திங்கள், மார்ச் 05, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 3


வைசம்பாயனோ ஜனமேஜயமுவாச:
ஶ்ருத்வா தர்மானஷேஷேன பாவனானி ச ஸர்வஶ: |
யுதிஷ்டிர: ஷாந்தனவம் புனரேவாப்யபாஷத||
  
தர்மான் அப்யுதய நி:ஷ்ரேயஸோத்பத்தி ஹேதுபூதான் சோதனாலக்ஷணான் அனைத்து மங்களங்களையும் அதிகரிக்கவல்லதும்  அஷேஷேன கார்த்ஸ்ன்யேன முழுமையாக (ஒன்றும் குறைவின்றி) பாவனானி பாபக்ஷயகரானி தர்மரஹஸ்யானி பவித்ரமானதும் பாவங்களை அழிக்கவல்லதுமான தர்ம ரஹஸ்யங்களை ச ஸர்வஷ ஸர்வப்ரகாரை: அனைத்தும் ஷ்ருத்வா யுதிஷ்டிரோ தர்மபுத்ர: தர்மபுத்ரனான யுதிஷ்டிரன் ஷாந்தனவ ஷந்தனுசுதம் பீஷ்மம் ஸகல புருஷார்த்த சாதனம் ஸுக ஸம்பாத்யம் அல்ப ப்ரயாசம் அனல்ப ஃபலம் அனுக்தமிதி க்ருத்வா ஷந்தனு புத்திரரான பீஷ்மரிடம் கேட்டறிந்த பின்பும், அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய அடையத்தகுந்த அனைத்தையும் அளிக்கவல்லதும் (இவ்வுலக மற்றும் அவ்வுலக) இன்பத்தை தரவல்லதும் எளிமையானதும் ஆனால் மிகச்சிறந்த பலன்களை கொடுக்கவல்லதுமான எந்த ஒரு உபாயத்தையும் பீஷ்மர் கூறவில்லை என்று கருதியதால் புன: பூய மறுபடியும் (யுதிஷ்டிரன்) ஏவ அப்ய பாஷத ப்ரஶ்னம் க்ருதவான் அவரிடம் (பீஷ்மரிடம்) கேள்விகள் கேட்டார் ||1||


வைசம்பாயனர் ஜனமேஜயனிடம் கூறுகிறார்:
கேட்பவரின் மனதை தூய்மை படுத்தவல்லதும், பாவங்களை போக்க வல்லதுமான அனைத்து தர்மங்களையும் முழுமையாக (பீஷ்மரிடமிருந்து) கேட்டறிந்த பின்னரும், யுதிஷ்டிரர் மீண்டும் ஷந்தனுவின் புதல்வரிடம் (பீஷ்மரிடம், பின்வருமாறு) கேள்விகளைக் கேட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக