வியாழன், மார்ச் 22, 2018

ஸ்ரீவிஶ்ணு ஸஹஸ்ரநாம பாஶ்யம் - ஸ்ரீஆதிஶங்கர பகவத்பாதர் அருளியது - பாகம் 13


த்விதீயம் பிரஶ்னம் ஸமாதத்தே (கிம்வாப்யேகம் பாராயணம்)  –
இப்பொழுது, "ஒரே ஒப்புயர்வற்ற இலக்கானவர் யார்? அதாவது இந்த உலகத்தின் (உலக மக்களின்) ஒரே இலக்கு – அடையப்படக்கூடிய இடம் / இலக்கு யார்?" என்ற இரண்டாவது கேள்விக்கு ஸ்ரீபீஶ்மாச்சார்யார் விடையளிக்கிறார்.
  
பரமம் யோ மஹத்தேஜ: பரமம் யோ மஹத் தப: |
பரமம் யோ மஹத் ப்ரஹ்ம பரமம் ய: பராயணம் ||

எவரொருவர் அனைத்திலும் உத்தமமான (ஞான) ஒளி மயமானவரோ, எவரொருவர் அனைவரையும் ஆள்பவரோ, எவரொருவர் பரப்ரஹ்மமோ, அவரே பரமமான இலக்காவார்.

(எவரொருவர்) பரமம் ப்ரக்ருஷ்டம் உத்தமம்
மஹத் ப்ருஹத் மிகப்பெரிய (அல்லது மிகச்சிறந்த
தேஜ: சைதன்யலக்ஷணம் ஸர்வாவபாசகம் ஞான ஒளி மயமான(வரோ),

யேன ஸூர்யஸ்தபதி தேஜசேத்த: | (தைத்ரிய பிராஹ்மணம் 3.12.9)
எவருடைய ஒளியினால் பிரகாசிக்கப்பட்டு சூரியன் ஒளிவிடுகின்றானோ

தத்தேவோ ஜ்யோதிஶாம் ஜ்யோதி: (ப்ரஹதாரண்யக உபநிஶத் 4.4.16)
அவரை தேவர்கள் ஒளிகளுக்கெல்லாம் ஒளியாக (வணங்குகிறார்கள்)

ந தத்ர ஸூர்யோ பாதி ந சந்திரதாரகம் (முண்டக உபநிஶத் 2.2.10)
அந்த ப்ரஹ்மத்தை சூரியனால் விளக்க இயலாது (சூரிய ஒளி கொண்டு அறிய இயலாது) நிலவும், நக்ஷத்திரங்களும் விளக்க இயலாது.

இத்யாதி ஶ்ருதே இவ்வாறு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் வாக்யங்களாலும் 

யதாதித்யகதம் தேஜ: (ஸ்ரீமத் பகவத்கீதை 15.12)
சூரியனிடமிருந்து உலக முழுமைக்கும் சுடர் கொளுத்தும் ஒளியும்

இத்யாதி ஸ்ம்ருதேஶ்ஸ்இது போன்ற ஸ்ம்ருதி வாக்கியங்களாலும் இது விளங்குகிறது.

பரமம் தப: தபத ஆக்ஞாபயதீதி தப: எவரொருவர் அனைவரிலும் சிறந்த ஆணை செலுத்துபவரோ (அல்லது ஆள்பவரோ),

ய இமம் ச லோகம் பரம் ச லோக(க்ம்) ர்வாணி ச பூதனை யோSந்தரோ யமயதி (ப்ருஹதாரண்யக உபநிஶத் 3.7.1)
எவரொருவர் இந்த உலகத்திலும், பரலோகத்திலும் மற்றும் அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் அந்தர்யாமியாக இருந்தது ஆட்சி செலுத்துகிறாரோ

இத்யந்தர்யாமி ப்ராஹ்மணே ர்வ நியந்த்ருத்வம் ஶ்ரூயதே இந்த ஸ்ருதி வாக்கியத்தின் மூலம் அந்தர்யாமி ப்ராஹ்மனத்தில் அவர் அனைவரையும் ஆட்சி செய்பவர் என்பது கூறப்பட்டுள்ளது.

பீஶாஸ்மாத்வாத: பவதே பீஶோதேதி ஸூர்ய: | பீஶாஸ்மாதக்னிஶ்ஸ்சேந்த்ரஸ்ச ம்ருத்யுர்தாவதி பஞ்சம: (தைத்ரிய உபநிஶத் 2.8.1)

இத்யாதி தைத்ரியகே தைத்ரிய உபநிஶத்தில் கூறப்பட்டுள்ளபடி
இவரிடம் உள்ள பயத்தினாலேயே (இவரது ஆணைக்குக் கட்டுபட்டே) காற்று வீசுகிறது, இவரிடம் உள்ள பயத்தினாலேயே சூர்யன் உதிக்கிறது, இவரிடம் உள்ள பயத்தினாலேயே அக்னி, இந்திரன் மற்றும் ஐந்தாவதுதான ம்ருத்யு தேவதை ஆகியவர்கள் (தத்தம் வேலைகளை செய்ய) ஓடுகிறார்கள்.

தபதீஶ்ட இதி வா தப: தஸ்யைஶ்வர்யம்மனவச்சின்னமிதி மஹத்வம் அனைவரையும் ‘தபிக்கிறார்’ அல்லது ஆள்கிறார் எனவே அவரை ‘தப’ என்று அழைக்கிறார்கள். மற்றும் அவரது ஐஸ்வர்யமானது (சக்தியானது) அளவிடமுடியாதது எனவே அவர் ‘மஹத்’, மிகப்பெரியவர் என்று அழைக்கப்படுகிறார்.

ஸர்வேஶ்வர: (மாண்டுக்ய உபநிஶத் 6) அவரே ஸர்வேஸ்வரன்

இத்யாதி ஶ்ருதே இதுபோன்ற வேத வாக்கியங்களிலும் இதுவே கூறப்பட்டுள்ளது.

(அவர்) பரமம் ஸத்யாதிலக்ஷணம் ப்ரஹ்ம ஸத்யம் முதலான (குணங்களினால்) விளங்குவதினால் ‘ப்ரஹ்மம்’ என்று அழைக்கப்படுகிறார் 
மஹநீயதா மஹத் பரமம் ப்ரக்ருஷ்டம் புனராவ்ருத்திஷங்காரஹிதம் தனித்தன்மை வாய்ந்ததும் (அங்கே அடைந்தபின் இந்த பூமியில் மீண்டும் பிறப்பெடுத்து) திரும்பிவருதல் முதலிய சந்தேகங்கள் அற்றதும் 
பராயணம் பரம் அயனம் பராயணம் உன்னதமான இருப்பிடமானதால் (அதற்கு) ‘பராயணம்’ என்று பெயர்.

பரமக்ராஹனாத் ஸர்வத்ர அபரம் தேஜ: ஆதித்யாதிகம் வ்யாவர்த்யதே| ஸர்வத்ர யோ தேவ இதி விஷேஷ்யதே ச - இந்த ஸ்லோகத்தில் எல்லாவிடத்திலும்  ‘பரம’ என்ற சொல் உபயோகிக்கப்பட்டுள்ளதால் சூர்யன் முதலிய வேறு ஒளிமயமானவைகள் ஒதுக்கப்படுகின்றன. எல்லாவிடத்திலும் (நாராயணனான) அந்த கடவுளின் சிறப்பு கூறப்பட்டுள்ளது –

யோ தேவ: பரமம் தேஜ: பரமம் தப: பரமம் ப்ரஹ்ம பரமம் பராயணம் ஸ ஏகம் ஸர்வபூதானாம் பராயணமிதி வாக்யார்த்த:
எந்த கடவுள் மிகச்சிறந்த ஒளியானவரோ, மிகச்சிறந்த ஆளுனரோ, மிகச்சிறந்த ப்ரஹ்மமானவரோ மற்றும் மிகச்சிறந்த இலக்கனவரோ (இருப்பிடமானவரோ) அவரொருவரே அனைத்து ஜீவராசிகளும் சென்றடையும் சிறந்த இருப்பிடமாவார். இந்த ஸ்லோகத்தின் அர்த்தம் இதுவேயாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக