்ய பாராயணம் செய்யத்தக்கதாகும்).
கலிகல்மஶமத்யுக்ரம் நரகார்த்திப்ரதம் ந்ருணாம் |
ப்ரயாதி விலயம் ஸத்ய: ஸக்ருத்யத்ராபி ஸம்ஸ்ம்ருதே || (ஸ்ரீ விஶ்ணு
புராணம் 6.8.21)
ஸ்ரீ விஶ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது: இந்த கலியுகத்தில் நரகத்தை அடைவிக்கவல்ல
எப்பேர்பட்ட கொடிய தோஷங்களும், பகவான் ஸ்ரீ ஹரியை ஒரு முறை நினைப்பதின் (த்யானிப்பத்தின்) மூலம் அழிந்துவிடுகின்றன.
ஸக்ருத்ஸ்ம்ருதோSபி கோவிந்தோ ந்ருணாம் ஜன்மஷதை: க்ருதம் |
பாபராஶிம் தஹத்யாஶு தூலராஶிமிவானல: ||
எவ்வாறு
நெருப்பானது பஞ்சுப்பொதிகளை உடனே எரித்து விடுமோ, அவ்வாறே நூற்றுக்கணக்கான
ஜன்மங்களாய் சேர்த்துவைத்த பாபக்கூட்டங்கள் பகவான் ஸ்ரீ கோவிந்தனை ஒரு முறை
நினைப்பதின் (த்யானிப்பத்தின்) மூலம் எரிக்கப்படுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக