சனி, மார்ச் 17, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 10


உத்தரேன ஸ்லோகேன சதுர்த்த: ப்ரஶ்ன: சமாதீயதே
அடுத்த ஸ்லோகத்தால் நான்காவது கேள்விக்கு விடையளிக்கப்படுகிறது.

தமேவ சார்ச்சயன்நித்யம் பக்த்யா புருஶமவ்யயம் |
த்யாயம்ஸ்துவன்னமஸ்யம்ச்ச யஜமானஸ்தமேவ ச ||
அந்த பிறப்பு இறப்பற்ற பரம புருஶனை எப்பொழுதும் உள்ளும், புறமும், பூஜிப்பவனும், முக்கரணங்களாகிய வாக்கு (துதித்தல்), மனம் (தியானித்தல்) மற்றும் உடலால் (நமஸ்கரித்தல்) வணங்குபவனும் அனைத்து துயரங்களிலிருந்தும் விடுபடுகின்றான்.

தமேவ சார்ச்சயன் பாஹ்யார்ச்சனம் குர்வன் புறமாலும் (வாக்கு மற்றும் உடலாலும்) பூஜிப்பதாலும்

நித்யம் சர்வேஷு காலேஷு அனைத்து காலங்களிலும் 

பக்திர்பஜனம் தாத்பர்யம் தயா பக்த்யா பக்தி நிறைந்து

புருஶமவ்யயம் விநாஷக்ரியாரஹிதம் அந்த பிறப்பு, இறப்பு மற்றும் அழிவற்ற பரமபுருஶனை

தமேவ ச த்யாயன் ஆப்யந்தரார்சனம் குர்வன் உள்ளாலும் (மனதாலும்) அவரை த்யானிப்பதாலும்

ஸ்துவன் பூர்வோக்தேன முன்னர் கூறிய (சஹஸ்ரநாமம் போன்ற துதிகளால்) 

நமஸ்யன் நமஸ்காரம் குர்வன், பூஜாஷேஷ பூதமுபயம் ஸ்துதிநமஸ்காரலக்ஷணம் முறையான பூஜையால் துதிப்பதாலும் நமஸ்கரிப்பதாலும் 

யஜமான: பூஜக: ஃபலபோக்தா அந்த பூஜையின் பலனை அனுபவிக்கும் எஜமானன் (பூஜிப்பவன்) அனைத்து துயரங்களிலிருந்தும் விடுபடுகின்றான்

அதவா, அர்ச்சயன்னித்யனேனோபயவிதமர்ச்சனமுச்யதே அல்லது இப்படியும் நாம் புரிந்து கொள்ளலாம்: ‘அர்ச்சயன்’ என்ற சொல்லால் உள்ளும் (மனதாலும்) புறமும் (வாக்கு, உடலாலும்) செய்யப்படும் இருவகை அர்ச்சனைகள் குறிக்கப்படுகிறது 

த்யாயம் ஸ்துவன்னமஸ்யம்ஸ்ச்சேத்யனேன மானசம் வாசிகம் காயிகம் சோச்யதே  ‘த்யாயன்’, ‘ஸ்துவன்’, ‘நமஸ்யம்’ இவற்றால் முக்கரணங்களாகிய மனம், வாக்கு, உடலால் செய்யப்படும் பூஜைகள் குறிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக