நமது அன்றாட பாராயண க்ரமத்தில் "ஸ்ரீவைசம்பாயன உவாச" விற்கு முன்பு வரும் த்யான ஸ்லோகங்களும் அதன் பொருளும்.
ஶுக்லாம் பரதரம் விஶ்ணும் ஸஶிவர்ணம் சதுர்புஜம் |
ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப ஶாந்தயே ||
வெண்மையான (தூய்மையான) ஆடை
தரித்தவரும், எங்கும் நிறைந்திருப்பவரும், வெண்மதியைப் போன்ற நிறமுடையவரும், நான்கு கரங்கள் உடையவரும்,
புன்சிரிப்புடன் கூடிய மலர்ந்த முகத்தை உடையவருமான பகவானை நமது துயர்களைத்
தீர்க்க தியானிப்போம்.
வ்யாஸம் வஶிஶ்ட நப்தாரம் ஷக்தே பௌத்ரம் அகல்மஷம் |
பராஶராத்மஜம் வந்தே சுக தாதம் தபோ நிதிம் ||
வஶிஶ்டரின்
கொள்ளுப்பேரரும், ஷக்தியின்
பேரரும், பராஶரரின் புதல்வரும்,
சுகரின் தந்தையும், மாசுகளற்றவரும், தவத்தில் சிறந்தவருமான முனிவர் வியாசரை வணங்குகிறேன்.
வ்யாஸாய விஶ்ணு ரூபாய வ்யாஸ ரூபாய விஶ்ணவே |
நமோ வை ப்ரஹ்மநிதயே வாஶிஶ்டாய நமோ நம: ||
வியாஸரே
விஶ்ணு
வடிவானவர்; அந்த பகவான் விஶ்ணுவே வ்யாஸராக
அவதரித்தார். பரப்ரஹ்மத்தை உள்ளபடி அறிந்தவரும், அந்த பரப்ரஹ்மமே ஒரு நிதியாய் திரண்டார் போன்ற வடிவினரும், வஶிஶ்டரின் குலத்திலே தோன்றிய வியாஸரை நான் மீண்டும் மீண்டும்
வணங்குகிறேன்.
அவிகாராய ஶுத்தாய நித்யாய பரமாத்மனே |
ஸதைக ரூப ரூபாய விஶ்ணவே ஸர்வ ஜிஶ்ணவே ||
எவ்வித
மாறுபாடுகளும் அற்றவராய், தூய்மையானவராய்,
என்றும் (எக்காலத்தும்) நீங்காது
இருப்பவராய், எப்பொழுதும் (மாறுபாடில்லாத)
ஒரே வடிவத்தை உடையவராய், அனைத்தையும்
வெல்பவரான அந்த பரமாத்மா விஶ்ணுவை (த்யானிக்கின்றேன்).
யஸ்ய ஸ்மரண மாத்ரேன ஜன்ம ஸம்ஸார பந்தனாத் |
விமுச்யதே நமஸ்தஸ்மை விஶ்ணவே ப்ரப விஶ்ணவே ||
ஓம் நமோ விஶ்ணவே ப்ரப விஶ்ணவே
எவரை நினைத்த
மாத்திரத்தில் பிறப்பு இறப்பென்னும் இந்த தளைகளிலிருந்து ஒருவர் விடுபடுகிறாரோ, அந்த பகவான் விஶ்ணுவிற்கு எனது வணக்கங்கள். அந்த பகவான் விஶ்ணுவிற்கு மீண்டும் மீண்டும் எனது வணக்கங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக